MARC காட்சி

Back
வீரபாண்டிச் செப்பேடு
245 : _ _ |a வீரபாண்டிச் செப்பேடு -
300 : _ _ |a 34.5 செ.மீ. நீளம், 22.5 செ.மீ. அகலம்
500 : _ _ |a

மதுரையிலிருந்து கம்பம் செல்லும் சாலையில் தேனி அடுத்து சுருளி ஆற்றங்கரையில் உள்ள ஊர் வீரபாண்டி. இங்கு பாண்டியனுக்கு கண்பார்வை கொடுத்தவராகக் கருதப்படும் கண்ணீச்வரம் உடையார் கோயில் பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுகள் மற்றும் கலைப்பாணியில் உள்ளது. காமாட்சியம்மன் பக்தர்களாகிய “யாகசத்திரிய தெலுங்க தேசாதிபதிகள்“ வம்சத்தில் வந்த புல்லன் செட்டி வழியினர் வடக்கில் உள்ள கண்ணனூரிலிருந்து கௌமாரியம்மனை தங்களுடன் மதுரைக்குக் கொண்டு வந்து, பின்னர் வீரபாண்டியில் புல்லை நல்லூர் என்ற ஊரினை ஏற்படுத்தி அங்கு கோயில் கட்டி மாரியம்மனை வைத்து வழிபடத் தொடங்கினர். இத்தெய்வம் நோய்கள் தீர்க்கும் சக்தியும் அறுந்த தலையைச் சேர்த்துவிடும் சக்தியும் உடையதாக இருந்தது. போருக்குச் சென்று இவ்வூர் வழியாகத் திரும்பிய விசுவநாத நாயக்கர் இவ்வூர் சிவபெருமான் மற்றும் மாரியம்மனின் சிறப்புகளை அறிந்து வழிபட்டு மகிழ்ந்தார். மேலும் இம்மாரியம்மனுக்குச் சீதனமாக புல்லை நல்லூர் நான்கு எல்லைகளையும் ஒட்டி மூன்றே கால் நாழிகை அளவு தூரம் விரிந்த எல்லைப் பரப்பு நிலங்கள் மற்றும் அதனைச் சேர்ந்த நீர் நிலைகளை தாசன் செட்டி மகன் புல்லன் செட்டிக்குக் கொடுத்து மாரியம்மனுக்குத் திருவிழா நடத்தி வர செப்புப் பட்டையம் கொடுத்துள்ளார். மேலும் இவர்கள் பிற தெய்வங்களுக்கு நடத்தி வருகின்ற தர்மங்களும், குளம் முதலிய தர்மங்களும் சொல்லப்பட்டு அவற்றிற்கு உள்ள மான்யங்களும் நடந்து வர பொன் தீர்வை நீக்கப்பட்டதும் சொல்லப்படுகிறது. மாரியம்மனுக்கும் “கம்பம்“ நட்டு நீர் ஊற்றி வழிபடும் திருவிழா விவரமும் பிறவும் சொல்லப்பட்டுள்ளன.

510 : _ _ |a தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2005
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், விசுவநாத நாயக்கர், நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், வீரபாண்டி, தேனி
752 : _ _ |a போடிநாயக்கனூர் |c போடிநாயக்கனூர் |d தேனி
905 : _ _ |a நாயக்கர் / விசுவநாத நாயக்கர்
906 : _ _ |a 20-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 10.010572
915 : _ _ |a 77.3496708
925 : _ _ |a 34.5 செ.மீ. நீளம், 22.5 செ.மீ. அகலம்
995 : _ _ |a TVA_CPS_00028
barcode : TVA_CPS_00028
book category : விசயநகரர், நாயக்கர்
cover :
Primary File :

TVA_CPS_00028_வீரபாண்டி-001.jpg

TVA_CPS_00028_வீரபாண்டி-002.jpg

TVA_CPS_00028_வீரபாண்டி-003.jpg

TVA_CPS_00028_வீரபாண்டி-004.jpg

TVA_CPS_00028_வீரபாண்டி-005.jpg

TVA_CPS_00028_வீரபாண்டி-006.jpg

TVA_CPS_00028_வீரபாண்டி-007.jpg

TVA_CPS_00028_வீரபாண்டி-008.jpg

TVA_CPS_00028_வீரபாண்டி-009.jpg

TVA_CPS_00028_வீரபாண்டி-010.jpg

TVA_CPS_00028_வீரபாண்டி-011.jpg

TVA_CPS_00028_வீரபாண்டி-012.jpg

TVA_CPS_00028_வீரபாண்டி-013.jpg

TVA_CPS_00028_வீரபாண்டி-014.jpg

TVA_CPS_00028_வீரபாண்டி-015.jpg

TVA_CPS_00028_வீரபாண்டி-016.jpg

TVA_CPS_00028_வீரபாண்டி-017.jpg