MARC காட்சி

Back
தென்மங்கலம்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a தென்மங்கலம்
510 : _ _ |a ஆவணம் இதழ் 10, தமிழகத் தொல்லியல் கழகம், 1999
520 : _ _ |a விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் வட்டம், தென்மங்கலம் கிராமத்தில் உள்ள காளிகோயிலில் ஒரு சதுரக் கற்பலகையில் அமர்ந்த நிலையில் புடைப்பாக அய்யனார் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 120 செ.மீ. அகலம் 75 செ.மீ. கனம் 15 செ.மீ. அய்யனார் வலக்காலை மடக்கி குத்திட்டு வைத்து இடக்காலை தொங்க விட்ட வண்ணம் அமர்ந்துள்ளார். முப்புரிநூல் வலமிருந்து இடமாகச் செல்கிறது. வலக்கை வலக்கால் முட்டியின் மீது தொங்கவிட்டும் இடக்கையை பீடத்தின் மீது ஊன்றியவாறு காணப்படுகிறார். தலையை தூக்கி முடிந்த கொண்டை அலங்கரிக்கின்றது. வலக்காது தோள் அளவு நீண்டு தொங்கியவாறு குண்டலத்துடன் உள்ளது. கழுத்தை கண்டச்சரமும், கைகளைக் கடகமும், கால்களைக் கழல்களும், இடையைக் குறுவாளுடன் கூடிய இடைக்கச்சையும் அலங்கரிக்கின்றன. சிற்பத்தின் இடப்புறம் யானையின் தலையும், வலப்புறம் குதிரையின் உருவமும், குதிரைக்குப்பின் கொண்டையுடன் கூடிய பெண்களின் உருவமும் காணப்படுகின்றன. ஆசனத்திற்குச் சற்று கீழ் கலசம், பஞ்சபாத்திரம், சேவல் போன்றவை உள்ளன. இவற்றில் சேவலின் உருவம் சிறப்பான கலையம்சத்துடன் காட்சியளிக்கிறது. ஆசனத்தின் அடிப்பகுதியில் இருகோடுகளுக்கிடையே 8 செ.மீ. உயரத்தில் தலைக்கட்டுகளுடன் கூடிய எழுத்துகள் கொண்ட கல்வெட்டு, ‘தேர்க்காலர் சருக்கினார் செய்வித்தது’ என்று பொறிக்கப்பட்டுள்ளது. இதன் காலம் 8 ஆம் நூற்றாண்டாகலாம்.
653 : _ _ |a கல்வெட்டு, நடுகல் கல்வெட்டு, தென்மங்கலம், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டக் கல்வெட்டுகள், விழுப்புரம் வட்டாரக் கல்வெட்டுகள், திருக்கோயிலூர், திருக்கோவிலூர், சிற்பக் கல்வெட்டு, தென்மங்கலம் சிற்பக் கல்வெட்டு, வட்டெழுத்துக் கல்வெட்டு, தமிழ்க் கல்வெட்டு, தனிக்கல், பலகைக் கல் கல்வெட்டு
752 : _ _ |a தென்மங்கலம் அய்யனார் சிற்பம் |c தென்மங்கலம் |d விழுப்புரம் |f திருக்கோவிலூர்
914 : _ _ |a 11.855120368649
915 : _ _ |a 79.425290925169
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001916
barcode : TVA_INS_001916
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001916/TVA_INS_001916_விழுப்புரம்_தென்மங்கலம்-கல்வெட்டு-001.jpg

TVA_INS_001916/TVA_INS_001916_விழுப்புரம்_தென்மங்கலம்-கல்வெட்டு-002.jpg