| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a குன்னக்குடி |
| 510 | : | _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை |
| 520 | : | _ _ |a இக்கல்வெட்டு 1909 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. 1992ல் ஐ. மகாதேவன் உடன் சென்ற தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை குழுவினர் கல்வெட்டின் முதல் எழுத்தை அதன் மீது பூசிக்கட்டப்பட்டிருந்த சுண்ணாம்புக் காரையை உடைத்து அறிந்தனர். எழுத்துக்கள் தலைகீழாகவும் மேல் கீழாகவும் மாற்றி எழுதப்பட்டவை. கண்ணாடியில் பிம்பமாகத் தெளிவாக நேராகத் தெரியக் கூடியவை. இதன் காலம் ஏறத்தாழ கி.பி. மூன்றாம் நூற்றாண்டாகும். காபி என்பதில் 'ப்' மெய்சேர்த்து ‘காப்பி’ என்று படிக்கலாம் காப்பி ஊரைச் சேர்ந்த ஆதன் சாத்தன் என்ற ஆட்பெயராக உள்ளது. சாத்தன் என்ற சொல்லில் ‘த்’ புள்ளியிட்டு எழுதப்பட்டுள்ளது. காப்பியம் என்பது ஒரு குடிப் பெயராக இருக்கவேண்டும். தொல்காப்பியர், காப்பியாற்றுக் காப்பியனார், காப்பியன் சேந்தனார் முதலிய புலவர்களது பெயர்கள் இங்கு கருத்தில் கொள்ள வேண்டியவையாகும். காப்பியக்குடி என்றொரு ஊர் இன்று சீர்காழி அருகில் உள்ளது. காப்பியக்குடி என்பதற்கு ஒத்த பெயரே 'காப்பிஊர்’ எனலாம். |
| 653 | : | _ _ |a குன்னக்குடி, தமிழ்- பிராமி கல்வெட்டு, ஞானியார் மடம், சிவகங்கை, பண்டைய தமிழிக் கல்வெட்டு, சிவகங்கை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை |
| 752 | : | _ _ |a ஞானியார் மடம் சமண குகைத்தளம் |c குன்னக்குடி |d சிவகங்கை |f திருப்பத்தூர் |
| 914 | : | _ _ |a 10.1133488 |
| 915 | : | _ _ |a 78.6980149 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_000074 |
| barcode | : | TVA_INS_000074 |
| book category | : | தமிழி / தமிழ்-பிராமி |
| cover | : |
|
| Primary File | : |