000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a சாமரப் பெண் |
300 | : | _ _ |a பிற வகை |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a சோழர் குல நங்கை சாமரம் வீசும் பெண்ணாக எழிலுடன் நிற்கிறாள் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a தாமரைப் பீடத்தின் மீது சமபாதத்தில் நின்ற நிலையில், பக்கவாட்டில் திரும்பிய படி உள்ள சோழர் குல மங்கை எழில் வாய்ந்த தோற்றத்துடனும், இளமைப் பொழிலுடனும் விளங்குகிறாள். முகப்பில் பூரிமத்துடன் விளங்கும் கரண்ட மகுடம் அணிந்துள்ள இந்நங்கை வலதுகையை தொடையில் வைத்தவாறு ஊரு முத்திரையிலும், இடது கையில் (இடது கை சிதைந்துள்ளது) இடது தோளில் சார்த்திய சாமரத்துடனும் உள்ளாள். நெற்றிப்பட்டை முத்தாலான தொய்யகத்துடன் அணி செய்கிறது. நீள் காதுகளில் மகர குண்டலங்களும், கழுத்தில் சரப்பளியும், மார்பின் நடுவே செல்லும் முப்புரி நூலும், தோள்களில் தோள்மாலை, கைகளில் தோள்வளை, முன்வளைகள் அணிந்துள்ளாள். கால்களில் பாடகம் அணிந்துள்ளாள். பட்டாலான இடையாடை மடிப்புகளுடன் முழங்காலுக்குக் கீழே செல்கிறது. இடைக்கட்டு முகப்புடன் உள்ளது. இடைக்கட்டின் முடிச்சு உடலின் பின்புறம் பரந்து நீண்டு அமைந்துள்ளது. சோழர்கள் தாம் அமைத்த கற்றளியில் தம் நாட்டு பெண்களின் உடலமைப்பையும், ஆடையாபரணங்களையும் சிற்ப வடிவில் செதுக்கியுள்ளனர் போலும். முதலாம் ஆதித்தனின் கற்றளியான குடந்தைக் கீழ்க்கோட்டத்தில் விமானக் கோட்டங்களில் உள்ள பெண் உருவங்களை ஒத்துள்ளது இச்சிற்பம் என்பது குறிப்பிடத்தக்கது. |
653 | : | _ _ |a சாமரப் பெண், பணிப் பெண்டிர், சோழ இளவரசி, சோழ நங்கை, சோழ மங்கை, சோழ அரசி, முற்காலச் சோழர் கலைப்பாணி, சோழர் கலைகள், முதலாம் ஆதித்த சோழன், ஆதித்தன் கலைப்பாணி, முதலாம் ஆதித்தன் கற்றளி, குறங்கணி நாதர் கோயில், சீனிவாசநல்லூர் குறங்கணி நாதர் கோயில், சோழ மண்டலம் |
710 | : | _ _ |a முனைவர் கோ. சசிகலா |
752 | : | _ _ |a குறங்கணி நாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c சீனிவாசநல்லூர் |d திருச்சி |f லால்குடி |
905 | : | _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் ஆதித்த சோழன் |
914 | : | _ _ |a 10.97344457 |
915 | : | _ _ |a 78.38864207 |
995 | : | _ _ |a TVA_SCL_000148 |
barcode | : | TVA_SCL_000148 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover images TVA_SCL_000148_குறங்கணி-நாதர்-கோயில்_சாமரப்-பெண்-001.jpg | : |
![]() |
Primary File | : |