MARC காட்சி

Back
ஜான் சல்லிவன் நினைவகம்
245 : _ _ |a ஜான் சல்லிவன் நினைவகம் -
300 : _ _ |a நினைவிடம்
500 : _ _ |a நீலகிரியில் உள்ள கோத்தகிரி "இந்தியாவின் சுவிட்சர்லாந்து" என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள தட்பவெட்ப நிலையும் சுவிட்சர்லாந்தின் தட்பவெட்ப நிலையும் ஒரே மாதிரியாக இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. உலக சுற்றுலா வரைபடத்தில் நீலகிரி மாவட்டம் இடம் பெற காரணமாக இருந்தவர் ஜான் சல்லிவன் ஆவார். இவரே நீலகிரியின் தந்தை என போற்றப்படுகிறார். 1819-ஆம் ஆண்டு கோத்தகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கோவையின் மாவட்ட ஆட்சியராக ஜான் சல்லிவன் இருந்தார். 15 ஜூன் 1788 ஆண்டு இலண்டனில் பிறந்த இவர், கிழக்கிந்தியக் கம்பெனியின் எழுத்தராக சேர்ந்து பின் 1816-ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். பின் 1830 வரை கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். இவர் காலத்தில் நீலகிரிக்கு வர போதிய வசதி இல்லாத காரணத்தாலும், அடர்ந்த வனப்பகுதியாக இருந்ததாலும் இங்கு வாழ்ந்த மக்கள் வெளியுலகத் தொடர்பு இல்லாமல் இருந்தனர். இந்தப் பகுதியின் இயற்கை சுற்றுச்சூழல் ஜான் சல்லிவன் அவர்களை மிகவும் கவர்ந்ததால் திம்பட்டி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கன்னேரிமுக்கு என்னுமிடத்தில் முகாம் அலுவலகத்தை அமைத்தார். இதுவே உதகையின் முதல் அரசு அலுவலகம் ஆகும். இதற்குப் பின்னரே உதகையில் உள்ள ஸ்டோன் ஹவுஸ் கட்டப்பட்டது. ஊட்டியுள்ள மிகப்பெரிய ஏரியும் இவரால் உருவாக்கப்பட்டது. மேலும் மலையின் பல பகுதிகளில் ஓடிய சிறிய ஓடைகளை அந்த ஏரியுடன் இணைத்து அதன் நீர்வளத்தை உறுதி செய்தார். இவரின் வருகைக்குப் பிறகே உதகமண்டலத்தில் தேநீர் மற்றும் கேரட், பீட்ரூட் ஆகியன பயிர் செய்யப்பட்டன. கோத்தகிரியின் பொருளாதார வளர்ச்சிக்கு இவரே காரணம். நீலகிரி வரலாற்றில் ஜான் சல்லிவனுக்கு முக்கிய இடம் உண்டு .
520 : _ _ |a ஜான் சல்லிவன் 1788–ஆம் ஆண்டு ஜூன் 15–ஆம் தேதி லண்டனில் பிறந்தார். பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி இந்தியாவில் ஆட்சி செய்த காலத்தில், 1815–ஆம் ஆண்டில் கோயமுத்தூரின் முதல் மாவட்ட ஆட்சியராக ஜான் சல்லிவன் நியமிக்கப்பட்டார். பின்னர் 1819–ஆம் ஆண்டில் நீலகிரி மலையை கண்டறிந்தார். 1830–முதல் 1832–ம் ஆண்டு வரையிலான காலங்களில் குன்னூரிலிருந்து கோத்தகிரியில் உள்ள திம்பட்டி சாலையை உருவாக்கினார். மேலும் 1828–ம் ஆண்டு 25 வீடுகளை சமவெளி பகுதியில் இருந்து குடியேறியவர்களுக்காக கட்டி கொடுத்தார். 1819–ம் ஆண்டு முதல் 1821–ம் ஆண்டு வரை 2 ஆண்டுகள் கன்னேரிமுக்கு கிராம பகுதியில் உள்ளூர் மக்களின் உதவியுடன் கற்களால் கட்டப்பட்ட அவர் கட்டிய கல் வீடு பெத்தக்கல் பங்களா என அழைக்கப்பட்டு வந்தது. அந்த வீட்டை தனது அலுவலகமாகவும் ஜான் சல்லிவன் பயன்படுத்தி வந்தார். அந்த வீடு சில ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டு அவரது நினைவகமாக மாற்றப்பட்டு ஜான் சல்லிவன் நினைவகம் என்ற பெயரில் தற்போது சுற்றுலாத் தலமாக செயல்பட்டு வருகிறது. இந்த நினைவகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், கோத்தகிரி, உதகை உள்ளிட்ட நகரங்களின் அரிய பழைய மற்றும் தற்போதைய புகைப்படங்கள், பழங்குடியினத்தவரின் வாழ்க்கை முறைகள், அவர்களின் தயாரிப்புகள், புத்தகங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
653 : _ _ |a தமிழ்நாடு, நீலகிரி, உதகை, உதகமண்டலம், கோத்தகிரி, சான் சல்லிவன், ஜான் சல்லிவன் நினைவகம், ஜான் சல்லிவன் ஹவுஸ், ஆங்கிலேயர், ஆங்கிலேயர் ஆட்சிக் காலம், ஆங்கிலேய கலெக்டர், நீலகிரியின் தந்தை
700 : _ _ |a க.த.காந்திராஜன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம்
752 : _ _ |a கோத்தகிரி |c கோத்தகிரி |d நீலகிரி |f கோத்தகிரி
906 : _ _ |a பொ.ஆ.1821
914 : _ _ |a 11.440773537613
915 : _ _ |a 76.857019383165
934 : _ _ |a உதகை புனித செயிண்ட் தாமஸ் ஆலயம், கல்லறைத் தோட்டம், அண்ணாமலை கோயில், துரூக் கோட்டை, சிஎஸ்ஐ தூய கிறித்துவ தேவாலயம், புனித ஸ்டீபன் தேவாலயம்
995 : _ _ |a TVA_MON_00079
barcode : TVA_MON_00079
book category : நினைவிடங்கள்
cover :
Primary File :

TVA_MON_00079/TVA_MON_00079_நீலகிரி_சல்லிவன்-நினைவகம்-0001.jpg

TVA_MON_00079/TVA_MON_00079_நீலகிரி_சல்லிவன்-நினைவகம்-0002.jpg

TVA_MON_00079/TVA_MON_00079_நீலகிரி_சல்லிவன்-நினைவகம்-0003.jpg

TVA_MON_00079/TVA_MON_00079_நீலகிரி_சல்லிவன்-நினைவகம்-0004.jpg

TVA_MON_00079/TVA_MON_00079_நீலகிரி_சல்லிவன்-நினைவகம்-0005.jpg

TVA_MON_00079/TVA_MON_00079_நீலகிரி_சல்லிவன்-நினைவகம்-0006.jpg