000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a அர்ஜூனன் தவம் |
300 | : | _ _ |a புராணச் சிற்பம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a புடைப்புச் சிற்பமாக அமைந்த கங்கைக் கரை காட்சி |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a அர்ச்சுனன் தபசு என்னும் இச்சிற்பத் தொகுதி மாமல்லையின் சிறப்பு வாய்ந்த, புதுமைக்குரிய, வியத்தகு, தலைசிறந்த கலை வடிவமாகும். சுமார் 30 மீட்டர் உயரம், சுமார் 60 மீட்டர் அகலம் கொண்ட, சிற்பங்கள் செதுக்கப்பட்ட பாறையே அர்ச்சுனன் தபசு என்றழைக்கப் படுகிறது. இயற்கையாக அமைந்த இரு பாறைப் பிளவுகளுக்கு இடையே வீழும் மழையின் நீர் வீழ்ச்சியை கங்கையென புனைந்து கொண்டு, இவ்விரு பாறைகளிலும் நடுவில் வீழும் கங்கையைக் காண வரும் உயிர்க்குலங்களை சிற்பமாக படைத்துள்ளனர் பல்லவ சிற்பிகள். மிகச்சிறந்த, கற்பனை வளம் வாய்ந்த, உயிரோட்டமுள்ள சிற்பத் தொகுதியிது. வானவர்கள், மனிதர்கள், மிருகங்கள் எனப் பலவகையான உருவங்கள் இச்சிற்பத் தொகுதியில் காணப்படுகின்றன. இச்சிற்பத் தொகுதி அர்ச்சுனன் தவமா? அல்லது பகீரதன் தவமா? என்ற கேள்விக்குள்ளாகிறது. இச்சிற்பத் தொகுதியில் சிவன் தன் கையில் பாசுபதம் என்னும் அஸ்திரத்தைக் கொண்டுள்ளார். அவர் அருகில் தவம் செய்யும் முனிவர் காட்டப்பட்டுள்ளார். இதனைக் கொண்டே இச்சிற்பத் தொகுதி அர்ச்சுனன் தவக்காட்சி சிற்பம் எனப்படுகிறது. மகேந்திரவர்ம பல்லவர் சமண சமயத்தில் இருந்த போது, சமண மதக் கதைகளை மாமல்லபுரத்தில் சிற்பமாக வடிவெடுத்தான். அதிலே ஒன்று தான், அர்ச்சுனன் தபசு எனும் சொல்லப்படும் சிற்பம். காலத்தால் அது பஞ்சபாண்டவர்களின் கதைகளோடு மாற்றி எழுதப்பட்டது. இதன் உண்மை வரலாறு என்னவென்று பார்க்கும் போது, சகர குமாரர்கள், கயிலாய மலையைச் சூழ்ந்து அகழி தோண்டி அதில் கங்கையாற்று நீரைப் பாய்ச்ச எண்ணினர். ஆனால், அதுவே வெள்ளமாக உருவெடுத்து சுற்று வட்டார நாடுகளை அழிக்க முனைந்த போது, பகீரதன் அந்த கங்கை வெள்ளத்தை கடலில் கலக்குமாறு செய்து, நாடு நகரத்தையும், மக்களையும் காப்பாற்றினார். இந்தக் கதையைக் கேள்விப்பட்டு தான் மகேந்திரவர்ம பல்லவன் சிற்பமாக வடிவெடுக்க ஆணையிட்டார் என்றும் கூறப்படுகிறது. |
653 | : | _ _ |a அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தவம், பகீரதன் தவம், கங்கைக் கரை காட்சி, கங்கை பூமிக்கு வருதல், மாமல்லை, மாமல்லபுரம், மாமல்லபுரம் சிற்பங்கள், பல்லவர் சிற்பங்கள், பஞ்சபாண்டவ ரதங்கள், பல்லவர் கால குடைவரைகள், தொண்டை மண்டலம், காஞ்சிபுரம் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a மாமல்லபுரம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c மாமல்லபுரம் |d காஞ்சிபுரம் |f திருக்கழுக்குன்றம் |
905 | : | _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
914 | : | _ _ |a 12.626927 |
915 | : | _ _ |a 80.1927109 |
995 | : | _ _ |a TVA_SCL_000445 |
barcode | : | TVA_SCL_000445 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |