000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a நரசிம்மர் |
300 | : | _ _ |a வைணவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான மனித உடலும் சிங்க முகமுமாய் விளங்கும் நரசிம்மர் இரண்யகசிபுவை அழிக்கும் காட்சி |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a புள்ளமங்கை திருக்கோயிலின் கருவறை விமானத்தின் இரண்டாம் தளத்தின் மேற்குப் பகுதியில் உள்ள சாலைக் கோட்டத்தில் இரண்டு விமானந்தாங்கிகள் இருபுறமும் உள்ளனர். நடுவில் உள்ள கோட்டத்தின் பீடத்தில் நரசிம்மர் அமர்ந்த நிலையில் இரண்யகசிபுவை இறுக பிடித்துள்ளார். வலது காலை ஊன்றிக் கொண்டு, இடது காலால் இரண்யனை வளைத்து இறுக்கியபடி இரண்டு கைகளாலும் அவனைத் தழுவி, மார்போடு அணைத்துள்ளார். நரசிம்மரின் மார்போடு பொருந்திய இரண்யகசிபு அவர் முகத்தை அண்ணாந்து நோக்குகிறான். சிங்க முகரின் கால்களுக்கு இடையே அவன் ஏகபாதத்தில் அவர் மடியில் அமரும் நிலையில் நிற்கிறான். சிங்கருக்கு பிடரிமயிர் தோள்களின் இருபுறமும் முன்விழ, தலையில் உச்சிக் கொண்டை போன்று உள்ளது. வாயைப் பிளந்த நிலையில், சாந்தபாவனையோடு கழுத்தணி, கையணிகளோடும். முடிச்சோடு கூடிய அரையாடை உடுத்தியுள்ளார். இரண்யகசிபு பிரமித்து திகைத்த பாவனையில் சிங்கரை நிமிர்ந்து தலையை உயர்த்தி அண்ணாந்து பார்க்கிறான். அவன் நீள்காதுகளில் அணிந்துள்ள வளையங்கள் தோளைத் தொடுகிறது. அரையாடை அணிந்துள்ளான். உடலில் அணிகள் காட்டப்பட்டுள்ளன. |
653 | : | _ _ |a நரசிம்மர், நரசிங்கர், சிங்கமுகன், சிங்கபிரான், சிங்கர், இரண்யகசிபு, நரசிம்மாவதாரம், முதலாம் பராந்தக சோழன், புள்ளமங்கை, பசுபதி கோயில், பராந்தகன் கற்றளி, முற்காலச் சோழர்கலைப்பாணி, சோழர் கலைகள், தஞ்சாவூர் |
710 | : | _ _ |a முனைவர் கோ. சசிகலா |
752 | : | _ _ |a புள்ளமங்கை |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c பசுபதி கோயில் |d தஞ்சாவூர் |f பாபநாசம் |
905 | : | _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் பராந்தக சோழன் |
914 | : | _ _ |a 10.89727308 |
915 | : | _ _ |a 79.17853117 |
995 | : | _ _ |a TVA_SCL_000139 |
barcode | : | TVA_SCL_000139 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover images TVA_SCL_000139_புள்ளமங்கை_நரசிம்மர்-001.jpg | : |
![]() |
Primary File | : |