| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a விஷ்ணு |
| 300 | : | _ _ |a வைணவம் |
| 340 | : | _ _ |a கருங்கல் |
| 500 | : | _ _ |a வைகுண்டத்தில் பெருமாள் வீற்றிருக்கும் காட்சி, பெருமாளின் அமர்ந்த கோலம் |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a புள்ளமங்கை திருக்கோயிலின் கருவறை விமானத்தின் முதல் தளத்தின் மேற்குப் பகுதியில் உள்ள சாலைக் கோட்டத்தில் இரண்டு விமானந் தாங்கிகளுக்கு நடுவில் உள்ள கோட்டத்தில் விஷ்ணு, பீடம் போன்று அமைந்த ஆதிசேஷன் மேல் அமர்ந்த நிலையில் உள்ளார். இக்கோலம் வைகுண்ட நாதர் திருக்கோலமாகும். ஐந்து தலையையுடைய ஆதிசேஷன் அவரின் தலைக்கு குடையாக நிற்க, அதற்கு மேலே இரு சாமரம் ஏந்திய கந்தர்வர்கள் உள்ளனர். விஷ்ணு உத்குடிகாசனத்தில் உள்ளார். நான்கு திருக்கைகளில் மேலிரு கைகளில் வலதில் பிரயோகச் சக்கரமும், இடதில் சங்கும் தாங்கியுள்ளார். வலது முன்கையை ஊன்றியபடியும், இடது முன்கை மடக்கிய இடதுமுழங்காலில் வைத்துள்ளார். இக் கையின் நிலை பாதி சிதைந்துள்ளது. கிரீட மகுடராய், தோள்வரை நீண்டு தொங்கும் காதுகளில் வளையங்கள் அணிந்தும், கணுக்கால் வரை நீண்ட பட்டாடை அணிந்தும், கழுத்தில் அணிகள் விளங்க, கைகளில் தோள்மாலை, கேயூரம், முன்வளைகள் அணி செய்ய, மார்பில் (யக்ஞோப வீதம்) முப்புரிநூல், வயிற்றில் உதரபந்தம் இவற்றுடன் சர்வலங்கார பூசிதராய் விளங்குகிறார். |
| 653 | : | _ _ |a விஷ்ணு, திருமால், திருமால் அமர்ந்த கோலம், பெருமாள், வைகுண்ட நாதர், வைகுண்டப் பெருமாள், புள்ளமங்கை, பசுபதி கோயில், பராந்தகன் கற்றளி, முற்காலச் சோழர்கலைப்பாணி, சோழர் கலைகள், தஞ்சாவூர் |
| 710 | : | _ _ |a முனைவர் கோ. சசிகலா |
| 752 | : | _ _ |a புள்ளமங்கை |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c பசுபதி கோயில் |d தஞ்சாவூர் |f பாபநாசம் |
| 905 | : | _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் பராந்தக சோழன் |
| 914 | : | _ _ |a 10.89727308 |
| 915 | : | _ _ |a 79.17853117 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000137 |
| barcode | : | TVA_SCL_000137 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |