000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a ஆடல் மகளிர் |
300 | : | _ _ |a வாழ்வியல் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a ஆடல் மகளிரும், இசைக்கலைஞரும் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a பண்டைய கால தமிழ் மக்களின் வாழ்க்கையில் ஆடலும், இசையும் இரண்டற கலந்திருந்தன. உணர்வுகளின் வெளிப்பாடாகவும், சடங்குகள், விழாக்கள் இவற்றோடு தொடர்புடையதாகவும் இக்கலை தொழில் முறையாகவும் வழக்கில் இருந்தன. அழகு மிக்க பெண்களுக்கு ஐந்தாவது வயது தொடங்கி ஏழாண்டுகள் ஆடல் பாடல் பயிற்றுவிப்பர். பயின்று முடித்தபின் மன்னர் காண அரங்கேற்றம் நிகழும். பின்னர் ஆடலில் சிறந்த மகளிர்க்கு தலைக்கோலியர் பட்டம் வழங்கப் பெற்றன. தாராசுரம் கோயிலில் அமைந்த ஆடல் புடைப்புச் சிற்பத்தில் மகளிர் இருவர் ஆடுகின்றனர். ஒருவர் மத்தளம் இசைக்கின்றார். முதல் பெண், இரு கைகளை மார்புக்கு நேராக வைத்து வணங்கியபடி, இடது காலை வளைத்து. வலது காலை உயர்த்தி, பாதத்தை குஞ்சித பாதமாக கீழ் நோக்கி காட்டியுள்ளார். குந்தளம் கொண்டை அணிந்துள்ள இப்பெண் காதுகளில் பத்ரகுண்டலங்கள், கழுத்தில் தொய்யகத்துடன் கூடிய சரமாலை, கண்டிகை, பாதங்களில் சதங்கை, இடையில் மேகலை கொண்டுள்ளாள். அருகில் ஆடும் மற்றொரு பெண் இடது கையை உயர்த்தி, வலது கையால் அபய முத்திரை காட்டிய படி கால்களை தேள் கடி (விருச்சிக) முத்திரையில் வைத்துள்ளார். முன்னவரைப் போலவே தலையணியும் , காதணிகளும் விளங்குகின்றன. கழுத்தில் கண்டிகை, அரும்புச்சரம், புலிப்பற்றாலி அணிந்துள்ளார். காற் சதங்கையும் முன்னவரைப் போலவே உள்ளது. மார்பில் சன்னவீரம் என்னும் அணி செல்கிறது. இடைக்கட்டுடன் கூடிய அரையாடை அணிந்துள்ளார். மூன்றாமவராக மத்தளம் வாசிக்கும் ஆடவர் முகமும், ஆடையணிகளும் சிதைந்துள்ளன. |
653 | : | _ _ |a கூத்தர், கூத்து, ஆடல் மகளிர், ஆடல் பெண்டிர், நடன மாதர், நாட்டியப் பெண்கள், பரதக் கலை, ஆடற்கலை, தாராசுரம், ஐராவதேஸ்வரர் கோயில், இரண்டாம் இராஜராஜன், பிற்காலச் சோழர் கலைப்பாணி, பிற்காலச் சோழர் சிற்பங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தாராசுரம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
905 | : | _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
914 | : | _ _ |a 10.94856342 |
915 | : | _ _ |a 79.35650614 |
995 | : | _ _ |a TVA_SCL_000310 |
barcode | : | TVA_SCL_000310 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |