| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170923b ii d00 0 tam d |
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
| 245 | : | _ _ |a தலபுராண ஓவியங்கள் |b1 : |b2 = |
| 300 | : | _ _ |a சுவரோவியம் |
| 500 | : | _ _ |a தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்துக்கு அருகே சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பட்டீஸ்வரம் என்ற புராதன ஊர். இவ்வூர் சோழர்களின் பழைய தலைநகரமான பழையாறைக்கு அருகில் உள்ளது என்பது கூடுதல் சிறப்பு. இங்கு தேனுபுரீஸ்வரர் என்ற பெயரில் சிவாலயம் ஆரம்ப கால சோழர்களால் கட்டப்பட்டது. அக்கால சோழர்களின் வீழ்ச்சியைத் தொடர்ந்து தலைநகரமான பழையாறையும் அதனை சுற்றிய பகுதிகளும் நிர்மூலமாக்கப்பட்டது. பின்னர் இக்கோயில் விஜயநகர மன்னர்களின் ஆளுமைக்கு உட்பட்டு இருந்தப்போது விரிவாக்கம் செய்யப்பட்டது. இவ்விரிவாக்கப் பணியில் மன்னர் அச்சுதப்பா நாயக்கர் மற்றும் ரகுநாத நாயக்கரின் ஆதரவோடு பிரதான அமைச்சர் கோவிந்த தீட்சிதர் ஈடுபட்டு வந்தார். இப்பணியின் போது கோயிலின் அனைத்துப் பகுதிகளும் அழகிய வண்ண ஓவியங்களால் நிரப்பப்பட்டுள்ளது. கால ஓட்டத்தில் பெரும்பாலான ஓவியங்கள் இயற்கையாகவும், செயற்கையாகவும் அழிந்துவிட்டன. சிவன் கோயில் கருவறைக்குச் செல்லும் வழியில் உள்ள முதல் சுற்று மண்டப சுவர்ப் பகுதியில் சித்ரசேனன் எனும் மன்னர் தொடர்பான கதையில் வரும் சில காட்சிகள் வரையப்பட்டுள்ளன. இக்காட்சிகள் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வரையப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஓவியத் தொகுதியும் தனித்தனிக் கோடுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. ஓவியங்கள் பற்றிய குறிப்புக்கள் தமிழ் மற்றும் கிரந்த எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளன. புராண ஓவியங்கள் மட்டுமன்றி மீன் பிடித்தல், நீராடுதல் போன்ற சமூக ஓவியங்களும், அலங்கார வரைவுகளும் இம்மண்டபத்தினை நிறைவு செய்துள்ளன. இக்கோயிலில் ஸ்ரீ ஞானாம்பிகை / பால்வளை நாயகி அம்மனுக்கு தனிச்சன்னதி எழுப்ப்ப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றியுள்ள மண்டபத்தின் கூரையில் இக்கோயில் தொடர்பான தல புராணத்தை ஓவியங்களாக வரைந்துள்ளனர். ஆனால் பெரும்பாலான ஓவியங்கள் மங்கிய நிலையிலேயே உள்ளன. இங்குள்ள மண்டப மேற்கூரையில் தர்மசர்மாவின் கதை ஓவியங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், மதல வள்ளி எனும் தேவதாசி குடும்பத்தில் இருந்த நடனப் பெண்ணின் உருவம் உரிய எழுத்துடன் நுழைவாயில் அருகே வரையப்பட்டுள்ளது. இந்த கோயிலில் வரையப்பட்ட ஓவியங்கள் முழுவதும் ஆவணப்படுத்தாத நிலையில் இயற்கையாகவும், செயற்கையாகவும் சிதைக்கப்பட்டன. மிச்சம் இருக்கின்ற ஓவியங்கள் குறைந்த அளவினில் இருப்பினும் அவை அக்கால ஓவிய மரபையும், கருத்துச் சித்தாந்தம் மற்றும் வாழ்வியலை வெளிப்படுத்தும் விதமாகவே உள்ளது. ஓவியங்களில் விளக்கக் குறிப்புக்கள் எழுதும் வழக்கம் துவங்கலாயிற்று. இறை மற்றும் மனித உருவங்களை காட்டும் போது நேராகவும், பக்கவாட்டிலும் மற்றும் இரு கண்கள் தெரியும் படி பக்கவாட்டில் வரையும் முறை இருந்து வந்தது. வண்ணங்களால் நிறைவு செய்யப்பட்ட உருவங்கள் கறுப்பு வண்ணக்கோடுகளால் நிறைவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சியையும் தனித்தனியாக காட்டும் விதமாக கோடுகளால் பிரிக்கப்பட்டுள்ளன. அது போல கதைகள் அல்லாமல் சமூக நிகழ்வுகளையும், அலங்கார வரைவுகளால் மண்டப கூரைப் பகுதிகள் அழகூட்டப்பட்டுள்ளன. |
| 510 | : | _ _ |a
|
| 653 | : | _ _ |a தலபுராணம், சுவரோவியம், பட்டீஸ்வரம், சித்திரசேனன், கும்பகோணம், தஞ்சாவூர், விஜயநகர. நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரெகுநாத நாயக்கர் |
| 700 | : | _ _ |a க.த.காந்திராஜன் |
| 710 | : | _ _ |a க.த.காந்திராஜன் |
| 752 | : | _ _ |a கருவறைக்கு அருகே உள்ள மண்டபத்துச் சுவர் மற்றும் கூரைப் பகுதிகள் |b # |c பட்டீஸ்வரம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
| 850 | : | _ _ |a க.த.காந்திராஜன் |
| 914 | : | _ _ |a 10.9259 |
| 915 | : | _ _ |a 79.3452 |
| 995 | : | _ _ |a TVA_PNT_00045 |
| barcode | : | TVA_PNT_00045 |
| book category | : | சுவரோவியங்கள் |
| cover | : |
|
| Primary File | : |