MARC காட்சி

Back
தாமரைக்கரை
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a தாமரைக்கரை
510 : _ _ |a ஆவணம் இதழ் 10, தமிழகத் தொல்லியல் கழகம், 1999
520 : _ _ |a மதுரை. ஈரோடு மாவட்டம் அந்தியூரிலிருந்து மைசூர் செல்லும் வழியில் ஈரெட்டிமலைமீது அடர்ந்த காட்டின் நடுவே உள்ளது தாமரைக்கரை கிராமம். இக்கிராமத்திலுள்ள வீரபத்திரசுவாமி கோயிலின் வளாகத் தில் தனிக்கல்லில் பொறிக்கப்பட்ட நடுகல் ஒன்று உள்ளது.' இந் நடு கல் முன்பு இவ்வூரில் மேற்புறம் இருந்த கொல்லை ஒன்றில் இருந்தது. இந்நடுகல்லின் மேற்பகுதி உடைந்துள்ளது. கீழ்பகுதி மட்டும் மூன்று வரிகளுடன் கூடிய கல்வெட்டுடன் காணப்படுகிறது. இதில் பொறிக்கப்பட்டுள்ள வரிவடிவ அமைதியைக் கொண்டு இதன் காலத் தினை கி.பி. 5-6ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கூறலாம். தமிழ் - பிராமி எழுத்துக்கள் தமிழாகவும் வட்டெழுத்தாகவும் மாறுகின்ற கால கட்டத்தில் இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. இதில் காணப்படும் எழுத்துக்கள் பூலாங்குறிச்சி, இருளப்பட்டிக் கல்வெட்டுகளின் எழுத் தமைதியை ஒத்துள்ளன. ஈரெட்டிமலையின் மற்றொரு பகுதியில் 'துற கய்யுள்ளாருகல்' என்று படிக்கப்பட்ட மற்றொரு நடுகல் கல்வெட் டோடு இதனை ஒப்பிடலாம். இக்கல்வெட்டில் பழமையான வட் டெழுத்துக்களின் வளர்ச்சியைப் பார்க்க முடிகிறது. மகரம், தகரம் ஆகி யவை வட்டெழுத்துக்களாக மாறியுள்ள நிலையைக் காணமுடிகிறது. தகரத்தில் உள்ள குறுக்குக்கோடு பிறை போன்று மேல் நோக்கிய வளை வாக இடப்பட்டுள்ளது. இதேபோன்று மகரத்திலுள்ள குறுக்குக் கோடும் வளைந்துள்ளது. இக்கல்வெட்டின் மற்றொரு சிறப்பு அனைத்து மெய்யெழுத்துகளும் புள்ளியிட்டு எழுதப்பெற்றுள்ளமை யாகும். இக்கல்வெட்டு வடக்கிருந்து உயிர்துறந்தவரின் நினைவாக எடுக்கப்பட்ட கல்லாக இருக்கலாம்.
653 : _ _ |a கல்வெட்டு, நடுகல் கல்வெட்டு, தாமரைக்கரை, வட்டெழுத்து, தமிழ்-பிராமி, ஈரெட்டிமலை, ஈரோடு, பவானி வட்டம், ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள், நடுகல், வட்டெழுத்து நடுகல்
752 : _ _ |a தாமரைக்கரை வீரபத்திரசுவாமி கோயில் வளாகம் |c தாமரைக்கரை |d ஈரோடு |f பவானி
914 : _ _ |a 11.766345269840695,
915 : _ _ |a 77.559834069719
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001913
barcode : TVA_INS_001913
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001913/TVA_INS_001913_ஈரோடு_தாமரைக்கரை-கல்வெட்டு-001.jpg

TVA_INS_001913/TVA_INS_001913_ஈரோடு_தாமரைக்கரை-கல்வெட்டு-002.jpg