000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a திருநீலகண்ட நாயனார் |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a திருநீல கண்டத்துக் குயவனார் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a நாயன்மார்களுள் ஒருவராகிய திருநீலகண்டர் தில்லையிற் குயவற் குலத்தில் பிறந்தவர். சிவனடியார் அமுதுண்ண திருவோடுகளை செய்தளிக்கு சிவப்பணியை இடையறாது செய்து கொண்டு திருநீலகண்டம் என்னும் சிவ நாமத்தை சிந்தையில் அல்லும் பகலும் ஓதி வந்தார். அவருக்கு பொது மகளிருடன் இருந்த தொடர்பினால் அவருடைய மனைவி அவருடன் உடனுறைவுக்கு இசையாதிருந்தார். வேட்கை மிகுதியால் மனைவியைத் தீண்ட சென்ற நீலகண்ட குயவனாரை அவர் தம் மனைவி “எம்மைத் தீண்டுவாராயின் திருநீலகண்டம்“ திருநீலகண்டத்தின் ஆணையாக எனைத் தீண்டுதல் ஆகாது என்று கூறினார். திருநீலகண்டத்தின் மீது கூறப்பட்ட மெய்ம்மொழிக்கு கட்டுண்ட நீலகண்டர் அன்றிலிருந்து மனைவியையும் பிற மாதரையும் சிந்தையாலும் தொடாதிருந்தார். நாட்கள் பல கழிந்த நிலையில் முதுமையடைந்த அத்தம்பதியர் தம் விரதத்தை விடாமற் மேற்கொண்ட ஞான்று அவ்வுயர்ந்த கற்பினை உலகறியச் செய்ய திருவுளம் கொண்ட இறையனார் சிவனடியார் வேடங்கொண்டு தனது திருவோட்டினை நீலகண்ட குயவனாரிடம் கொடுத்து பாதுகாக்கச் சொல்லி, தமது விளையாடலால் அதனை மறைக்கவும் செய்தார். பின்பொரு நாள் அடியார் வேடம் பூண்ட இறையனார் வந்து அவ்வோட்டை கேட்கவும், மறைக்கப்பட்ட அத்திருவோட்டைக் காணாது நீலகண்ட நாயனார் திகைத்தார். அடியாரோ தம்பதியர் ஒருவரையொருவர் பற்றியபடி குளத்தில் மூழ்கி சத்தியம் செய்து இக்கூற்றினை கூற வேண்டும் என தில்லை அந்தணர்கள் முன் உரைத்தார். தில்லை வாழ் அந்தணர்களும் அவ்வாறே உரைத்தனர். தம் இல்லற சபதத்தை வெளியே உரைக்கவியலாத நீலகண்ட தம்பதியினர் மூங்கில் கழியொன்றை இருவரும் பொதுவாக பற்றியபடி குளத்தில் இறங்கினர். அப்பொழுது சிவயோகியார் “மனைவியின் கையைப் பிடித்து மூழ்குக" என வற்புறுத்தினார். அது செய்யமாட்டாத சபதத்தை அங்குள்ளோர் அனைவரும் கேட்கும் வண்ணம் வெளிப்படுத்தித் திருநீலகண்டர் மனைவியாருடன் குளத்தில் மூழ்கினார். மூழ்கிக் கரையேறும் திருநீலகண்டரும் மனைவியாரும் முதுமை நீங்கி இளமைக் கோலத்தில் தோன்றினார்கள். அந்த அற்புதக் கண்ட அனைவரும் சிவயோகியாரைக் காணாது மருண்டு நின்றனர். மறைந்த இறையவர் உமையம்மையாரோடு, வெள்ளையெருதின் மீது தோன்றி 'புலனை வென்ற பெரியோர்களே! இவ்விளமையோடு என்றும் எம்மை நீங்காதிருப்பீர்களாக" என்றருளி மறைந்தருளினார். நாயனாரும் துணைவியாரும் இவ்வுலகிலே இறைபணியாற்றிச் சிவலோகமடைந்தனர். இக்காட்சி இச்சிற்பத்தில் தில்லை புலீச்சுவர கோயிலின் முன் உள்ள குளத்தில் மூங்கில் கழியைப் பிடித்தபடி நாயனாரும் துணைவியாரும் மூழ்கும் காட்சி வடிக்கப்பட்டுள்ளது. |
653 | : | _ _ |a திருநீலகண்ட நாயனார், 63 நாயன்மார், தாராசுரம், ஐராவதேஸ்வரர் கோயில், இரண்டாம் இராஜராஜன், பிற்காலச் சோழர் கலைப்பாணி, பிற்காலச் சோழர் சிற்பங்கள், சிவன் கோயில், சிவத்தலங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தாராசுரம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
905 | : | _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
914 | : | _ _ |a 10.94856342 |
915 | : | _ _ |a 79.35650614 |
995 | : | _ _ |a TVA_SCL_000357 |
barcode | : | TVA_SCL_000357 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |