MARC காட்சி

Back
சாளுவன் குப்பம் குடைவரை
245 : _ _ |a சாளுவன் குப்பம் குடைவரை -
300 : _ _ |a குடைவரை
500 : _ _ |a காஞ்சிபுரம் மாவட்டம் செங்கற்பட்டு வட்டத்தில் மாமல்ல புரத்தின் வடக்கே 2 கிமீ. தொலைவில் அமைந்துள்ள ஊர் சாளுவன்குப்பம் அதிரணசண்ட பல்லவேஸ்வரம். இதன் அருகில் சிறிய பாறையின் சரிந்த கிழக்கு முகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடைவரைக்கோயில் அதிரணசண்ட பல்லவேஸ்வர கிருஹம்" என்று கல்வெட்டுகளில் அழைக்கப்படுகிறது. சரிவான பாறைப்பகுதியில் குடைவு செய்துள்ளமையால் குடைவரையின் கீழ்ப்பகுதி 6 அடி உள்நோக்கி குடையப்பட்டுள்ளது. நீண்ட சதுரமான அமைப்பைக் கொண்ட இம்மண்டபத்தின் நடுவே இரண்டு தூண்களும் இருபுறச் சுவர்களில் இரண்டு அரைத்தூண்களும் மட்டுமேயுள்ளன. தூண்கள் கீழும் மேலும் சதுரமாகவும் நடுவில் எட்டு பட்டைகளாகவும் குடையப்பட்டுள்ளன. பின்புறச் சுவரில், நடுவே சிறிய கருவறை யொன்று குடையப்பட்டுள்ளது. இதன் வாயிற் சுவர்கள் சற்றே வெளிப்புறம் நீட்டிக்கப்பட்டு மண்டபப் பகுதியில் அமைக்கப்பட்டது போன்றமைந்துள்ளது. கருவறையில் உள் தளவரிசை மண்டபத் தளவரிசையை விட சற்றே உயரமாக அமைந்துள்ளது. அரைத்தூண்களின் அருகில் இரண்டு பக்கமும் கல்வெட்டுகள் உள்ளன. வடக்குப்புறம் உள்ள கல்வெட்டு "நாகரி" எழுத்திலும் தெற்கேயுள்ளது பல்லவ கிரந்த எழுத்திலும் காணப்படுகின்றன. ஒரே செய்தியைக் கூறும் இவ்விரு கல்வெட்டுகளும் இக்குடைவரையை "அதிரணசண்ட பல்லவேஸ்வர கிருஹம்” என்று குறிப்பிடுகிறது. அர்த்த மண்டபக் கூரையின் உள்பகுதியும் கருவறையும் சரியாகக் குடையப் படவில்லை . கருவறை வாயிலின் இருபுறமும் இரு வாயிற்காவலர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையிலுள்ள 16 பட்டைகள் கொண்ட கருநிற தாரலிங்கமும் ஆவுடையாருடன் காணப்படுகிறது. கருவறைப் பின்புறச் சுவரில் பல்லவர்கால சிற்பங்களிலேயே சிறப்புடன் விளங்கும் சோமாஸ்கந்தர் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. ஒரு குடையின்கீழ் அமர்ந்த நிலையில் உமையுடன் சிவன் இருக்க நடுவில் கந்தன் அமர்ந்துள்ளான். இத்தொகுதியின் இருபக்கமும் திருமால், நான்முகன் காணப்படுகின்றனர். இதே அமைப்புடைய சோமாஸ்கந்தர் புடைப்புச் சிற்பங்கள் இரண்டு, மண்டபத்திலும் காணப்படுகிறது. தாரலிங்கமும் சோமாஸ்கந்தரின் புடைப்புச் சிற்ப உருவங்களும் இக்குடைவரை இராஜசிம்மனால் நிறுவப்பட்டு இருக்கலாம் எனக் குறிக்கின்றன. "அதிரணசண்டன்" என்பது இராஜசிம்மனின் விருதுப்பெயரே என்பது இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கது. குடைவரையின் எதிரில் உள்ள பாறையின் தரைப்பகுதியில் முதலாம் இராஜராஜனின் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இக்கல்வெட்டு விளக்கெரிக்க கொடுத்த கொடையைப் பற்றி கூறுகிறது. இக்குடைவரைக்குத் தெற்கே உள்ள பாறையொன்றில் மகிஷாசுரமர்த்தினியின் புடைப்புச்சிற்பம் காணப்படுகிறது. இதில் கொற்றவை இடது காலை சிம்மத்தின் மீதமர்த்தி வில்பிடித்து மகிஷனுடன் போரிடுகின்றாள். கணங்கள் சூழ கொற்றவை போரிடும் காட்சி எழிலுடன் காணப்படுகிறது.
510 : _ _ |a தி.இராசமாணிக்கம், தென்னகக் குடைவரைக் கோயில்கள், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1989. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000.நளினி, மு., கலைக்கோவன், இரா., தென்தமிழ
520 : _ _ |a தமிழ்நாட்டிலுள்ள பல்லவர் காலக் குடைவரைகளுள் ஒன்றான சாளுவன்குப்பம் அதிரணசண்ட பல்லவேசுவரம் என்னும் குடைவரை சிவன் கோயில் சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கிச் செல்லும் சாலைக்கு அண்மையில், மாமல்லபுரத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாளுவன்குப்பம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. கடற்கரைக்கு அண்மையில் காணப்படும் பாறையொன்றின் கிழக்குப் பக்கத்தில் குடைந்து, உருவாக்கப்பட்டுள்ள இக்கோயில் கடலைப் பார்த்தபடி உள்ளது. இராசசிம்மன் பல்லவனின் காலத்தில் குடையப்பட்ட சிவனுக்கான இக்குடைவரைக் கோயிலில் கைலாய மலையில் பார்வதி தேவியுடனும் குழந்தை முருகனுடனும் வீற்றிருக்கும் பரமேசுவரன் இங்கும் என்றென்றும் நிலைத்து தங்கி இருப்பாராக என்ற கல்வெட்டு காணப்படுகின்றது. இங்கே காணப்படும் கிரந்தம் மற்றும் நாகரி எழுத்துக்களிலான கல்வெட்டுக்கள் இக்கோயிலை அதிரணசண்ட பல்லவேசுவர கிருஹம் எனக் குறிப்பிடுகின்றன. அதிரணசண்டன் என்னும் விருதுப் பெயர் கொண்ட இராஜசிம்ம பல்லவன் காலத்திலேயே இக் குடைவரை அமைக்கப்பட்டது என்பது வரலாற்று ஆய்வாளர் கருத்து. நீள்சதுரத் தள அமைப்பைக் கொண்ட இக்குடைவரையின் பின்புறச் சுவரில் கருவறை குடையப்பட்டுள்ளது. முகப்பில் இரண்டு பக்கச் சுவர்களுடனும் ஒட்டியபடி இரண்டு அரைத்தூண்களும், நடுவில் இரண்டு தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.
653 : _ _ |a தமிழ்நாடு, குடைவரை, குடவரை, குடைவரைக் கோயில்கள், தென்னகக் குடைவரைகள், தமிழ்நாட்டு குடைவரைக் கோயில்கள், குகை, குகைக் கோயில், சாளுவன்குப்பம், மாமல்லபுரம், சாளுவங்குப்பம், யாளிக்குகை, புலிக்குகை, அதிரணசண்ட பல்லவேசுவர கிருஹம், இராஜசிம்மன், இராசசிம்மன், குடைவரை, பல்லவர் குடைவரைகள், பல்லவர், தொண்டை நாட்டுக் குடைவரைகள், மத்தியத் தொல்லியல் துறை, இந்திய தொல்லியல் பரப்பாய்வுத்துறை, சங்க கால முருகன் கோயில்
700 : _ _ |a சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம்
752 : _ _ |a அதிரணச் சண்டேசுவர கிருஹம் |c சாளுவன் குப்பம் |d செங்கல்பட்டு |f மாமல்லபுரம்
906 : _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 12.658084459917
915 : _ _ |a 80.209513473422
934 : _ _ |a சங்க கால முருகன் கோயில், நித்தியக் கல்யாணப் பெருமாள் கோயில், மாமல்லபுரம்
995 : _ _ |a TVA_MON_00116
barcode : TVA_MON_00116
book category : குடைவரைக் கோயில்கள்
cover :
Primary File :

TVA_MON_00116/TVA_MON_00116_காஞ்சிபுரம்_சாளூவன்குப்பம்_குடைவரைக்-கோயில்-0001.jpg

TVA_MON_00116/TVA_MON_00116_காஞ்சிபுரம்_சாளூவன்குப்பம்_குடைவரைக்-கோயில்-0002.jpg

TVA_MON_00116/TVA_MON_00116_காஞ்சிபுரம்_சாளூவன்குப்பம்_குடைவரைக்-கோயில்-0003.jpg

TVA_MON_00116/TVA_MON_00116_காஞ்சிபுரம்_சாளூவன்குப்பம்_குடைவரைக்-கோயில்-0004.jpg

TVA_MON_00116/TVA_MON_00116_காஞ்சிபுரம்_சாளூவன்குப்பம்_குடைவரைக்-கோயில்-0005.jpg