| 245 | : | _ _ |a வடமொழிச் செப்பேடு - |
| 300 | : | _ _ |a 21 செ.மீ X 15 செ.மீ |
| 500 | : | _ _ |a சிதம்பரம் தலம் பற்றிய மிகமிக முக்கியமான வரலாற்றுச் செய்தியை இச்செப்பேடு கூறுகிறது. சிதம்பரம் நடராசர் கோயிலில் 76 ஆண்டுகள் பூசை இல்லாமல் இருந்தது. 23.4.1337 அன்று விசயநகர மன்னர் இரண்டாம் ஹரிஹரன் காலத்தில் (1377 - 1404) 76 ஆண்டுகளுக்குப் பின் 77 ஆம் ஆண்டு பூசை முன்பு போலச் சிறப்பாக நடைபெற்றது. வழுதலம்பட்டு ராச்சியத்தைச் சேர்ந்த சிதம்பரம் சபாநாதர் ஆகிய நடராசருக்கு 6000 பொற்காசுகளை விருபாட்சன் கொடுத்தான். அவன் மன்னன் ஹரிஹரனின் சகோதரன். அவனே கோயிலில் நடராசரைப் பிரதிட்டை செய்து பூசையைத் தொடங்கியவன். மாலிக்காபூர் 1131இல் தமிழ்நாட்டின் மீது படையெடுத்தான். அவ்வாண்டு தொடங்கி 76 ஆண்டுகள் சிதம்பரத்தில் பூசை இல்லை என்பதை அறிகிறோம். பீஜப்பூர் சுல்தான் படையெடுப்பின்போதுகூட 24.12.1648 முதல் 4.1.1686 முடியச் சிதம்பரத்தில் இருந்த நடராசர் படிவம் குடுமியா மலையிலும், மதுரையிலும் வைத்துப் பாதுகாக்கப்பட்டதாகத் திருவாரூர்க் கோயிலில் உள்ள செப்பேடுகள் கூறுகின்றன. இது பற்றிய நான்கு செப்பேடுகள் தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் நூலில் வெளியாகியுள்ளன. சில மாதங்கள் கழித்து ஹரிஹரனும் 2000 பொன் கொடையாக அளித்துள்ளான். முன்பு இருந்தவாறே பூசை முதலியன செய்யத் தக்க ஏற்பாடுகள் செய்யப் பெற்றன. |
| 510 | : | _ _ |a செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், கொங்கு ஆய்வு மையம், |
| 546 | : | _ _ |a வடமொழி-கிரந்தம் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், திருப்பனந்தாள், திருவிடைமருதூர், வடமொழிச் செப்பேடு, கிரந்தம், சிதம்பரம், இரண்டாம் ஹரிஹரன், விசயநகர காலம், விஜயநகரம் |
| 752 | : | _ _ |a திருப்பனந்தாள் |c திருப்பனந்தாள் |d தஞ்சாவூர் |f திருவிடைமருதூர் |
| 905 | : | _ _ |a விஜயநகரம் / இரண்டாம் ஹரிஹரன் (1377-1404) |
| 906 | : | _ _ |a 23.4.1337 |
| 914 | : | _ _ |a 11.09156091 |
| 915 | : | _ _ |a 79.45621786 |
| 925 | : | _ _ |a 21 செ.மீ X 15 செ.மீ |
| 995 | : | _ _ |a TVA_CPS_00175 |
| barcode | : | TVA_CPS_00175 |
| book category | : | விசயநகரர், நாயக்கர் |
| cover | : |
|
| Primary File | : |