MARC காட்சி

Back
ரஞ்சன்குடி கோட்டை
245 : _ _ |a ரஞ்சன்குடி கோட்டை -
300 : _ _ |a கோட்டை
500 : _ _ |a

          1751 ஆம் ஆண்டில் வாலிகொண்டா போரின் போது ரஞ்சன்குடி கோட்டையானது போர் மையமாக இருந்த்து. அப்பொழுது பிரஞ்ச் படைவீர்ர்களின் ஆதரவுடன் இருந்த சந்தா சாஹிப் என்பவரை பிரிட்டிஷ் படைவீரர்களின் ஆதரவோடு இருந்த முகமது அலி என்பவர் எதர்த்து வெற்றிபெற்றார். கோட்டையானது நீள்வட்டமாகவும், அரைகோள வடிவ கோட்டைகளுடனும், வலுவான வெவ்வேறு உயரங்களில் கட்டப்பட்டுள்ள மூன்று அரண்களால் சூழப்பட்டுள்ள இக்கோட்டை சுவர்கள் ஒழுங்காக வெட்டப்பட்ட கற்தொகுப்புகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

          இக்கோட்டையில் அரசர்களுக்கு உரிய மாளிகை, குடியிருப்பு கட்டிடங்கள், சுரங்க அறைகள் மற்றும் பேட்டை, மேல்பகுதி, கோட்டைய மேடு கீழ் பகுதியை இணைக்கும் ஒரு பாதை உள்ளது. தற்சமயம் இந்தியாவின் தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தினால் இந்தக் கோட்டை பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. பெரம்பலூரின் சுற்றுலாத்தலங்களில் முக்கியமான தலங்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்த கோட்டையை ரஞ்சன்குடி கோட்டை என்றும் நஞ்சன்குடி கோட்டை என்றும் குறிப்பிடலாம். சிவன் மற்றும் ஹனுமானுக்காக அர்ப்பணஞ்செய்த இந்து கோவில்களின் பழைய வளாகங்கள் இருந்ததாக நம்பப்படுகிறது.

         1751-ஆம் ஆண்டு நடைபெற்ற வாலிகொண்டா போரின் பிரதிபலிப்பு காட்சியாக இந்த கோட்டை அமைந்துள்ளது. பிரஞ்சு படையானது சந்தா சாஹிப் என்பவருக்கும், பிரிட்டிஷ் படையானது முகமது அலி என்பவருக்கும் ஆதரவு அளித்தனர் அருகே அமைந்துள்ள கிராம்மான வாலிகொண்டாவிற்கு போரை அழைத்திருந்தாலும், அது கோட்டையில் போரிடப்பட்டது. தொடக்கத்தில் பிரெஞசு படை வெற்றி வாகை சூடியது. ஆனால் முடிவில் உள்ளுர் முஸ்லிம்கள் உதவியுடன் பிரிட்ஷ் படையானது வெற்றிவாகை சூடி போரை முடிவிற்கு கொண்டு வந்தது. 1752 ஆம் ஆண்டு மே மாதம் டிஅயுடில் கீழ் பிரெஞ்சு படை சரணடைந்த்தின் பிரதிபலிப்பாக கோட்டை அமைந்தது. மேலும் ஸ்ரீரங்கத்தில் தற்காப்பு தளத்தை அகற்றுவதற்காகவும் அனுப்பப்பட்டது. ஊட்டத்தூரில் பணியமர்த்தப்பட்ட டி அயுடில் என்பவர் மே மாதம் 9 ஆம் தேதி டால்டன் தலைமையிலான பிரிட்டிஷ் படையினால் வீழ்த்தப்பட்டார். ரஞ்சன்குடியிடம் அவர் பின்வாங்கிச் சென்றார். பிரெஞ்சு படையானது கோட்டையின் மேல் தளத்திற்கு செல்லாதவண்ணம் ஜகிர்தார் பிரிட்டிஷ் படையின் பக்கமாக எடுத்துச் சென்று டிஅயுடில்லை கோட்டையில் சரணடையச் செய்தார்.

          இந்தக் கோட்டையானது நீற்வட்டமாகவும் அரைகோள வடிவில் அமைந்துள்ளது. வெவ்வேறு உயரங்களில் கட்டப்பட்டுள்ள மூன்று அரண்களால் சூழப்பட்டுள்ள இக்கோட்டை ஒழுங்காக வெட்டப்பட்ட கற்தொகுப்புகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. முக்கிய பாதுகாப்பு அரண், கோட்டையின் அடிப்பாகம் மண் சுவரினால் சூழப்பட்டுள்ளது. படிகளின் வழியாக பேட்டை எனப்படும் திறந்தவெளி போர்களத்திற்கு செல்லுமு அமைப்பு இருந்தன. மேல் அடுக்கு கோட்டை மேடு என்று அழைக்கப்படுகிறது. இது பீரங்கி தளம் மற்றும் சிப்பாய்கள் உதவியுடன் பாதுகாப்பு கோபுரமாகவும் அமைந்திருந்தது. கோட்டையில் உள்ள சிறிய நீரமைப்பானது நவாபின் நீச்சல் குளுமாக இருந்த்து. கோட்டையில் ஒரு அரண்மனை, குடியிருப்பு பகுதிகள், சுரங்க அறைகள், பேட்டை மற்றும் கோட்டை மேடு பகுதிகளை இணைப்பதற்கான சுரங்கப்பாதை ஒன்றும் இருந்தது. கோட்டையின் மையப்பகுதியில் அமைந்த ஒரு குழியானது ஆண் கைதிகளுக்கான சிறைச் சாலையாகவும், கோட்டையின் உள்ளே அமைந்த சிறிய அறைகளைக் கொண்ட சிறைச்சாலையானது பெண்களுக்கான சிறையாகவும் இருந்தது. கோட்டையானது பெரம்பலூரின் சுற்றுலா மையங்களில் ஒரு மிக முக்கிய சுற்றுலாத் தலமாக இருந்தது.

520 : _ _ |a

          ரஞ்சன்குடி கோட்டை 17 வது நூற்றாண்டைச் சார்ந்தது. இது தமிழ்நாட்டில் பெரம்பலூரிலிருந்து 22 கி.மீ. (14மைல்) தொலைவில் வடக்கே அமைந்துள்ளது. தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள பெரம்பலூரில் வடக்கே 22 கி.மீ. (14மைல்) தேசிய நெடுஞ்சாலை, NH 45-ல் அமைந்துள்ளது. இது மாநிலத்தின் தலைநகர் சென்னையிலிருந்து 253 கி.மீ. (157மைல்) தொலைவிலும் திருச்சியிலிருந்து 70 கி.மீ. (43மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. இந்தக் கோட்டை கர்நாடக நவாபினால் கட்டப்பட்டது.

653 : _ _ |a கோட்டை, ரஞ்சன்குடி, இரஞ்சன்குடிக் கோட்டை, பெரம்பலூர், கர்நாடக நவாப், நஞ்சன்குடி கோட்டை, நவாபு கோட்டை, துருவத்துக்கோட்டை, தூங்கானைமறவன், மங்களமேடு, வி.களத்தூர்
710 : _ _ |a The Zamin's of Tamilnadu
752 : _ _ |a ரஞ்சன்குடி |c ரஞ்சன்குடி |d பெரம்பலூர் |f பெரம்பலூர்
906 : _ _ |a கி.பி.1751
914 : _ _ |a 11.34760015
915 : _ _ |a 78.93952515
934 : _ _ |a சாத்தனூர் கல்மரம்
995 : _ _ |a TVA_MON_00050
barcode : TVA_MON_00050
book category : கோட்டைகள்
cover :
Primary File :

TVA_MON_00050_ரஞ்சன்குடி_கோட்டை-0001.jpg

TVA_MON_00050_ரஞ்சன்குடி_கோட்டை-0002.jpg

TVA_MON_00050_ரஞ்சன்குடி_கோட்டை-0003.jpg

TVA_MON_00050_ரஞ்சன்குடி_கோட்டை-0004.jpg

TVA_MON_00050_ரஞ்சன்குடி_கோட்டை-0005.jpg

TVA_MON_00050_ரஞ்சன்குடி_கோட்டை-0006.jpg

TVA_MON_00050_ரஞ்சன்குடி_கோட்டை-0007.jpg

TVA_MON_00050_ரஞ்சன்குடி_கோட்டை-0008.jpg