| 245 |
: |
_ _ |a இலாடன் கோயில் குடைவரை - |
| 300 |
: |
_ _ |a குடைவரை |
| 500 |
: |
_ _ |a முகப்பில் இரண்டு தூண்களும் பக்கவாட்டில் இரு அரைத்தூண்களும் கொண்ட குடைவரைக் கோயில் இது. தூண்கள், கீழ்ப்புறமும் மேற்புறமும் சதுரமாகவும் நடுவில் எட்டுபட்டை கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு இடையே பட்டையுடன் கூடிய தரங்கப் போதிகைகள் அமைக்கப்பட்டுள்ளன. தூண்களின் சதுரங்களில் தாமரை இதழ்கள் செதுக்கப்பட்டுள்ளன. இருபக்கங்களிலும் செல்லும் வாயிற்படிகள் இரண்டிற்கும் நடுவில் உள்ள பாறைப்பகுதியில், கணேசரின் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. குடைவரை அர்த்த மண்டபம், கருவறை ஆகியவற்றுடன் விளங்குகிறது. கருவறையின் பின்சுவரில் முருகப்பெருமானும் அவருடைய தேவி தேவசேனையும் நீள்சதுர மேடையில் அமர்ந்தநிலையில் இரு கைகளுடன் அழகுடன் காட்சி தருகின்றனர். தலையில் கரண்ட மகுடமும் நெற்றியின் முன்பு சுருள் முடியும் செவிகளில் மகரகுண்டலமும் கைகளில் வாகுவளை, கங்கணம் ஆகியவை பெற்றும் முருகன் காட்சியளிக்கின்றார். ஒரு கையைத் தொடையில் இறுத்தி பிறிதொருகையில் "கர்த்தாரி" முத்திரைக் காட்டி மிடுக்குடன் முருகன் அமர்ந்துள்ளார். தேவி கரண்ட மகுடமும் பெருத்த குண்டலங்களும் கைகளில் அணிகலன்களும் மார்பில் கச்சையும் பெற்று விளங்குகிறார். இக்குடைவரையில் காணப்படும் தூண்களின் அமைப்பு, போதிகை மற்றும் தாமரை இதழ்கள் போன்ற சிற்பங்கள் யாவும் பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் குடைவரைப் பாணி போன்று அமைந்துள்ளன. கருவறையின் முகப்பில் பத்மம், வரிமானம், முப்பட்டைக்கு முதம், கண்டம், பிரதி போன்றவை அடங்கிய அதிட்டான அமைப்பும் அதனுடன் பூதகணங்களுடன் கூடிய நான்கு அரைத் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையின் வாயிற்புறத்தின் இரு பக்கங்களிலும் இரண்டு கைகளுடன் கூடிய வாயிற்காவலர் காணப்படுகின்றனர். ஒரு கையில் மலர்மாலையும் பிறிதொரு கை இடுப்பின் மீது வைத்தவாறு இவர்கள் காட்டப்பட்டுள்ளனர். தென்புறம் அமைந்துள்ள உருவத்தின் ஆடையின் மடிப்புகள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. கருவறை வாயிற்படியின் தென்புறத்தில் சேவலும், வடக்கே மயிலும் காணப்படுகின்றன. அர்த்த மண்டபத்தின் தென்பகுதியில் மண்டியிட்டு அமர்ந்த சிற்பம் பாண்டிய மன்னனின் உருவமாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். பராந்தக மாறன் சடையன் காலத்தைச் சேர்ந்த லாடன் கோயில் எனப்படும் முருகன் கோயில் கருவறையில் முருகனும் தேவயானையும் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கின்றனர். இதில் முருகன் முப்புரி நூலும் போர்த் தெய்வங்கள் அணியும் சன்ன வீரம் என்னும் அணிகலனும் அணிந்துள்ளான். தேவயானை கையில் மலர்ச் செண்டு தாங்கியபடி சற்றுச் சாய்ந்த நிலையில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறாள். கருவறையின் வெளிச்சுவரில் பூத கணங்கள் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன. அவைகளை அடுத்து முருகனுடைய சேவல் கொடியும் வாகனமான மயிலும் இடம் பெற்றுள்ளன. கோட்டங்களில் (சுவரில் மாட அமைப்பில் குடையப்பட்ட இடம்) வலப்புறம் ஒரு பக்தனும், இடப்புறம் கோயிலைக் கட்டுவித்ததாகக் கருதப்படும் பட்டக்குறிச்சி சோமாசியார் என்னும் அந்தணரும், காணப்படுகின்றனர். சோமாசியாருக்கருகே பாண்டிய மன்னன் அவரை மண்டியிட்டு வணங்குவது போலச் செதுக்கப்பட்டுள்ளான். |
| 510 |
: |
_ _ |a தி.இராசமாணிக்கம், தென்னகக் குடைவரைக் கோயில்கள், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1989. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000.நளினி, மு., கலைக்கோவன், இரா., தென்தமிழ |
| 520 |
: |
_ _ |a நரசிம்மரின் குடைவரையை அடுத்து மேற்கு நோக்கிய மலைச்சரிவில் மேலும் ஒரு குடைவரை அமைக்கப்பட்டுள்ளது. குடைவரைமேல் செல்ல இருபக்கங்களிலும் கைப்பிடியுடன் கூடிய படிக்கட்டுகள் தாய்ப்பாறையிலேயே வெட்டப்பட்டுள்ளன. இது நாமக்கல் குடைவரை அமைப்பைப் போன்று உள்ளது. இக்குடைவரையை "இலாடன் கோயில்" என்றும் அழைக்கின்றனர். இக்குடைவரையில் காணப்படும் கல்வெட்டின் மூலம் "சோமாசிப்பட்ட பரிவாரஜகன்" என்பவர் சில திருப்பணிகளை மேற்கொண்டார் என்பது தெரிய வருகிறது. |
| 653 |
: |
_ _ |a தமிழ்நாடு, குடைவரை, குடவரை, குடைவரைக் கோயில்கள், தென்னகக் குடைவரைகள், தமிழ்நாட்டு குடைவரைக் கோயில்கள், பாண்டியர் குடைவரைகள், குகை, குகைக் கோயில், இலாடன் கோயில், முருகன் குடைவரை, முற்காலப் பாண்டியர் குடைவரை, ஒத்தக்கடை, நரசிங்கப் பெருமாள் கோயில், ஆனைமலை, யானைமலை, யானைமலை அடிவாரக் குடைவரை, மதுரை, மதுரை மாவட்ட மரபுச் சின்னங்கள், தொல்லியல் சின்னம், தமிழக வரலாற்றுச் சின்னங்கள், தமிழகத் தொல்லியல், மதுரைத் தொல்லியல், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 700 |
: |
_ _ |a சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| 752 |
: |
_ _ |a ஆனைமலை நரசங்கப்பெருமாள் கோயில் பின்புறம் |c ஒத்தக்கடை |d மதுரை |f மதுரை கிழக்கு வட்டம் |
| 906 |
: |
_ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு |
| 914 |
: |
_ _ |a 9.9674039698718 |
| 915 |
: |
_ _ |a 78.189539554319 |
| 934 |
: |
_ _ |a ஆனைமலை நரசிங்கப் பெருமாள் கோயில், ஆனைமலை பிராமிக் கல்வெட்டு |
| 995 |
: |
_ _ |a TVA_MON_00101 |
| barcode |
: |
TVA_MON_00101 |
| book category |
: |
குடைவரைக் கோயில்கள் |
| cover |
: |
|
| Primary File |
: |
TVA_MON_00101/TVA_MON_00101_மதுரை_இலாடன்-கோயில்_குடைவரைக்-கோயில்-0001.jpg
TVA_MON_00101/TVA_MON_00101_மதுரை_இலாடன்-கோயில்_குடைவரைக்-கோயில்-0002.jpg
TVA_MON_00101/TVA_MON_00101_மதுரை_இலாடன்-கோயில்_குடைவரைக்-கோயில்-0003.jpg
TVA_MON_00101/TVA_MON_00101_மதுரை_இலாடன்-கோயில்_குடைவரைக்-கோயில்-0004.jpg
TVA_MON_00101/TVA_MON_00101_மதுரை_இலாடன்-கோயில்_குடைவரைக்-கோயில்-0005.jpg
TVA_MON_00101/TVA_MON_00101_மதுரை_இலாடன்-கோயில்_குடைவரைக்-கோயில்-0006.jpg
TVA_MON_00101/TVA_MON_00101_மதுரை_இலாடன்-கோயில்_குடைவரைக்-கோயில்-0007.jpg
TVA_MON_00101/TVA_MON_00101_மதுரை_இலாடன்-கோயில்_குடைவரைக்-கோயில்-0008.jpg
|