MARC காட்சி

Back
அரிட்டாபட்டி
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a அரிட்டாபட்டி
510 : _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a இம்மலையில் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டு முதல் கல்வெட்டாகும். இக்கல்வெட்டைச் சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை பேராசிரியர் கே.வி.இராமனும், பேராசிரியர் எ.சுப்பராயலுவும் 1971-இல் கண்டறிந்தனர். முதன் முதலாக இந்திய வரலாற்றுக் கழகத்தின் 49-ஆம் பருவ இதழில் 1971-இல் வெளியிட்டனர். இக்கல்வெட்டு கள ஆய்வுகளில் திருத்தமான பாடம் வாசிக்கப்பட்டு ஐ.மகாதேவன் நூலில் வெளியிடப்பட்டுள்ளது. நெல்வேலியைச் சேர்ந்த சிழிவன் அதினன் வெளியன் என்பவன் இக்குகைத் தளத்தை கொட்டுபித்தான் அதாவது கொட்டுவித்தான் என்பது கல்லில் கொட்டி செய்யப்படும் பணியைக் குறிக்கிறது. நெல்வேலி என்பது இன்றைய திருநெல்வேலியின் தொன்மைப் பெயராக இருக்கலாம். சிழிவன் என்பது செழியன் என்னும் பாண்டியர் குடிப்பெயராகும். அதினன் வெளியன் என்பது கொடையாளியின் இயற்பெயர். அதினன் என்னும பெயர் ஆண்டிப்பட்டி புதையலில் கிடைத்த ஈயக் காசுகளிலும் இடம்பெற்றுள்ளது. வெளியன் என்னும் சங்க இலக்கியத்தில் தித்தன் வெளியன் என்னும் பெயராக இடம் பெறுகிறது. வெளியன் என்பதை ஒளித்தன்மை உடையவன் என்று பொருள் கொள்ளலாம். வெள்-வெளிச்சம்-ஒளி இவை ஒரு பொருள் குறித்த பல சொற்களாகும். வெள் என்பதன் நீட்டலே வேள் என்பது ஆய்வு முடிபாகும். எனவே நெல்வேலியை ஆண்ட அதினன் என்னும் வேள் அமைத்து வைத்த கற்படுக்கையாக இதனைக் கருதலாம். இவ்வேள் பாண்டியர் குடியைச் சேர்ந்தவன் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
653 : _ _ |a அரிட்டாபட்டி தமிழ் பிராமி கல்வெட்டு, கழிஞ்சமலை கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை
752 : _ _ |a கழிஞ்சமலை சமண குகைத்தளம் |c அரிட்டாபட்டி |d மதுரை |f மேலூர்
914 : _ _ |a 10°02’19"N
915 : _ _ |a 78°17’37"E
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_000008
barcode : TVA_INS_000008
book category : தமிழி / தமிழ்-பிராமி
cover :
Primary File :

TVA_INS_000008/TVA_INS_000008_அரிட்டாப்பட்டி_குகைத்தளம்-001.JPG

TVA_INS_000008/TVA_INS_000008_அரிட்டாப்பட்டி_குகைத்தளம்-002.JPG

TVA_INS_000008/TVA_INS_000008_அரிட்டாப்பட்டி_குகைத்தளம்-003.jpg