| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 220829b ii d00 0 tam d |
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
| 245 | : | _ _ |a பிராம்மி |
| 300 | : | _ _ |a தாய்த்தெய்வ சிற்பம் |
| 340 | : | _ _ |a கல் |
| 500 | : | _ _ |a அன்னையர் எழுவருள் முதன்மையானவரான பிராம்மி சிற்பம் இங்கு பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது. நான்கு திருக்கைகளுடன் பிராம்மி விளங்குகிறார். நான்முகனின் துணைவியாக கருதப்படும் பிராம்மி தேவி மேலிரு கைகளில் அக்கமாலையும், கெண்டியும் கொண்டுள்ளார். முன் இடது கை இடது தொடையின் மீது வைக்கப்பட்டுள்ளது. முன் வலது கை சிதைந்துள்ளது. தலையில் ஜடாபாரம் விளங்கிட, நீள் செவிகளில் குண்டலங்களும், மார்பில் கண்டிகை, சரப்பளி துலங்கிட, மார்பின் குறுக்கே பெரிய தடிமனான யக்ஞோபவீதம் செல்கிறது. கணுக்கால் வரையிலான நீண்ட மடிப்புடன் கூடிய ஆடை அணிந்துள்ளார். தேவி நான்கு திருமுகங்களைக் கொண்டுள்ளார். சுகாசனத்தில் அமர்ந்துள்ள அன்னையின் முகம் சிதைவு பெற்றுள்ளது எனினும் பாண்டியரின் கலையழகு மிளிர்கிறது. |
| 520 | : | _ _ |a 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சப்தமாதர்களுள் ஒருவராகிய பிராம்மி சிற்பம் முற்காலப் பாண்டியர் கலைப்பாணியைப் பெற்று விளங்குகிறது. வாள்போக்கி என்னும் ஊரில் இச்சிற்பம் கண்டெடுக்கப்பட்டு குற்றாலம் அகழ் வைப்பகத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டுள்ளது. |
| 653 | : | _ _ |a திருமால், விஷ்ணு, வைணவம், பெருமாள், நாராயணன், கற்சிற்பம், கல், சிற்பம், பாண்டியர், கலை, முற்காலப் பாண்டியர், குற்றாலம், அகழ் வைப்பகம், தென்காசி, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
| 700 | : | _ _ |a திரு.தெ.பொன் கார்த்திகேயன் |
| 710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 752 | : | _ _ |a குற்றாலம் அகழ் வைப்பகம் |b குற்றாலம் அகழ் வைப்பகம் |c குற்றாலம் |d தென்காசி |f தென்காசி |
| 905 | : | _ _ |a கி.பி.-10-ஆம் நூற்றாண்டு |
| 914 | : | _ _ |a 8.9299168790071 |
| 915 | : | _ _ |a 77.2690306774245 |
| 995 | : | _ _ |a TVA_SCL_001588 |
| barcode | : | TVA_SCL_001588 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| Primary File | : |