000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a காலாரி (காலசம்ஹாரமூர்த்தி) |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a அட்ட வீரட்டர்களில் ஒருவராக மார்க்கண்டேயனுக்காக காலனை உதைத்த காலசம்ஹாரமூர்த்தி |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a சிவபெருமானை நாள்தோறும் பூஜிக்கும் 16 வயதான இளஞ்சிறான் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த காலனை தண்டிக்கும் சிவமூர்த்தம். காலன் மேல் இடது காலை வைத்து மிதித்து, வலது காலை உயர்த்தி தூக்கி உதைக்கும் பாவனையில், யமனை எச்சரிக்கும் நிலையில் உள்ள அட்டவீரட்டர்களில் ஒருவரான காலாந்தகமூர்த்தி நான்கு திருக்கைகள் பெற்றுள்ளார். பின்னிரு கைகளில் மானையும், மழுவையும் கொண்டுள்ளார். முன் வலது கையில் பாசக் கயிற்றையும், இடது கையால் எச்சரிக்கும் முத்திரையும் பிடித்துள்ளார். இறைவன் கோபக்கனலாக உள்ளார். அவரின் காலடியில் காலன் மரண பயங்கொண்டு தலையைத் திருப்பி சிவனாரைப் பார்த்தபடி குப்புற விழுந்த நிலையில் உள்ளான். காலாரிக்கு அலங்கரிக்கப்பட்ட ஜடாபந்தம் எழில் சேர்க்கிறது. நீள் காதுகளில் பத்ரகுண்டலங்கள் திகழ்கின்றன. கழுத்தில் புலிப்பல் தாலியும் சவடியும் அணிந்துள்ளார். வயிற்றில் உதரபந்தம் காட்டப்பட்டுள்ளது. இடது தோளின் வழியே முப்புரிநூல், உரஸ் சூத்திரம், ஸ்தன சூத்திரம் ஆகியன செல்கின்றன. கைகளில் தோள் வளையும், முன் வளைகளும் காட்டப்பட்டுள்ளன. அரையாடை அணிந்துள்ள இறையனார் சிங்கயாளி முக அரைப்பட்டிகையும், சவடி போன்ற மேகலையும் இடையில் கொண்டுள்ளார். பாதங்களில் சிலம்பு அணிந்துள்ளார். நெரித்த புருவங்களும், உருட்டிய விழிகளுமாய் நீள்வட்ட முகத்தைக் கொண்டுள்ளார். காலாரியின் காலடியில் கிடக்கும் எமன் வலது கையில் தண்டத்தையும், இடது கையை தரையில் ஊன்றியபடியும் மரண பயத்தில் கிடக்கிறான். காதுகளில் குண்டலங்கள், கைகளில் தோள்வளை, முன்வளைகள், வயிற்றில் பட்டையான உதரபந்தம், மார்பில் முப்புரிநூலும் அணிந்துள்ளான். எமனுக்கு மரணபயம் கண்களில் தெரிகிறது. |
653 | : | _ _ |a காலாரி, காலாந்தகமூர்த்தி, காலசம்ஹாரமூர்த்தி, மார்க்கபந்து, மார்க்கண்டேயன், அட்டவீரட்டானர், அட்டவீரட்டம், கொடும்பாளுர், கொடும்பாளுர் மூவர் கோயில், புதுக்கோட்டை, பூதி விக்கிரமகேசரி, இருக்குவேள், இருக்குவேளிர், இருக்குவேளிர் கோயில் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கொடும்பாளுர் மூவர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c கொடும்பாளுர் |d புதுக்கோட்டை |f விராலிமலை |
905 | : | _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு/இருக்குவேள் பூதி விக்கிரமகேசரி |
914 | : | _ _ |a 10.5421455 |
915 | : | _ _ |a 78.51921402 |
995 | : | _ _ |a TVA_SCL_000183 |
barcode | : | TVA_SCL_000183 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |