000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a அதிபத்த நாயனார் |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a விரிதிரை சூழ் கடற்நாகை அதிபத்தர் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a அதிபத்த நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். இவர் பரதவர் குலத்தில் உதித்தவர். நாகையை பிறப்பிடமாகக் கொண்டவர். மீன் பிடிப்பதை தொழிலாக கொண்டவர். சிறந்த சிவபக்தர். தன்னுடைய சிவபக்தியின் காரணமாக, தான் பிடிக்கும் மீன்களில் சிறந்த ஒன்றை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். சில நாட்களில் ஒற்றை மீனே பிடிபட்டாலும் அதனையும் சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து விட்டு, வெறுங்கையுடன் வீடு திரும்புவார். இதனால் வறுமையால் வாடினார். ஒரு சமயம் சிவபெருமான் அதிபத்தரை சோதிக்க எண்ணி ஒரு மீனும் பிடிபடாத நாளில், ரத்தினங்கள் பதிந்த தங்க மீனை வலையில் சிக்குமாறு செய்தார். ஆனால் தீவிரமான சிவபக்தரான அதிபத்தர் அதனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார். இவ்வாறு தான் வறுமையிலும், பசியிலும் வாடிய பொழுதும் இறைவனுக்கு சமர்ப்பிக்கும் வழமையை தவறாத பக்தியை கொண்டவராக அதிபத்தர் விளங்கியமையால் சிவனடி சேர்ந்து நாயன்மார்களுள் ஒருவராகத் திகழ்கிறார். இச்சிற்பத் தொகுதயில் பரதவர்கள் மீன் பிடிக்கும் காட்சி காட்டப்பட்டுள்ளது. மீனவர்கள் மூவர் வலையை வீசி கடலில் மீன் பிடிக்கின்றனர். வலைக்குள் மீன்கள் காட்டப்பட்டுள்ளன. அதிபத்தர் தன் கையிலிருந்து ஒரு மீனை (இம்மீன் சிவபெருமானின் மாயையால் வலைக்குள் சிக்கிய ஒரே மீனான இரத்தின மீனாய் இருக்கலாம்) கடலினுள் மீண்டும் விடுகிறார். இச்செயலை அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன், புன்னகை பூத்த முகத்துடன் செய்கிறார். தாடி, மீசையுடன் காணப்படும் அதிபத்தர் பரதவர்க்குரிய அரையாடை அணிந்து, சற்று முதியவராகக் காட்டப்பட்டுள்ளார். மற்றொரு காட்சியில் இடபத்தின் மேல் அமர்ந்து காட்சியருளும் அம்மையப்பரை இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி வணங்குகின்றார். |
653 | : | _ _ |a அதிபத்தர், அதிபத்தர் நாயனார், 63 நாயன்மார், தாராசுரம், ஐராவதேஸ்வரர் கோயில், இரண்டாம் இராஜராஜன், பிற்காலச் சோழர் கலைப்பாணி, பிற்காலச் சோழர் சிற்பங்கள், சிவன் கோயில், சிவத்தலங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தாராசுரம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
905 | : | _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
914 | : | _ _ |a 10.94856342 |
915 | : | _ _ |a 79.35650614 |
995 | : | _ _ |a TVA_SCL_000330 |
barcode | : | TVA_SCL_000330 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |