| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a விக்கிரமங்கலம் |
| 510 | : | _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை |
| 520 | : | _ _ |a இக்கல்வெட்டு பெரிய குகைத்தளத்தில் உள்ள கற்படுக்கைகள் ஒன்றின் தலைப்பகுதியில் வெட்டப்பட்டுள்ளது. இதன்காலம் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும். அந்தை பிக்கன் என்பவருடைய மகன் வெந்அதன் என்பவர் நல்கிய கொடையைக் குறிக்கிறது. மூன்றாம் கல்வெட்டில் இறுதியில் உள்ள 'அதன்’ என்பதை அதான எனப் படித்து ‘தானம்’ என்று ஐராவதம் மகாதேவன் பொருள் கொண்டுள்ளார். ‘தான’ என்ற சொல்லை 'ஸ்தானம்' என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கமாகக் கொண்டு ‘இடம்' எனப்பொருள் கொள்ளவும் வாய்ப்புள்ளது. பிகன் என்ற பெயரில் மெய் சேர்த்து பிக்கன் என்று படிக்க வேண்டும். ‘பிக்கம்’ என்பது இளம்யானை என்று பொருளுடைய ஆட்பெயராகும். மாங்குளம் கல்வெட்டில் அந்தை அஸுதன் என்ற பெயரிலும் மேட்டுப்பட்டி கல்வெட்டுக்களில் அந்தை அரிய்தி, அந்தை சேந்தன், அந்தை இராவதன், அந்தை அஸுவன் போன்ற பெயர்களிலும் இடம்பெற்றுள்ள ‘அந்தை' என்ற ஆட்பெயரோடு இக்கல்வெட்டிலுள்ள ‘அந்தை' என்ற ஆட்பெயரை ஒப்பு நோக்கலாம். அந்தை மரியாதைச் சொல்லாகும். இக்கல்வெட்டில் 'ய' மீது புள்ளி உள்ளதாக ஆய்வாளர்கள் கருதினர். ஐ. மகாதேவன் அது பாறையில் உள்ள பள்ளம் என்று ஒதுக்கியுள்ளார். |
| 653 | : | _ _ |a விக்கிரமங்கலம், உசிலம்பட்டி, உண்டாங்கல்லு, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை |
| 752 | : | _ _ |a உண்டாங்கல்லு |c விக்கிரமங்கலம் |d மதுரை |f உசிலம்பட்டி |
| 914 | : | _ _ |a 09°59’22"N |
| 915 | : | _ _ |a 77°56’04"E |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_000024 |
| barcode | : | TVA_INS_000024 |
| book category | : | தமிழி / தமிழ்-பிராமி |
| cover | : |
|
| Primary File | : |