MARC காட்சி

Back
திருச்செந்தூர் வள்ளிக் குடைவரைக் கோயில்
245 : _ _ |a திருச்செந்தூர் வள்ளிக் குடைவரைக் கோயில் -
300 : _ _ |a குடைவரை
500 : _ _ |a தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரின் கடற்கரையையொட்டி அமைந்துள்ள மணற்பாறையில் சிறியதொரு குடைவரைக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குடைவரைக் கோயிலையொட்டி முன்புறம் சமீபகாலத்திய மண்டபம் முதலான பகுதிகள் குடைவரையின் அழகினை மறைத்த வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. குடைவரையின் உள்ளே செல்ல குறுகிய நுழைவாயிலே அமைக்கப்பட்டுள்ளது. குடைவரையின் உள்ளே சிறிய கருவறைகள் உள்ளன. குடைவரையில் முதலாம் வரகுணனின் கல்வெட்டு காணப்படுகிறது. இக்குடைவரையின் கருவறையைச் சுற்றிவர வலம் வரும் பாதை குறுகலாக குடையப்பட்டுள்ளது. "சாந்தர” வகை குடைவரையாக இது அமைந்துள்ளது. மணற்கல்லினால் குடையப்பட்டுள்ளதால் சிற்பங்கள் அழிந்துள்ளன. இதுபோன்ற குடைவரை கொற்கைக்கு அருகில் "மணப்பாடு " என்ற இடத்திலும் உள்ளது. இக்குடைவரையும் சிதைவுற்ற நிலையில் உள்ளது.
510 : _ _ |a தி.இராசமாணிக்கம், தென்னகக் குடைவரைக் கோயில்கள், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1989. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000.நளினி, மு., கலைக்கோவன், இரா., தென்தமிழ
520 : _ _ |a கோயிலின் வடக்குப்புறத்தில், அமைந்துள்ளது வள்ளிக் குகை. இது குன்றைக் குடைந்து உருவாக்கப்பட்ட ஆலயம். முன் பகுதியில் 16 கால் மண்டபம் உள்ளது. வட பக்கமுள்ள சுவரை, சூரசம்ஹார நிகழ்ச்சி ஓவியங்களாகச் சித்திரிக்கின்றன. வள்ளியம்மையின் தந்தையான நம்பிராஜனும் அவனது படைவீரர்களும் முருகப்பெருமானுடன் போரிட வந்தபோது, வள்ளியம்மை, பயந்து ஒளிந்து கொண்டதுதான் இந்த குகை என்கிறது தலபுராணம். இதனை ‘வள்ளி ஒளிந்த வளிநாடு’ என்றும் குறிப்பிடுவார்கள். குகைக்குள் சென்று மாலை 6 மணிக்குள் வழிபடலாம். குழந்தை வரம் கோரி மலைமீது தொட்டில் கட்டி வணங்கும் பக்தர்கள் ஏராளம். இங்கும் ஒரு தீர்த்தக் கிணறு உள்ளது.
653 : _ _ |a தமிழ்நாடு, குடைவரை, குடவரை, குடைவரைக் கோயில்கள், தென்னகக் குடைவரைகள், தமிழ்நாட்டு குடைவரைக் கோயில்கள், பாண்டியர் குடைவரைகள், குகை, குகைக் கோயில், திருச்செந்தூர், வள்ளி குகை, வள்ளி குடைவரை, வள்ளி குகைக் கோயில், திருச்செந்தூர் குடைவரைக் கோயில், தூத்துக்குடி, தொல்லியல் சி்ன்னம், முற்காலப் பாண்டியர் குடைவரைகள், சின்னம், தமிழக வரலாற்றுச் சின்னங்கள், தமிழகத் தொல்லியல், தூத்துக்குடி மாவட்டத் தொல்லியல், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
700 : _ _ |a சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம்
752 : _ _ |a திருச்செந்தூர் முருகன் கோயில்-வள்ளி குகை |c திருச்செந்தூர் |d தூத்துக்குடி |f திருச்செந்தூர்
906 : _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 8.4974132040999
915 : _ _ |a 78.130124040864
934 : _ _ |a திருச்செந்தூர், தூத்துக்குடி துறைமுகம், கொற்கை அகழாய்விடம்
995 : _ _ |a TVA_MON_00122
barcode : TVA_MON_00122
book category : குடைவரைக் கோயில்கள்
cover :
Primary File :

TVA_MON_00122/TVA_MON_00122_தூத்துக்குடி_திருச்செந்தூர்_வள்ளிக்-குகை-0001.jpg

TVA_MON_00122/TVA_MON_00122_தூத்துக்குடி_திருச்செந்தூர்_வள்ளிக்-குகை-0002.jpg

TVA_MON_00122/TVA_MON_00122_தூத்துக்குடி_திருச்செந்தூர்_வள்ளிக்-குகை-0003.jpg

TVA_MON_00122/TVA_MON_00122_தூத்துக்குடி_திருச்செந்தூர்_வள்ளிக்-குகை-0004.jpg