| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a பிட்சாடனர் |
| 300 | : | _ _ |a சைவம் |
| 340 | : | _ _ |a கருங்கல் |
| 500 | : | _ _ |a தாருகாவனத்து முனிவர்களின் ஆணவ மலத்தை அழிக்க வந்த சிவபெருமானின் பிட்சாடனர் திருக்கோலம் |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a பிட்சாடனரின் படிமக்கலைக் கூறுகள் காசியப சில்பசாஸ்திரம், சகளாதிகாரம், ஸ்ரீதத்துவநிதி அம்சுமத்பேதாகமம், காமிகம், காரணாகமம், சில்ப ரத்தினம் ஆகியவற்றில் விளக்கப்பட்டுள்ளன. அம்சுமத்பேதாகமம், இவரைப் பிரம்மனையும், விஸ்வக்சேனரையும் (விஷ்ணுவின் அம்சம்) கொன்றவர் என்று கூறுகிறது. விஸ்வக்சேனரின் எலும்புகளைக் கோர்த்து தோளில் சார்த்தியவாறு ஸ்தானக நிலையில் வலது கால் முன்னோக்கி இருப்பது போல அமைந்திருப்பார். பஞ்சரக் கோட்டத்தில் பிட்சாடனர் நிற்கிறார். இச்சிற்பம் காஞ்சி கைலாசநாதர் கோயிலில் கருவறைக் கோட்டத்தில் உள்ள பிட்சாடனரைப் போன்ற உருவமைதியில் உள்ளது. கால்களில் பெரிய செருப்புகளுடன் நடக்கும் நிலையில் திரும்பிப் பார்ப்பது போல அதன் அழகு உள்ளது. அரையாடை அணிந்துள்ளார். வலதுகையில் வலது தோளில் சாத்திய நீண்ட சூலம் உள்ளது. இடது கை அடையாளங் காணவியலா ஒன்றின் மேல் ஊன்றியுள்ளார். கைகளில் வளைகள் காட்டப்பட்டுள்ளன. வயிற்றில் உதரபந்தம் பட்டையாக உள்ளது. மார்பில் அணிகள் உள்ளன. தோள்வரை தொங்கும் நீள்காதுகளில் குண்டலங்கள் அணிந்து விடைத்த மூக்கும். புன்னகை முகமுமாய், சடைமுடியுடன் காணப்படுகிறார். |
| 653 | : | _ _ |a பிட்சாடனர், பிக்சாடனர், பிச்சையேற்கும் பெருமான், பலி தேர்ந்த வரலாறு, பலி தேர்ந்த பெருமான், பிச்சதேவர், புள்ளமங்கை, பசுபதி கோயில், பராந்தகன் கற்றளி, முற்காலச் சோழர்கலைப்பாணி, சோழர் கலைகள், தஞ்சாவூர் |
| 710 | : | _ _ |a முனைவர் கோ. சசிகலா |
| 752 | : | _ _ |a புள்ளமங்கை |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c பசுபதி கோயில் |d தஞ்சாவூர் |f பாபநாசம் |
| 905 | : | _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் பராந்தக சோழன் |
| 914 | : | _ _ |a 10.89727308 |
| 915 | : | _ _ |a 79.17853117 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000135 |
| barcode | : | TVA_SCL_000135 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |