000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a முருக நாயனார் |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a மலர்களால் மகேசனை பூசித்து முந்து வினை துறந்த முருக நாயனார் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a சோழநாட்டின் திருப்புகலூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் முருக நாயனார். அவர் தீதில்லா மனத்தோடு இறைவனை சிந்தையிற் கொண்டவர். நாள்தோறும் அதிகாலையில் எழுந்து திருக்குளத்தில் மூழ்கி இறைவனின் பூசனைக்குரிய கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ எனப்படும் நால்வகைப் பூக்களை கொய்து பூக்குடலில் இட்டு, தனியிடத்திற் அமர்ந்து இறைவனின் ஆறுகால பூசனைக்கான திருமாலைகளைத் தொடுப்பார். திருப்புகலூரில் உள்ள வர்த்தமானீச்சுவரருக்கு அத்திருமாலைகளை சூட்டி அணி செய்து உள்ளம் நிறைவு பெறுவார். அவ்வேளையில் ஒரு முறை திருப்புகலூருக்கு வருகை புரிந்த திருஞானசம்பந்தரை எதிர்கொண்டு அழைத்து வந்தார். அவரின் நண்பராகி சிவ பெருமைகளை அளவளாவி மகிழ்ந்தார். திருநல்லூர்ப் பெருமணத்தில் நிகழ்ந்த சம்பந்தரின் திருமண விழாவிற் கலந்துகொண்டு பெருமானடி நீழலில் தலையாம் நிலைமை சார்வுற்றார். இச்சிற்பத்தில் முருக நாயனார் தாம் தொடுத்த மாலையை இறையனார்க்கு அளிக்கும் காட்சி வடிக்கப்பட்டுள்ளது. மேலே முருக நாயனாரின் பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. |
653 | : | _ _ |a முருக நாயனார், முருகனார், 63 நாயன்மார், தாராசுரம், ஐராவதேஸ்வரர் கோயில், இரண்டாம் இராஜராஜன், பிற்காலச் சோழர் கலைப்பாணி, பிற்காலச் சோழர் சிற்பங்கள், சிவன் கோயில், சிவத்தலங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தாராசுரம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
905 | : | _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
914 | : | _ _ |a 10.94856342 |
915 | : | _ _ |a 79.35650614 |
995 | : | _ _ |a TVA_SCL_000359 |
barcode | : | TVA_SCL_000359 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |