MARC காட்சி

Back
ஆலம்பரைக் கோட்டை
245 : _ _ |a ஆலம்பரைக் கோட்டை -
300 : _ _ |a கோட்டை
500 : _ _ |a இக்கோட்டை கி.பி. 17ஆம் நூற்றாண்டில் மொகலாய அரசரால் கட்டப்பட்டதாக தெரிகிறது. கி.பி 1735ல் இது நவாப் தோஸ்து அலிகானின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. பிரெஞ்ச் தளபதியான டூப்ளே தனக்களித்த உதவிக்கு பரிகாரமாக தக்காண சூபேதார் முஸாபர்ஜங் பிரெஞ்ச்காரருக்கு கி.பி.1750ல் அன்பளிப்பாக கொடுத்துள்ளார். கி.பு 1760ல் ஆங்கிலேயர்களால் இக்கோட்டை தகர்க்கபட்டுள்ளது. இது செங்கலால் கட்டப்பட்டுள்ளது.
520 : _ _ |a கிழக்கு கடற்கரை சாலை வழியாக பாண்டிச்சேரி செல்லும் வழியில் கடப்பாக்கம் என்ற இடத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ஆலம்பறை கோட்டை. சென்னையிலிருந்து தெற்கே கிழக்குக்கடற்கரை சாலையில் 106 கி.மீ தொலைவிலும், மகாபலிபுரத்திலிருந்து தெற்கே 50 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது தற்போதைய "கடப்பாக்கம்". (சங்க இலக்கியத்தில் இடம் பிடித்த "இடைக்கழிநாடு") இடைக்கழிநாடு, கடப்பாக்கதிற்கு கிழக்கே 3 கி.மீ. தொலைவில் "கடப்பாக்கம் குப்பம்", தீவுப் போன்ற ஊர், உள்ளேக் கோட்டை, கோட்டையின் கீழ்த்திசையில் உப்பங்கழி (Back Water Area), உப்பங்கழியில் படகுத் துறை அதைத் தாண்டி மணல் திட்டை அதற்கு அப்பால் கடற்கரை. கடற்கறைக்கு உப்பங்கழியின் வழியே நடந்தே கடக்கும் வண்ணம் மணற்மேடு என தனிப்பட்ட புவியியல் அமைப்பு. முகலாயப் பேரரசு வலுவிழந்த பின்னர் கர்நாடகப் பகுதி (ஆற்காடு நவாப் & ஐதராபாத் நிசாம்) டெல்லி ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கியது. கர்நாடகம் என்பது தற்கால ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் பகுதிகளைக் குறிக்கின்றது. பெயரளவில் ஐதராபாத் நிசாம் இப்பகுதியை ஆண்டு வந்தார். ஆனால் உண்மையில் நவாப் தோஸ்த் அலியின் கட்டுப்பாட்டில் கர்நாடகப் பகுதிகள் இருந்தன. அவரது மரணத்துக்குப்பின் யார் இப்பகுதியை ஆள்வது என்பது குறித்த பலப்பரீட்சை உருவானது. நிசாமின் மருமகன் சந்தா சாகிபும், ஆற்காடு நவாப் அன்வாருதீன் முகமது கானும் கருநாடக நவாப் ஆக முயன்றனர். இருவருக்குமிடையே மூண்ட போரில் சந்தா சாகிப்புக்கு ஆதரவாக பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பனியும், ஆற்காடு நவாப்புக்கு ஆதரவாக பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியும் களமிறங்கின. கி.பி.1735இல் நவாப் தோஸ்த் அலிகான் இக்கோட்டையை ஆண்டார். கி.பி.1750இல் ஆங்கிலேயர்களை எதிர்க்க உதவிய பிரெஞ்சுத் தளபதி டியுப்ளக்சுக்கு, சுபேதார் முசாபர்ஜங் இந்தக் கோட்டையைப் பரிசளித்தார். கி.பி.1760இல் பிரெஞ்சுப் படையை வெற்றி கொண்ட ஆங்கிலேயப் படை, இக்கோட்டையைக் கைப்பற்றிச் சிறிதளவு சிதைத்துவிட்டது. சிதைவுகளின் மிச்ச சொச்சம், இன்றும் நம் முன் காட்சி அளிக்கின்றன. மேலும் எஞ்சிய பகுதிகளை கி.பி. 2004 ஆம் ஆண்டு சுனாமித் தகர்த்தது. கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஆலம்பரை, பண்டைய நாளில் ஒரு துறைமுகப் பட்டினமாகத் திகழ்ந்துள்ளது. சங்க கால இலக்கியமான சிறுபாணாற்றுப்படையில் இப்பகுதி, இடைக்கழிநாடு எனப் பயர் பெற்றிருந்ததாக அறியப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டில் முகமதியர்களால் ஆலம்பரையில் கோட்டை கட்டப்பட்டது. செங்கற்களாலும் சுண்ணாம்பாலும் கட்டப்பட்ட சதுர வடிவிலான கண்காணிப்பு நிலை மாடங்களுடன் 15 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் கோட்டை அமைந்துள்ளது. நவாபுகளின் ஆட்சியில் ஆலம்பரை, துறைமுகப் பட்டினமாக இருந்துள்ளது. இக்கோட்டையின் கீழ்ப்புறம், படகுத் துறை ஒன்று, கப்பலுக்குப் பொருட்களை ஏற்ற, இறக்க அமைக்கப்பட்டுள்ளது. படகுத் துறையின் நீளம் சுமார் 100 மீட்டர். அவற்றின் பகுதிகள் இப்போதும் காணப்படுகின்றன. ஆலம்பரை படகுத் துறையிலிருந்து சரிகைத் துணி வகைகள், உப்பு, நெய் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆலம்பரையில் அமைந்துள்ள நாணயச் சாலையில் ஆலம்பரை காசு, ஆலம்பரை வராகன் ஆகிய நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன. இந்நாணயச் சாலையின் பொறுப்பாளராக இருந்த பொட்டிபத்தன், கிழக்குக் கடற்கரை வழியாகக் காசி, இராமேஸ்வரத்திற்குத் தீர்த்த யாத்திரை செல்லும் பயணிகளுக்காகச் சிவன் கோயில், பெரிய குளம், சத்திரம் ஆகியவற்றைக் கட்டினார். இந்தப் பெருவழி, இப்போது கோட்டைக்கு மேற்கில் 2 மைல் தொலைவில் செல்கிறது. இந்தப் பகுதியைத் தமிழ்நாடு தொல்லியல் துறை இப்போது பராமரித்து வருகிறது.
653 : _ _ |a ஆலம்பரை, ஆலம்பரா, கோட்டை, முஸ்லீம், இஸ்லாமியர், கடப்பாக்கம், காஞ்சிபுரம், தமிழகக் கோட்டைகள், இந்தியத் தொல்லியல் துறை, அகழாய்வு
700 : _ _ |a காந்திராஜன் க.த.
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
752 : _ _ |a ஆலம்பரை |c கடப்பாக்கம் |d காஞ்சிபுரம் |f செய்யூர்
906 : _ _ |a கி.பி.1730
914 : _ _ |a 12.2661452
915 : _ _ |a 80.0102027
934 : _ _ |a மாமல்லபுரம், சாளுவன்குப்பம் கோயில்
995 : _ _ |a TVA_MON_00002
barcode : TVA_MON_00002
book category : கோட்டைகள்
Primary File :

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- செங்கல்-கட்டட-அமைப்பு-014.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- அமைந்துள்ள -இடம்-001.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- அமைந்துள்ள-கடற்கரை-002.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- அமைந்துள்ள-கடற்கரை-மணல்வெளி-003.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- அமைப்பு-004.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- தோற்றம்-005.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- மதில்-அமைப்பு-006.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- இடிபாட்டுத்தோற்றம்-007.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- இடிபாட்டு-மதில்-தோற்றம்-008.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- இடிபாட்டு-நீண்ட-மதில்-தோற்றம்-009.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- மதில்-சுவர்-010.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- முழுத்தோற்றம்-011.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- செங்கல்-கட்டட-அமைப்பு-012.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- செங்கல்-கட்டட-அமைப்பு-013.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- செங்கல்-கட்டட-அமைப்பு-015.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- சிதிலமடைந்த-பகுதி-016.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- சிதிலமடைந்த-பகுதி-017.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- சிதிலமடைந்த-பகுதி-018.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- சிதிலமடைந்த-பகுதி-019.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- சிதிலமடைந்த-பகுதி-020.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- சிதிலமடைந்த-பகுதி-வழியே-கடல்-தோற்றம்-021.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- சிதிலமடைந்த-பகுதி-வழியே-கடல்-தோற்றம்-022.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- மேலே-செல்லும்-வழி-023.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- சாளரம்-போன்ற-துவாரம்-024.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- கடலில்-விழுந்துள்ள-கோட்டையின்-இடிபாடு-025.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- கோட்டையின்-இடிபாடு-026.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- கோட்டையின்-இடிபாடும்-கடலும்-027.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- கோட்டையின்-இடிபாடும்-கடலும்-028.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- கோட்டையின்-இடிபாடும்-கடலும்-029.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- கோட்டையின்-இடிபாடும்-கடலும்-030.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- கோட்டையின்-சிதிலப்பகுதி-031.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- கோட்டையின்-சிதிலப்பகுதி-032.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- கோட்டையின்-மதில்-சிதிலப்பகுதி-033.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- கோட்டையின்-அருகிலுள்ள-நினைவுச்சின்னம்-034.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- தொல்லியல்-துறை-தகவல்-பலகை-035.jpg

TVA_MON_00002_ஆலம்பரை_கோட்டை- தொல்லியல்-துறை-தகவல்-பலகை-036.jpg