000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a நந்தி |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a சிவபெருமானின் வாகனமாயும், கைலாயத்தின் காவலுமாய் அமைந்துள்ள நந்தி |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a தருமநெறியில் நின்ற, சாஸ்திர ஞானம் மிகுந்த ஷிலாதர் என்ற முனிவர் ஆயிரம் ஆண்டுகள் சிவனை நோக்கித் தவம் செய்ய சிவபெருமான் அவர் முன் தோன்றி வேண்டிய வரம் யாது? என்று கேட்க, அம்முனிவர் தாயிடம் பிறக்காத ஒரு புதல்வனைத் தனக்கு அருளுமாறு வேண்டினார். சிவன் அவ்வாறே வரம் அளித்தார். ஸ்ரீசைலம் மலையில் சிலாதர் வசித்தாக கூறப்படுகிறது. ஷிலாதர் நிலத்தை உழுது கொண்டிருந்தபோது ஓர் அழகிய பையன் ஏரியின் மீது திடீரென்று தோன்றினான். அவனைச் சுற்றி நான்கு பக்கமும் பேரொளி வீசியது. அவன் ஷிலாதரைத் தந்தையே என்று கூப்பிட்டான். அவனுக்கு நந்தி எனப் பெயரிடப்பட்டது. ஷிலாதர் தன்னுடைய காளைகளின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தமையால் நந்தி தேவரும் காளையைப் போலவே பிறந்தார். அவன் கல்வி கற்க ஆரம்பித்து சகல சாஸ்திர சம்பன்னன் ஆனான். நந்தி சிவதரிசனம் பெறவும், தான் மரணமின்றி இருக்கவும் சமுத்திர தீர்த்தத்தில் ஓரிடத்தில் கோடி சிவ நாமம் ஜபித்துத் தவம் செய்தான். சிவபெருமான் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்க இன்னும் கோடி சிவநாமம் ஜபிக்க ஆயுள் வேண்டும் என்றான். அவ்வாறே வரம் அளித்தார் பரமசிவன். இம்மாதிரி மும்முறை நிகழ கடைசியில் சிவபெருமான் தோன்றி சிவநாம ஜபம் போதும். மேலும் தவம் வேண்டாம். உனக்கு மரணம் ஏற்படாது. நீ ஒரு கணநாதன் ஆகி கணங்களுக்கெல்லாம் நாயகனாக விளங்குவாய், என்னை விட்டுப் பிரியாத தோழனாவாய் என்று வரமளித்தார். மருத்தின் புதல்வியாகிய சுயாஷாவை நந்திக்குச் சிவபெருமான் மணம் செய்து வைத்தார். நந்தி எப்போதும் சிவ சந்நிதியில் பரமனைப் பிரியாமல் இருந்தார். புள்ளமங்கை கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் நந்தி சிற்பம் உள்ளது. கால்களை மடக்கி நேரான பார்வையுடன், அமர்வுடன் உள்ள நந்தி பெரிய திமிலைப் பெற்றுள்ளது. கழுத்தில் மணிகள் தொங்குகின்றன. நெரித்த புருவமும், விடைத்த சிறிய காதுகளும் உள்ளன. |
653 | : | _ _ |a நந்தி, நந்தியெம்பெருமான், நந்திகேசுவரர், விடை, விடை வாகனம், காளை வாகனம், புள்ளமங்கை, பசுபதி கோயில், பராந்தகன் கற்றளி, முற்காலச் சோழர்கலைப்பாணி, சோழர் கலைகள் |
710 | : | _ _ |a முனைவர் கோ. சசிகலா |
752 | : | _ _ |a புள்ளமங்கை |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c பசுபதி கோயில் |d தஞ்சாவூர் |f பாபநாசம் |
905 | : | _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் பராந்தக சோழன் |
914 | : | _ _ |a 10.89727308 |
915 | : | _ _ |a 79.17853117 |
995 | : | _ _ |a TVA_SCL_000133 |
barcode | : | TVA_SCL_000133 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover images TVA_SCL_000133_புள்ளமங்கை_நந்தி-001.jpg | : |
![]() |
Primary File | : |