| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200828b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a டச்சுக்கல்லறை |
| 520 | : | _ _ |a பழவேற்காடு ஒரு சிறிய கடற்கரை கிராமம், இது தமிழக – ஆந்திர எல்லையில் சென்னைக்கு வடக்கே சுமார் 60 கி.மீ. தூரத்தில் வங்க கரையோரம் அமைந்துள்ள சுற்றுலா தலம் ஆகும். போர்ச்சுகீசியர்கள் கி.பி 1502 ஆம் ஆண்டு விஜயநகர் மன்னர்களின் உதவியால் வங்க கரையோரத்தில் உள்ள பழவேற்காட்டில் வர்த்தக மையமும், கோட்டையும் பழவேற்காடு ஏரிக்கரையில் எழுப்பினர். பின்னர், இக்கோட்டை டச்சுக்கார்ர்களால் கி.பி. 1609 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்டது. அதன் பின் கி.பி. 1613 ஆம் ஆண்டு டச்சு கிழக்கிந்திய கம்பெனி ஜெல்ட்ரியா ( Fort Geldria ) எனும் வலுவான கோட்டையை எழுப்பினர். இதுவே இந்தியாவில் கோரமண்டல் கடற்கரையில் டச்சுக்கார்ர்களின் முதல் குடியிருப்பு. இக் கம்பெனியின் பொது இயக்குனர் வெம்மர் வான் பெர்செம் (Wemmer van Berchem) என்பவரின் சொந்த ஊரான ஜெல்ட்ரியாவின் நினைவாக இக்கோட்டைக்கு பெயர் சூட்டப்பட்டது.. வணிகத்துக்காக இக்கோட்டையைக் கைப்பற்ற ஐரோப்பியர்களாகிய போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயருக்குமிடையே போட்டி இருந்தது. இங்குள்ள புதிய கல்லறை கி.பி. 1636 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.. இதற்கு முந்தைய கல்லைறையில் போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் இந்தியரும் புதைக்கப்பட்டுள்ளனர். இங்கு 77 கல்லறைகள் உள்ளன அவற்றில் ஐந்திற்கு குவி மாடத்துடன் கட்டுமானம் எழுப்பியுள்ளனர். இங்குள்ள கல்லறைகளில் இறந்தவர் பற்றிய குறிப்புக்களை டச்சு மொழியில் எழுதியுள்ளனர். சில கல்லறைகளில் கலை நயமிக்க வேலைப்பாடுகளும், குறியீடுகளும் காணப்படுகின்றன. இக்கல்லறையின் நுழை வாயிலில் உள்ள இரு தூண் பகுதிகளில் இறப்பை உணர்த்தக்கூரிய மனித எலும்பு சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. இக்கல்லறைக்கு இன்றளவும் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள டச்சுக்காரர்களின் வாரிசுகள் தங்கள் முன்னோர்களின் சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். |
| 653 | : | _ _ |a பழவேற்காடு, டச்சு, கல்லறை, புலிகாட், டச்சுக்காரர்கள், கோட்டை, வெம்மர் வான் பெர்செம், ஜெல்ட்ரியா, சென்னை, கோரமண்டல், கல்வெட்டு, தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 752 | : | _ _ |a டச்சுக்கல்லறை |c பழவேற்காடு (புலிக்காட்) |d திருவள்ளூர் |f பொன்னேரி |
| 914 | : | _ _ |a 13.4176606 |
| 915 | : | _ _ |a 80.3166702 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_001533 |
| barcode | : | TVA_INS_001533 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |