000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a நரசிம்மர் |
300 | : | _ _ |a வைணவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒன்றான சிங்க முகமும் மனித உடலும் கொண்ட நரசிம்மர் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a திருமாலின் பத்து அவதாரங்களுள் நரசிம்மர் நான்காம் அவதாரம் ஆகும். நரசிம்ம அவதாரம் விஷ்ணு மனித உடலும் சிங்கத்தலையும் கொண்டதாக உள்ளது. தன் பரமபக்தனான பிரகலாதனைக் காத்து இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம் செய்ய எடுத்த அவதாரமே நரசிம்மம் என்பது தொன்ம நம்பிக்கை. நரசிம்மர் இந்தியாவெங்கிலும் வழிபடப்பட்டாலும்,தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களில் தான், இவருக்குத் புகழ் வாய்ந்த தனிக்கோவில்களும் சிறப்பு வழிபாடும் அதிகம். பாண்டிய நாட்டு வைணவக் கோயில்களில் சக்கரத்தாழ்வாரும், நரசிம்மரும் இணைந்த படிமம் வழிபடப்படுகிறது. பாண்டிய நாட்டின் தலை நகராக விளங்கிய மதுரையில் நரசிம்மருக்கு குடைவரைக் கோயில் ஒன்று உள்ளது. இக்கோவில் மதுரைப் பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையன் (கி.பி. 8ஆம் நூற்றாண்டு) காலத்தில் அவரது அமைச்சரான மதுரகவி என்ற மாறன் காரி என்பவரால் கி.பி. 770-இல் உருவாக்கப்பட்டது. கழுகு மலை வெட்டுவான் கோயிலில் அமைந்துள்ள நரசிம்மர் இடது காலை தொங்கவிட்டு பீடத்தின் மீது வைத்து, வலது காலை மடக்கி சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். சிங்க முகமும் மனித உடலும் கொண்டுள்ளார். நான்கு திருக்கைகளில் மேலிரு கரங்களில் பிரயோகச் சக்கரம், சங்கு ஆகியன அமைந்துள்ளன. முன்னிரு கைகளில் இடது கையை தொடை மீது வைத்துள்ளார். வலது கை முத்திரையை அறியக்கூட வில்லை. தலையின் பின்புறம் பிடரிக் கற்றைகள் பரவியுள்ளன. தலையில் சிறிய பூரிமத்துடன் கூடிய மகுடம் விளங்குகிறது. இடைக்கட்டுடன் கூடிய அரையாடை அணிந்துள்ளார். மார்பில் பட்டையான முப்புரி நூல் செல்கிறது. வயிற்றில் உதரபந்தம் உள்ளது. கைகளில் தோள்வளைகள், முன்வளைகள் விளங்குகின்றன. |
653 | : | _ _ |a நரசிம்மர், சிங்கர், நரசிங்கர், முற்காலப் பாண்டியர் குடைவரை, கழுகு மலை, கழுகு மலை வெட்டுவான் கோயில், முற்காலப் பாண்டியர் கலைப்பாணி, பாண்டியர் ஒற்றைத் தளி, பாண்டியர் கலைகள், பாண்டிய நாடு, பாண்டியர், பாண்டிய மண்டலம் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கழுகு மலை வெட்டுவான் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c கழுகு மலை |d தூத்துக்குடி |f கோவில்பட்டி |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
914 | : | _ _ |a 9.15296112 |
915 | : | _ _ |a 77.70432074 |
995 | : | _ _ |a TVA_SCL_000198 |
barcode | : | TVA_SCL_000198 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |