MARC காட்சி

Back
அரச்சலூர்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a அரச்சலூர்
510 : _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a ஈரோடு-காங்கேயம் சாலையில் அரச்சலூர் அமைந்துள்ளது. இவ்வூரை ஒட்டியுள்ள நாகமலையில் ஆண்டிப் பாறை என்றழைக்கப்படுமிடத்தில் இயற்கையான குகைத்தளமும் கற்படுக்கைகளும் உள்ளன. கற்படுக்கைகளினிடையே சிறப்புடைய இசைக் கல்வெட்டுகள் மூன்று உள்ளன. 1960-இல் புலவர் இராசு இக்கல்வெட்டுகளைக் கண்டறிந்தார். அதில் ஒன்றான இக்கல்வெட்டு இரண்டு வரிகளில் அமைந்துள்ளது. கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது. இருவரிகளிலும் எழுத்துக்கள் சில உடைந்துள்ளன. மலை வண்ணக்கனான தேவன் சாத்தன் இசை எழுத்துக்களைச் சேர்த்தமைத்தான் என்பது இதன் பொருளாகும். “எ“ எழுத்தினுள் குறிலைக் குறிக்க புள்ளியிடப்பட்டுள்ளது. எழுத்துக்கள் தலைக்கோடு பெற்றுள்ளன. மலை வண்ணக்கன் என்பது மலைப் பிரதேசத்தைச் சேர்ந்த வண்ணக்கன் என்ற குடியைச் சேர்ந்தவன் எனப் பொருள்படும். இடைக்காலக் கல்வெட்டுகளில் வண்ணக்கன் என்ற சொல் காசுகளின் தரம் சோதிப்பவன் என்ற பொருளில் பயின்று வருகிறது. இப்பகுதியில் உள்ள கொடுமணல் அகழாய்வில் சங்க காலத்திய வண்ணமணிகள் தயாரிக்கும் தொழிற்கூடங்கள் அறியப்பட்டுள்ளதால் மணிகளைச் சோதிப்பவன் என்பதும் பொருந்துகிறது. எனினும் மணி என்பதை விட மலை என்பதே எழுத்தின் அடிப்படையில் ஏறத்தாழ சரியாக உள்ளது.
653 : _ _ |a அரச்சலூர், இசைக்கல்வெட்டு, ஈரோடு, தமிழ்- பிராமி கல்வெட்டு, நாகமலை, ஆண்டிப்பாறை, பண்டைய தமிழிக் கல்வெட்டு, ஈரோடு மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை
752 : _ _ |a நாகமலை ஆண்டிப்பாறை |c அரச்சலூர் |d ஈரோடு |f கோபிசெட்டிப்பாளையம்
914 : _ _ |a 11.1628925
915 : _ _ |a 77.7008509
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_000081
barcode : TVA_INS_000081
book category : தமிழி / தமிழ்-பிராமி
cover :
Primary File :

TVA_INS_000081/TVA_INS_000081_அரச்சலூர்_குகைத்தளம்-001.JPG

TVA_INS_000081/TVA_INS_000081_அரச்சலூர்_குகைத்தளம்-002.JPG

TVA_INS_000081/TVA_INS_000081_அரச்சலூர்_குகைத்தளம்-003.JPG

TVA_INS_000081/TVA_INS_000081_அரச்சலூர்_குகைத்தளம்-004.JPG

TVA_INS_000081/TVA_INS_000081_அரச்சலூர்_குகைத்தளம்-005.JPG

TVA_INS_000081/TVA_INS_000081_அரச்சலூர்_குகைத்தளம்-006.jpg