MARC காட்சி

Back
அலங்கரிக்கப்பட்ட ரதம், மயில், மான், யானை, வடிவியல் உருவங்கள்
000 : nam a22 7a 4500
008 : 181113b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a அலங்கரிக்கப்பட்ட ரதம், மயில், மான், யானை, வடிவியல் உருவங்கள் |b1 : |b2 =
300 : _ _ |a பாறை ஓவியங்கள்
500 : _ _ |a

          கோயம்புத்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் வழியில் எட்டிமடைக்கு முன்பு இடது புறமாக செல்லும் சாலையில் சென்றால் திருமலையான்பாளையம் எனும் ஊரை அடையலாம். இவ்வூரைச் சுற்றி விவசாய நிலங்கள் அமைந்துள்ளன. இவ்வூரிலிருந்து 2 கி.மீ தொலைவில் மலைக்குன்று உள்ளது. இம்மலைக் குன்றில் சுமார் 200 அடி நடந்து சென்றால் சுமார் 6 அடி உயரத்தில் இயற்கையாய் அமைந்த குகை ஒன்று உள்ளது. இக்குகை சுமார் 6 அடி நீளம், அகலம் மற்றும் உயரம் கொண்டது.

          இங்கு யானை, வேட்டைக்காரர்கள், மான், தேர், மரம், மனிதர்கள் யாவும் வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ளன. இங்குள்ள ஓவியம் ஒன்றில் மரம் ஒன்று அலங்காரமாக வரையப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் எளிமையான முறையில் மரக் கம்புகளால் கட்டமைக்கப்பட்ட அலங்கார தேர் உள்ளது. அத்தேரின் வடத்தை இருபுறமும் உள்ள பக்தர்கள் இழுத்துச் செல்கின்றனர். இவர்களது இடுப்புப் பகுதிகளில் குறுவாள் போன்ற ஆயுதங்கள் காணப்படுகின்றன. பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் பெரும்பாலும் மரங்களையே இறைவன் குடி கொண்டிருக்கும் இடமாக நம்பி வழிபடுவதுண்டு. அது போன்ற கோயில்களில் ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் திருவிழாக்களில் இது போன்று தற்காலிக தேர்கள் உருவாக்கி அதில் அலங்கரிக்கப்பட்ட கரகத்தை ( புனித நீர் குடம்) எடுத்துக் கொண்டு ஊர் வலம் வருவர்.

          இங்குள்ள ஓவியத் தொகுப்பு இப்பகுதியில் முற்காலத்தில் நிகழ்த்தப்பட்ட திருவிழாவினை பதிவு செய்துள்ளது. இக்காட்சியை வரைந்த ஓவியர் உருவங்களின் அளவு வேறுபாடு மற்றும் அதன் தனித் தன்மையை சிறப்பாக வெளிக்கொணர்ந்துள்ளார். நேர் கோடுகள், சாய் கோடுகள், கிடை கோடுகள் யாவும் ஒருங்கே காணப்படுகின்றது,  இக்காட்சிக்கு அருகே யானை ஒன்றை ஒருவன் தனியாக அடக்க / பிடிக்க முயல்வது போல நிகழ்வும் காட்டப்பட்டுள்ளது. இதற்கு அருகே மேலும் சில தேர்கள் போன்ற ஓவியங்கள் அழிந்த நிலையில் உள்ளன. அதுபோல பழைய ஓவியங்களுக்கு மேல் புதிய ஓவியங்களும் பிற்காலங்களில் வரையப்பட்டுள்ளது. இக்குகை அமைந்தப் பகுதிகளில் இரும்பு கால எச்சங்களான கல் வட்டங்களும் காணப்படுகின்றது. ஆகையால் இங்கு வரையப்பட்ட ஓவியங்களில் சில  இரும்பு காலத்தில் வரையப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது. 

510 : _ _ |a
  1. ஐ. ஜோப் தாமஸ், ‘தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு’,(காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்(பி) லிட்.,2014, 2015. 
653 : _ _ |a ஓவியம், கோயம்புத்தூர், பாறை, பெருங்கற்காலம், தேர், தமிழ்நாடு, யானை, மயில்
700 : _ _ |a க.த.காந்திராஜன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம்
752 : _ _ |a குமுதிபதி-மலைக்குன்று |b # |c குமுதிபதி |d கோயம்புத்தூர் |f கோயம்புத்தூர் (தெற்கு)
850 : _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம்
914 : _ _ |a 10.493193
915 : _ _ |a 76.525489
995 : _ _ |a TVA_PNT_00042
barcode : TVA_PNT_00042
book category : பாறை ஓவியங்கள்
cover :
Primary File :

TVA_PNT_00042_குமுதிபதி_குகைப்பாறை-வெளித்தோற்றம்-0001.jpg

TVA_PNT_00042_குமுதிபதி_குகைப்பாறை-உள்தோற்றம்-0002.jpg

TVA_PNT_00042_குமுதிபதி_குகைப்பாறை-உள்புறம்-0003.jpg

TVA_PNT_00042_குமுதிபதி_குகைப்பாறை-ஓவியத்தொகுப்பு-0004.jpg

TVA_PNT_00042_குமுதிபதி_தேர்-இழுக்கும்-மக்கள்-0005.jpg

TVA_PNT_00042_குமுதிபதி_அலங்கரிக்கப்பட்ட-தேர்-0006.jpg

TVA_PNT_00042_குமுதிபதி_அலங்கரிக்கப்பட்ட-தேர்-0007.jpg

TVA_PNT_00042_குமுதிபதி_அலங்கரிக்கப்பட்ட-மரம்-0008.jpg

TVA_PNT_00042_குமுதிபதி_தேர்-இழுக்கும்-மக்கள்-0009.jpg

TVA_PNT_00042_குமுதிபதி_யானையும்-வேட்டைக்காரனும்-0010.jpg