MARC காட்சி

Back
வடிவியல் உருவங்கள், யானை, மான், இயந்திர வாகனம்
000 : nam a22 7a 4500
008 : 181113b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a வடிவியல் உருவங்கள், யானை, மான், இயந்திர வாகனம் |b1 : |b2 =
300 : _ _ |a பாறை ஓவியங்கள்
500 : _ _ |a

          மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் மேலூரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் மதுரையிலிருந்து சுமார் 38 கி.மீ. தொலைவில் கீழவளவு என்ற இவ்வூர் உள்ளது. இவ்வூருக்கு கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உயரம் அதிகம் இல்லாத மலைக்குன்றுகள் உண்டு. இதில் கிழக்குக் குன்றில் சில இயற்கையாய் அமைந்துள்ள குகைத் தளங்கள் இருக்கின்றது. இது பஞ்சபாண்டவர் மலை என்று அழைக்கப்பட்டு வருகின்றது.

          இங்குள்ள பெரிய குகை ஒன்றின் தரைப்பகுதிகள் துறவிகள் தங்குவதற்காக பாறைகள் சமன் செய்யப்பட்டு படுக்கைகள் போல உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ் - பிராமிக் கல்வெட்டொன்றும் இருக்கின்றது. மேலும் இங்கு ஏறத்தாழ 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆறு சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக் குகையிலிருந்து சுமார் 200 அடி தென் புறத்தில் கிழக்கு முகமாக அமைந்துள்ள பாறை குன்றின் அடிப்பகுதியில் சிவப்பு வண்ணத்தில் சில வடிவங்கள் உள்ளன. இதில் வட்டம், அரை வட்டங்கள், முக்கோணம், சதுரம், நேர் கோடு, கிடை கோடு போன்றவை வரையப்பட்டுள்ளன. இவை யாவும் கோட்டோவியங்களாக உள்ளன. இவை பெருங்கற்கால ஓவியங்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

          இந்த ஓவியத்திற்கு மேற்கு பக்கத்தில் சுமார் 150 அடி தூரத்தில் சில பாறை குன்றுகள் உள்ளன. அவற்றில் பிற்கால கற்செதுக்கு ஓவியங்கள் காணப்படுகின்றன. அதில் மூன்று யானைகள், மூன்று மான்கள் மற்றும் சமீப கால மண் எடுக்கும் இயந்திரம் போன்றவை  வரையப்பட்டுள்ளன. மேலும் சில உருவங்களுக்கு மேல் சமீப காலங்களில் வண்ணங்கள் பூசப்பட்டுள்ளன. தொன்மையான ஓவியங்களை கண்ட சமகால ஓவியர்கள் தங்கள் கால பதிவுகளாக மண் அள்ளும் இயந்திரத்தை வரைந்துள்ளது வரலாற்றின் நீட்சியை காட்டும் வண்ணம் உள்ளது.

510 : _ _ |a
  1. ஐ. ஜோப் தாமஸ், ‘தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு’,(காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்(பி) லிட்.,2014, 2015. 
653 : _ _ |a சமணர், கீழவளவு, மதுரை, மேலூர், ஓவியம், பெருங்கற்காலம், தமிழ்நாடு, தமிழ்-பிராமி, யானை, மான்
700 : _ _ |a க.த.காந்திராஜன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம்
752 : _ _ |a கீழவளவு – பஞ்ச பாண்டவர் மலை |b # |c கீழவளவு |d மதுரை |f மேலூர்
850 : _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம்
914 : _ _ |a 10.35102
915 : _ _ |a 78.255722
995 : _ _ |a TVA_PNT_00041
barcode : TVA_PNT_00041
book category : பாறை ஓவியங்கள்
cover :
Primary File :

TVA_PNT_00041_கீழவளவு_யானை-ஓவியம்-0006.jpg

TVA_PNT_00041_கீழவளவு_ஓவியங்கள்-உள்ள-பாறை-0001.jpg

TVA_PNT_00041_கீழவளவு_பாறை-பொதுத்தோற்றம்-0002.jpg

TVA_PNT_00041_கீழவளவு_யானை-ஓவியம்-0003.jpg

TVA_PNT_00041_கீழவளவு_மண்-எடுக்கும்-வாகனம்-0004.jpg

TVA_PNT_00041_கீழவளவு_யானை-ஓவியம்-0005.jpg

TVA_PNT_00041_கீழவளவு_மான்கள்-0007.jpg

TVA_PNT_00041_கீழவளவு_மான்-0008.jpg