000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a தட்சிணாமூர்த்தி |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a இசை வல்லுநரான மத்தளம் வாசிக்கும் தென்முகக் கடவுள் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a தட்சிணாமூர்த்தி என்றும் தென்முகக்கடவுள் என்றும் போற்றப்படும் இவர் ரிஷிகளுக்கு யோகத்தையும் ஞானத்தையும் குருவாக அமர்ந்து உபதேசிக்கும் வடிவமாகும். சிவனின் லீலாமுர்த்திகள் இருபத்தைந்தில் சௌமியம் (சாந்தம்) சம்ஹாரம் (வதம்), நிருத்தம் (நடனம்), யோகம் (தியானம்) அனுக்கிரகம் (அருளல்) ஆகிய ஐந்தொழில்களில் யோக நிலையில் இருந்து ரிஷிகளுக்குக் கல்வியையும், ஞானத்தையும், யோகத்தையும் உபதேசிக்கும் முர்த்தியாகத் தென்திசையை நோக்கி அமர்ந்திருப்பார். அகஸ்த்திய சகலாதிகாரம், சாரஸ்வதீயசித்ரகர்மமசாஸ்த்திரம், சில்பரத்தினம், சிரிதத்துவநிதி, காரணாகமம், அம்சுமத்பேதாகமம் ஆகிய சிற்ப சாஸ்த்திரங்களில் இவரைப்பற்றிய குறிப்புகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. தட்சிணம் என்றால் தென்திசை என்று பொருள், தென்திசையை நோக்கி அமர்ந்திருப்பதனால் தட்சிணாமூர்த்தி என்றழைக்கப்படுகிறார். தமிழ் இலக்கியங்களில் சிலப்பாதிகாரத்தில் “தெக்கினான்” என்றும், “ஆலமர் செல்வன்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகவே, தென்திசை அறிவும், ஞானமும் நிறைந்த திசையாகக் கருதப்படுகிறது. தட்சிணாமூர்த்தி சிறந்த ஆசிரியர் மட்டுமல்ல யோகம் மற்றும் ஞானத்தில் தேர்ச்சிபெற்றது மட்டுமல்லாமல் கலையிலும் தேர்ச்சி பெற்றவர். குறிப்பாக இசையில் பிரியர். பல கருவிகளை உபயோகிப்பவர். முற்காலப் பாண்டியக் கோயிலான வெட்டுவான் கோயிலில் மிருதங்க தட்சிணாமூர்த்தியாக அமைந்துள்ளார். ஜடாபாரம் கொண்டுள்ள தென்முகக் கடவுள் இடது காலை தொங்கவிட்டு வலது காலை மடக்கி, மிருதங்கத்தை மடியில் வைத்து முன்னிரு கைகளால் இசைக்கிறார். பின் இடது கையில் அக்க மாலையைப் பிடித்துள்ளார். காதுகளில் பத்ர குண்டலங்கள் விளங்குகின்றன. |
653 | : | _ _ |a தட்சிணாமூர்த்தி, தென்முகக் கடவுள், ஆலமர்ச் செல்வன், அறம் பயந்த செல்வர், பாண்டியர் குடைவரை, கழுகு மலை, கழுகு மலை வெட்டுவான் கோயில், முற்காலப் பாண்டியர் கலைப்பாணி, பாண்டியர் ஒற்றைத் தளி, பாண்டியர் கலைகள், பாண்டிய நாடு, பாண்டியர், பாண்டிய மண்டலம் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கழுகு மலை வெட்டுவான் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c கழுகு மலை |d தூத்துக்குடி |f கோவில்பட்டி |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
914 | : | _ _ |a 9.15296112 |
915 | : | _ _ |a 77.70432074 |
995 | : | _ _ |a TVA_SCL_000208 |
barcode | : | TVA_SCL_000208 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |