000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a முருகன் (பிரம்மசாஸ்தா) |
300 | : | _ _ |a கௌமாரம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a ஓம் பிரணவ மந்திரத்தின் பொருளை அறியாத படைப்புக் கடவுளான பிரம்மனை தலையில் குட்டி, அவரை சிறையில் அடைத்து, தானே படைப்புத் தொழிலை ஏற்ற பிரம்மசாஸ்தாவாகிய முருகன் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a பிரணவத்திற்குப் பொருள் சொல்லத்தெரியாத பிரம்மனை சிறையில் அடைத்து பிரம்மனின் கர்வத்தை அடக்கிய முருகன் பிரம்மசாஸ்தா என வழிபடப்படுகிறார். சிருஷ்டித் தொழில் பிரமனுடையது. முருகப் பெருமான் பிரணவத்திற்குப் பொருள் சொல்ல இயலாத பிரமனைச் சிறையிட்டு, அவரது சிருஷ்டித் தொழிலைச் செய்யத் தொடங்கியபோது (‘சாஸ்தா’ என்பதற்குத் தண்டிப்பது என்றும் பொருள் கொள்ளலாம்.) பிரமனுக்கு உரிய ஜபமாலையையும் கமண்டலத்தையும் கொண்டார். கந்தனுக்குரிய கவின்மிகு கோலங்களில் 'பிரம்மசாஸ்தா' (பிரமனைத் தண்டித்தவர்) என்ற கோலத்தில் இருகரங்களில் ஜபமாலையையும், கமண்டலத்தையும் ஏந்தி இருப்பார். காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா திருக்கோலம் உள்ளது. கழுகு மலை வெட்டுவான் கோயிலில் காணப்படும் பிரம்ம சாஸ்தாவாகிய முருகன் வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்டு பீடத்தின் மீது வைத்த நிலையில் சுகாசனத்தில் நேராக அமர்ந்துள்ளார். நான்கு திருக்கைகள் கொண்டுள்ளார். மேலிரு கரங்களில் வலதில் கெண்டியும், இடதில் அக்க மாலையும் (ருத்திராக்ஷ மாலை) கொண்டுள்ளார். முன் இடது கை இடது தொடையில் வைக்கப்பட்டுள்ளது. முன் வலது கை வலது தொடையில் ஊர்த்துவ முத்திரையில் அமைந்துள்ளது. கரண்ட மகுடராய், நெற்றில் கண்ணி மாலை அணிந்து, நீள் காதுகளில் பத்ரகுண்டலங்கள் விளங்க, கழுத்தில் சரப்பளியும், மார்பில் முத்துச் சரங்களால் ஆன வீரச்சங்கிலியும் அணிந்துள்ளார். வயிற்றில் உதரபந்தம் உள்ளது. கைகளில் இலை கருக்குடன் கூடிய தோள்வளைகள், முன்வளைகள் (மூன்று), இடையில் முகப்புடன் கூடிய அரைப்பட்டிகை, தொடை வரையிலான அரையாடை ஆகியவற்றைக் கொண்டு விளங்குகிறார். புன்னகை தவழும் முகமாய் முருகனின் எழில் முகம் விளங்குகின்றது. |
653 | : | _ _ |a முருகன், பிரம்மசாஸ்தா, கார்த்திகேயன், பாண்டியர் குடைவரை, கழுகு மலை, கழுகு மலை வெட்டுவான் கோயில், முற்காலப் பாண்டியர் கலைப்பாணி, பாண்டியர் ஒற்றைத் தளி, பாண்டியர் கலைகள், பாண்டிய நாடு, பாண்டியர், பாண்டிய மண்டலம் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கழுகு மலை வெட்டுவான் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c கழுகு மலை |d தூத்துக்குடி |f கோவில்பட்டி |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
914 | : | _ _ |a 9.15296112 |
915 | : | _ _ |a 77.70432074 |
995 | : | _ _ |a TVA_SCL_000231 |
barcode | : | TVA_SCL_000231 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |