110 | : | _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
245 | : | _ _ |a கண்ணனூர் - |
346 | : | _ _ |a 1982-1983 |
347 | : | _ _ |a கழிவு நீர் சேகரிக்கும் பள்ளம், சொரசொரப்பான சிவப்பு பானையோடுகள் மற்றும் கருப்பு பானையோடுகள், சீன மட்பாண்டங்கள், சுடுமண் மணிகள், கண்ணாடி வளையல் துண்டுகள், காதணி, உடைந்த கத்தியின் ஒரு பகுதி, இரும்பு ஆணிகள், இடைக்காலத்தைச் சேர்ந்த கூரை ஓடுகள், செங்கல் கட்டுமானம் மற்றும் நீரோடும் வடிகால் |
500 | : | _ _ |a கண்ணனூர் அகழாய்வு புள்ளம்பாடி கால்வாயின் வடக்குப்பகுதியில் முதல் மாதிரிக்குழி போடப்பட்டது. நீர்வரத்தின் காரணத்தால் இக்குழியில் பண்பாட்டுக்கூறுகளை காண இயலவில்லை. இரண்டாவது அகழாய்வுக்குழி புள்ளம்பாடி கால்வாயிலிருந்து நீர்வரத்திற்கான வடிகால் ஒன்றினை வெளிக்கொணர்ந்தது. மூன்று அகழாய்வுக் குழிகளிலிருந்து கால்வாயிலிருந்து வெட்டிவிடப்பட்ட வாய்க்கால் (கல் அமைப்புடன் கூடியது), சொரசொரப்பான சிவப்பு பானையோடுகள் மற்றும் கருப்பு பானையோடுகள், சீன மட்பாண்டங்கள், சுடுமண் மணிகள், கண்ணாடி வளையல் துண்டுகள், காதணி, உடைந்த கத்தியின் ஒரு பகுதி, இரும்பு ஆணிகள், இடைக்காலத்தைச் சேர்ந்த கூரை ஓடுகள், செங்கல் கட்டுமானம் மற்றும் நீரோடும் வடிகால் போன்ற தொல்பொருட்கள் வெளிக்கொணரப்பட்டன. இடைக்காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டுமானம் ஒன்றும், கல் வாய்க்கால் ஒன்றும் இவ்வகழாய்வில் வெளிப்படுத்தப்பட்டது. இதன் காலம் பொ.ஆ.11-14 என வரையறுக்கப்பட்டிருக்கிறது. |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் அமைந்துள்ள கண்ணனூர் கி.பி.12-ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி செய்து வந்த ஹொய்சாளர்களின் தலைநகரமாகும். ஹொய்சாள மன்னர்கள் “புலிகடிமால்“ என்று சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றனர். சமயபுரம் மாரியம்மன் ஹொய்சளர்களின் குலதெய்வமான தாய்த்தெய்வமாவாள். மேலும் ஹொய்சாளேஸ்வரர் கோயில் இம்மன்னர்கள் கட்டியதாகும். கண்ணனூரில் புள்ளம்பாடி கால்வாய் என்னுமிடத்தில் அகழாய்வு நடத்தப்பட்டது. |
653 | : | _ _ |a கண்ணனூர், திருச்சி, லால்குடி, சமயபுரம், ஹொய்சளர், அகழாய்வு, அகழ்வாராய்ச்சி, சுடுமண் பொருட்கள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, தமிழ்நாடு, தமிழகம், தொல்பொருட்கள், தொல் பொருள் ஆய்வு |
700 | : | _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
710 | : | _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
752 | : | _ _ |a கண்ணனூர் |c கண்ணனூர் |d திருச்சி |f லால்குடி |
914 | : | _ _ |a 11.081143 |
915 | : | _ _ |a 78.5462098 |
995 | : | _ _ |a TVA_EXC_00027 |
barcode | : | TVA_EXC_00027 |
book category | : | வரலாற்றுக்காலம் |
cover images TVA_EXC_00027_கண்ணனூர்_அகழாய்வுக்குழி-0001.jpg | : |
![]() |
Primary File | : |