| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a பூலாங்குறிச்சி |
| 520 | : | _ _ |a தமிழ்நாட்டில் கிடைத்திருக்கும் கல்வெட்டுகளில் நிலம் தொடர்பான செய்திகளைக்கொண்ட தொன்மையான கல்வெட்டு பூலாங்குறிச்சிக் கல்வெட்டுதான். தமிழ்நாட்டில் இதுவரை கிடைத்திருக்கும் பழமையான கல்வெட்டுகளிலேயே பெரிய கல்வெட்டும் இது தான் 45 அடி நீளமும் 6 அடி உயரமும் கொண்டு மூன்று பகுதிகளாக அக் கல்வெட்டுகள் உள்ளன. நிலத்தைப் பராமரிப்பது தொடர்பாகவும் அதன் உரிமை தொடர்பாகவும் இதில் பல்வேறு செய்திகள் இருக்கின்றன. இப்பகுதியில் மொத்தம் 3 கல்வெட்டுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.அதில் ஒரு கல்வெட்டு சேந்தன் கூற்றன் என்ற அரசன் ஆட்சியில் நூற்றுத்தொண்ணூற்றிரண்டாம் ஆண்டில் பதிக்கப்பட்டது. வேள் மருகண் மகனும் கடலகப் பெரும் படைத்தலைவன் என்ற பட்டத்தைப் பெற்றவமான எங்குமான் என்பவர் இரு தேவகுலங்களும், ஒரு கோட்டமும் எழுப்பிய செய்தியைக் கூறுகிறது. இக்கல்வெட்டில் அத்திகோயத்தார், உள்மனையார், நான்கு வகைத் திணைகள் ஆகியோர் இம்மூன்று ப்ரிவினரும் இப்பகுதியில் அமைக்கப்பட்ட சமணக் கோயில்களுக்கு(கோட்டம்) பாதுகாவல் ஏற்றுக்கொண்ட செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டில் மன்னர்களின் பெயர்களான சேந்தன், கூற்றன் ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் களப்பிரர் அரசர்களாக இருக்கக்கூடும் என தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இரண்டு தேவகுலங்கள் மற்றும் வசிதேவனார் கோட்டம்ஆகியவை குறித்த செய்திகளும் உள்ளன. தேவகுலம் என்பது வடஇந்தியாவில் நீத்தோர் படிமைகளை வைத்து வணங்கும் கூடமாக இருந்தது எனவும் இந்த வழக்கம் கி.பி. முதலாம் நூற்றாண்டில் இருந்தே காணப்படுகிறது எனவும் பி.ஆர். பந்தர்கர் கூறியுள்ளார். பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள் குறிப்பிடும் இரு தேவகுலங்கள், வசிதேவனார் கோட்டம் ஆகிய மூன்றுமே சமண சமயஞ் சார்ந்தன எனக்கொள்வதோடு இவற்றைக் கட்டிய அதிகாரிக்கு ஆதரவளித்ததன் மூலம் அரசனும் சமண சமயஞ் சார்ந்தவன் எனக் கொள்ளலாம். |
| 653 | : | _ _ |a பூலாங்குறிச்சி, வட்டெழுத்து, களப்பிரர், கல்வெட்டு, பழந்தமிழ், அரசு |
| 752 | : | _ _ |a பூலாங்குறிச்சி, கண்மாய் மதகையொட்டியுள்ள குன்றின் சரிவுப் பகுதி |c பூலாங்குறிச்சி |d சிவகங்கை |f திருப்பத்தூர் |
| 914 | : | _ _ |a 10.2692788 |
| 915 | : | _ _ |a 78.5906514 |
| 931 | : | _ _ |a ஆவணம், தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர். |
| 995 | : | _ _ |a TVA_INS_000092 |
| barcode | : | TVA_INS_000092 |
| book category | : | வட்டெழுத்து |
| cover | : |
|
| Primary File | : |