| 000 |
: |
nam a22 7a 4500 |
| 008 |
: |
170508b ii 000 0 tam d |
| 245 |
: |
_ _ |a கஜசம்ஹாரமூர்த்தி (கஜாரி) |
| 300 |
: |
_ _ |a சைவம் |
| 340 |
: |
_ _ |a மணல் கல் |
| 500 |
: |
_ _ |a உமையஞ்ச ஆனையுரித்த தேவர் யானையின் உடலை உரித்து நிற்கும் வதைக்காட்சி |
| 510 |
: |
_ _ |a
- வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978.
- T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914.
- P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994.
- .ஆசனபதம்
- உக்கிரபீடம்
- உபபீடகம்
- தண்டிலம்
- பரமசாயிகம்
- மகாபீடபதம்
- மண்டூகம்
- மயமதம்
- மானசாரம்
- வாசுத்து சூத்திர உபநிடதம்
- ஸ்ரீதத்வநிதி
- அனுபோக பிரசன்ன ஆரூடம்
- அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி
- காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம்
- சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
|
| 520 |
: |
_ _ |a சம்ஹார மூர்த்தங்களுள் ஒன்றான இறைவனின் அட்ட வீரட்ட செயல்களில் ஒன்றான ஆனையை உரித்து வதைக்கும் காட்சி உமையாளும் சிறுவன் முருகனும் அஞ்சிக் கொண்டு காணுவதாக வடிக்கப்பட்டுள்ளது. ஆனையை உரிக்கும் இறைவனின் வலிமையை உணர்த்தும் சிற்பமாகவும், உமை வியந்து, அஞ்சிட நிற்பதாகவும் இச்சிற்பம் வடிக்கப்படுவது இயல்பு. இடது காலை பீடத்தில் ஊன்றி, வலது காலை சற்று தூக்கியவாறு (ஊர்த்துவஜானு) எட்டு திருக்கைகளுடன் ஆனையுரித்த பிரான் விளங்குகிறார். கைகளில் முன்வளை, கடகவளை காட்டப்பட்டுள்ளது. கழுத்தில் சவடி, கண்டிகை, சரப்பளி அணிகள் உள்ளன. முப்புரிநூல் கனமாகக் காட்டப்பட்டுள்ளது. ஜடாபாரம் தலையணியாகக் கொண்டு, இடையாடை முன் விழ, தனது இடது முன் கையால் யானையின் வாலைப் பிடித்துள்ளார். மேலிரு கைகள் யானையின் தோலை உரித்தவாறு இருபுறமும் காட்டப்பட்டுள்ளன. யானையின் வீழ்ந்துபட்ட தலை பின்புறம் காட்டப்படுகிறது. இறைவனின் அதிவீரச் செயலை காணும் தேவி அருகில் மிரண்டு ஓடும் நிலையில் உள்ளாள். தேவியின் இரு கைகளில் வலது கை கடியவலம்பிதமாக முத்திரையாக இடையில் வைத்தவாறு உள்ளது. இடது கையில் இன்னதென்று அறியக்கூடவில்லை. சிறுவன் முருகனின் நிலை அன்னையின் நிலையை ஒத்ததாகவே இருக்க வேண்டும். கஜாரியின் வலப்புறம் கீழே கணம் ஒன்றும் இக்காட்சியை காண்கிறது. |
| 653 |
: |
_ _ |a ஆனையுரித்த தேவர், ஆனையுரித்த பிரான், கஜாரி, கஜசம்ஹாரமூர்த்தி, இராஜசிம்மவர்மப்பல்லவன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள், சிவ வடிவங்கள், சிவன் சிற்பங்கள், சிவன் சிலைகள் |
| 700 |
: |
_ _ |a காந்திராஜன் க.த. |
| 752 |
: |
_ _ |a முக்தேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப தென்புற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், முகமண்டபம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
| 914 |
: |
_ _ |a 12.82824139 |
| 915 |
: |
_ _ |a 79.70781952 |
| 995 |
: |
_ _ |a TVA_SCL_000021 |
| barcode |
: |
TVA_SCL_000021 |
| book category |
: |
கற்சிற்பங்கள் |
| Primary File |
: |
TVA_SCL_000021_முக்தேஸ்வரர்-கோயில்_கஜசம்ஹாரமூர்த்தி-(கஜாரி)-001.jpg
|