000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a பூத கணங்கள் |
300 | : | _ _ |a புராணச் சிற்பம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a குள்ள வடிவத்துடன் காணப்படும் பூதகணங்கள் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a பூத கணங்கள் என்பது அவர்களின் தோற்றத்தினைக் குறிப்பதேயாகும். குள்ள வடிவத்துடனும், பெரிய, தடித்த முகம், உருட்டும் விழிகளைக் கொண்டிருக்கும் மானுடத்தில் ஒரு வகைப் பிரிவினர். கணங்கள் என்போர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் பதினெட்டு இனக்குழுக்கள் ஆவர். இவ்வகை கணப்பிரிவுகளில் மேற்கூடிய உடலமைப்புக்களை பெற்றவர்கள் பூத கணங்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் சிவபெருமானுக்கு படையாக, காவலர்களாக, தொண்டர்களாக தொன்மங்களிலும், புராணங்களிலும், சிற்பங்களிலும் காட்டப்படுகின்றனர். கழுகு மலை வெட்டுவான் கோயிலில் உள்ள பூத வரியில் உள்ள பூத கணங்கள் மிகவும் எழில் வாய்ந்தவை. அவற்றுள் ஒன்றான இந்த பூத கண இணை விமானத்தின் உத்தரத்தைத் தாங்குவன போல் அமைந்துள்ளன. ஆண், பெண் இணையாக உள்ள இக்கணங்கள் முதுகு காட்டி அமர்ந்துள்ளன. ஆண் பூதம் இரண்டு கைகளாலும் உத்தரத்தைத் தாங்குகின்றது. பெண் வலது கையால் மட்டும் தாங்குகின்றது. இடது கையை இடது தொடையில் ஊன்றிக் கொண்டு அருகில் அமர்ந்திருக்கும் ஆண் பூதத்துடன் உரையாடுகிறது. ஆணுக்கும் முகத்தில் மகிழ்ச்சிக் களை சொட்டுகிறது. காதில் பெண் பூதம் நாகத்தையே அணியாகக் கொண்டுள்ளது. தலையின் பின்புறத்தில் காட்டப்பட்டுள்ள கொண்டை தற்போது பெண்கள் போடும் கொண்டையாக காணப்படுகிறது. இரு பூதகணங்களும் முப்புரி நூல், தோள் வளை, முன் வளை ஆகிய அணிந்துள்ளனர். ஆண் பூதத்தின் தலையலங்காரம் வேறுபட்டுள்ளது. காதில் பத்ரகுண்டலம் அணிந்துள்ளது. காதலர் இருவர் கருத்தொருமித்து கரங்கொண்டு இறைவன் கோயிலைத் தாங்குகின்றனர். |
653 | : | _ _ |a கணங்கள், சிவ கணங்கள், பூத கணங்கள், குள்ள பூதங்கள், பூத வரி, பூதம், சிவ கணம், பாண்டியர் குடைவரை, கழுகு மலை, கழுகு மலை வெட்டுவான் கோயில், முற்காலப் பாண்டியர் கலைப்பாணி, பாண்டியர் ஒற்றைத் தளி, பாண்டியர் கலைகள், பாண்டிய நாடு, பாண்டியர், பாண்டிய மண்டலம் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கழுகு மலை வெட்டுவான் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c கழுகு மலை |d தூத்துக்குடி |f கோவில்பட்டி |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
914 | : | _ _ |a 9.15296112 |
915 | : | _ _ |a 77.70432074 |
995 | : | _ _ |a TVA_SCL_000204 |
barcode | : | TVA_SCL_000204 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |