MARC காட்சி

Back
கமுதிக் கோட்டை
245 : _ _ |a கமுதிக் கோட்டை -
300 : _ _ |a கோட்டை
500 : _ _ |a

          கி.பி. 1713 முதல் கி.பி.1725 வரை சேதுநாட்டை ஆண்ட முத்து விஜய ரகுநாதசேதுபதி என்கிற திருவுடையத்தேவர், பிரான்ஸ் நாட்டுப் பொறியியல் வல்லுநர்களின் உதவியுடன் புதிய வடிவத்தில் கமுதி, பாம்பன், செங்கமடை ஆகிய இடங்களில் மூன்று புதிய கோட்டைகளைக் கட்டினார். இதில் கமுதிக்கோட்டை, வட்டவடிவில் உள்ளது.

          குண்டாற்றின் கரையில் பாறைகள் நிறைந்த மேடான அடர்ந்த காட்டுப் பகுதியில் இந்தக் கோட்டை கட்டப்பட்டுள்ளது. இதன் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் உள்ள பாறைகள் உடைக்கப்பட்டு, கோட்டை கட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளன. வெட்டி எடுக்கப்பட்ட பெரிய அளவிலான பாறைகள், தற்போதும் அந்தப் பகுதியில் கிடைக்கின்றன. பாறைகளை வெட்டியதால் ஏற்பட்ட பள்ளம் அகழிபோல் அமைந்துள்ளது. இதில் ஏழு கண்காணிப்புக் கோபுரங்கள் போன்ற அமைப்பு உள்ளன. இவை வீரர்கள் நின்று காவல்புரியவும், கண்காணிக்கவும், பீரங்கி இயக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

          இந்தக் கோட்டை செங்கற்களால் கட்டப்பட்டு, அதன் உள் மற்றும் வெளிப்புறச் சுவர்களில் பலவிதமான பாறைக் கற்களைக்கொண்டு ஒட்டியுள்ளனர். இதனால் இந்தக் கோட்டை வெளியில் இருந்து பார்க்கும்போது கற்கோட்டை போன்ற அமைப்பில் காணப்படுகிறது. கோட்டையைக் கட்டுவதற்கான செங்கற்களை இங்கேயே தயாரித்துள்ளனர். சிறிய கோட்டையாக இருந்தாலும் இரண்டு அடுக்கு வரிசையில் பாதுகாப்பு இருந்துள்ளது.  இங்கு குழல் ஆதண்டை, நாட்டு வீழி ஆகிய அரியவகை மூலிகைத் தாவரங்கள் உள்ளன.

          கி.பி 1877-ம் ஆண்டு குண்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக, இந்தக் கோட்டையின் பல பகுதிகள் சேதமடைந்தன. கற்கள் பெயர்ந்து வெறும் செங்கல் கோட்டையாக இப்போது காட்சியளிக்கிறது. ராமநாதபுரம் சேதுநாட்டை ஆங்கிலேயர் கைப்பற்றிய பிறகு, அனைத்துக் கோட்டைகளையும் இடித்தபோது இதையும் இடித்து சேதப்படுத்திவிட்டனர்.

520 : _ _ |a

          இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் உள்ள கமுதி கோட்டை 17ம் நூற்றாண்டில் அப்போது இராமநாதபுரம் சீமையை ஆண்ட சேதுபதி மன்னர் உடையத்தேவர் என்பவரால் பிரான்ஸ் நாட்டு பொறியாளர் உதவியுடன் இக்கோட்டையை கட்டினார்,

          பாஞ்சாலங்குறிச்சி போர் வீழ்ச்சிக்கு பின் இக்கோட்டை ஆங்கிலேயர்கள் கைவசமானது, அதற்குமுன் இக்கோட்டையில் ஆயுத கிடங்குகள் அமைத்து போர் வீரர்களுக்கு ஆயுத பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்ததாகவும், ஊமைத்துரை இங்கு தங்கி ஆங்கிலேயர்களுடன் போரிட்டு சன்டையிட்டதாகவும், மருது சகதோரர்கள் இங்கு சில காலம் தங்கி விட்டு சென்றதாவும், இராமநாதபுரத்தில் நடைபெற்ற ஆங்கிலேயர் வரி கேட்பு கூட்டத்திற்கு பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து இராமநாதபுரம் செல்லும் போது  வீரபாண்டியகட்டபொம்மன் இங்கு தங்கி சென்றதாவும்,  இங்கிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பூமிக்கு அடியில் குகைவழி பாதை இருந்ததாகவும், கூறப்படுகிறது.

          இங்கு இதுபோன்ற 9 சுற்று கோட்டைகள் இருந்தது 1877-ஆம் ஆண்டில் குண்டாறு காட்டாற்று வெள்ளத்தில் இக்கோட்டைகள் தண்ணீரில் அடித்து இழுத்து செல்லப்பட்டது, அதனால் தற்போது ஒரு கோட்டை மட்டும் இங்குள்ளது. பின்னர் இக் கோட்டையை 1966-ஆம் ஆண்டு தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் புராதான சின்னமாக அறிவிக்கப்பட்டு தற்போது பாதுகாக்கப்பட்டு வருகிறது.

653 : _ _ |a கமுதிக் கோட்டை, கமுதி, இராமநாதபுரம், வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை, மருது சகோதரர்கள்,கோட்டைமேடு, சேதுபதி மன்னர் உடையத் தேவர், தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, நினைவுச்சின்னம், மரபுச் சின்னம், தொல்லியல் சின்னங்கள்
700 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
710 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
752 : _ _ |a கமுதிக் கோட்டைமேடு |c கமுதிக் கோட்டைமேடு |d இராமநாதபுரம் |f கமுதி
906 : _ _ |a கி.பி.17-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 9.4138495
915 : _ _ |a 78.374995
934 : _ _ |a இராமநாதபுரம் அரண்மனை, இராமேசுவரம், திருப்புல்லாணி, திருஉத்தரகோசமங்கை
995 : _ _ |a TVA_MON_00018
barcode : TVA_MON_00018
book category : கோட்டைகள்
cover :
Primary File :

TVA_MON_00018_கமுதிக்கோட்டை-001.jpg

TVA_MON_00018_கமுதிக்கோட்டை-002.jpg

TVA_MON_00018_கமுதிக்கோட்டை-003.jpg

TVA_MON_00018_கமுதிக்கோட்டை-004.jpg

TVA_MON_00018_கமுதிக்கோட்டை-005.jpg

TVA_MON_00018_கமுதிக்கோட்டை-006.jpg

TVA_MON_00018_கமுதிக்கோட்டை-007.jpg

TVA_MON_00018_கமுதிக்கோட்டை-008.jpg

TVA_MON_00018_கமுதிக்கோட்டை-009.jpg

TVA_MON_00018_கமுதிக்கோட்டை-010.jpg