000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a துவாரபாலகர்கள் |
300 | : | _ _ |a பிற வகை |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a இறைவனின் கருவறை நுழைவு வாயிலில் நிற்கும் துவாரபாலகர்கள் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a அர்த்தமண்டப நுழைவு வாயிலின் இருபுறமும் துவாரபாலகர் சிற்பங்கள் காணப்படுகின்றன. இரு சிற்பமும் ஒன்றுக்கொன்று தம்முள் வேறுபட்ட உருவமைதியில் காட்சியளிக்கின்றன. இடது புறம் உள்ள துவாரபாலகர் நீண்ட கிரீட மகுடமுடன், முகப்புடன் உள்ள நெற்றிப்பட்டை அணிந்துள்ளார். அர்த்தஸ்வஸ்திகாசனத்தில் நிற்கும் இந்த வாயிற்காவலர் இடதுகையை தண்டு ஒன்றின் மேல் தாங்கியாக வைத்துள்ளார். வலது கை சூசி முத்திரையில் உள்ளது. நீள் காதுகளில் பெரிய வளையங்களும், கழுத்தில் கண்டிகை, சரப்பளி, கைகளில் தோள்மாலை, கேயூரம், முன் வளைகள், வயிற்றில் உதரபந்தம் போன்ற அணிகள் காணப்படுகின்றன. யக்ஞோபவீதம் (முப்புரிநூல்) இடைவரை சென்று உடலின் பின்புறம் செல்கிறது. அது சங்கிலி போன்ற அமைப்பில் உள்ளது. வாயின் இருபுறமும் நீட்டிக் கொண்டிருக்கும் கோரப் பற்களுடன் இருந்தாலும் முகத்தில் சாந்தம் தவழ்கிறது. அரையாடை அணிந்துள்ள இவரின் ஆடைகள் உடலின் முன்புறம் விழுந்துள்ளது. நீள்வட்ட முகத்தோற்றம் உடையவராய், மூடிய விழிகளுடன், நெற்றியில் கண்ணுடன் காட்சியளிக்கிறார். வலது புறம் உள்ள துவாரபாலகர் உடலைத் தெற்கு நோக்கித் திருப்பி தலையை கிழக்குபுறம் நோக்கியுள்ளார். வலது காலை நன்கு ஊன்றி, இடது காலை குறுக்காக மடித்து, உருள் தடியின் கீழ்ப்புறம் வைத்துள்ளார். இடது கையை கால் போன்றே உடலின் குறுக்கே வைத்து உருள் தடியின் மேலே தாங்கியுள்ளார். வலது கை விஸ்மய முத்திரையைக் காட்டுகிறது. நெடிய கரண்ட மகுடராய், நெற்றியில் முகப்புடன் கூடிய பட்டை அணிந்து, நீள் காதுகளில் பெரிய வளையங்களைக் கொண்டுள்ளார். நெற்றியில் கண் உள்ளது. அரையாடை அணிந்துள்ள இந்த வாயிற்காவலரின் கழுத்தணிகளும், கையணிகளும் முன்னவரைப் போன்றல்லாமல் வேறுபட்டுள்ளது. முகத்தில் மீசை போன்று தெரிகிறது. நீள்வட்ட முகத்தில் விழிகள் மூடியுள்ளன. |
653 | : | _ _ |a துவாரபாலகர்கள், வாயிற் காவலர், வாயிற் கணங்கள், தஞ்சாவூர், புள்ளமங்கை, பராந்தகன் கற்றளி, புள்ளமங்கலம், சோழர் கலைப்பாணி, சோழர் கலைகள், முற்காலச் சோழர் கலைப்பாணி, முதலாம் பராந்தகச் சோழன் |
710 | : | _ _ |a முனைவர் கோ. சசிகலா |
752 | : | _ _ |a புள்ளமங்கை |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c பசுபதி கோயில் |d தஞ்சாவூர் |f பாபநாசம் |
905 | : | _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் பராந்தக சோழன் |
914 | : | _ _ |a 10.89727308 |
915 | : | _ _ |a 79.17853117 |
995 | : | _ _ |a TVA_SCL_000131 |
barcode | : | TVA_SCL_000131 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover images TVA_SCL_000131_புள்ளமங்கை_துவாரபாலகர்கள்-001.jpg | : |
![]() |
Primary File | : |