MARC காட்சி

Back
இராஜா ரவிவர்மா ஓவியங்கள்
000 : nam a22 7a 4500
008 : 181113b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
100 : _ _ |a இராஜா ரவிவர்மா
245 : _ _ |a இராஜா ரவிவர்மா ஓவியங்கள் |b1 : |b2 =
300 : _ _ |a நவீனக் கலைகள் - எண்ணெய் மற்றும் நீர் வண்ண உருவ ஓவியம்
500 : _ _ |a

          இராஜா ரவி வர்மா (29 ஏப்ரல் 1848 - 2 அக்டோபர் 1906) ஒரு புகழ்பெற்ற இந்திய ஓவியக் கலைஞர் ஆவார். இவர் இந்திய ஓவியர்களில் முதன்மையானவர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர். இவரது படைப்புகளில் உள்ள அழகியலும், கருப்பொருட்களும் தனித்துவமானது, மேற்கத்திய பாணியின் தொழில் நுணுக்கங்களுடன் இந்தியப் பண்பாடு தொடர்பான கதாபாத்திரங்களை புதிய முறையில் வரைந்து அனைவராலும் வாழும் காலத்திலேயே பாராட்டப்பட்டார். இவரது ஓவியங்களின் வண்ண அச்சுப்பிரதிகளாக அச்சிடப்பட்டதால் அவை பொது மக்கள் வீட்டிலும் அலங்காரமாக வைத்துள்ளதால் இவரது ஓவியங்கள் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களிடமும் போய் சேர்ந்தது. இவரது வண்ண அச்சுப்பிரதிகளின் தாக்கத்தால் பல ஓவியர்கள் இவரது பாணி ஓவியங்களை பின்பற்றி வரைந்து வந்தனர். குறிப்பாக இவர் வரைந்த புராணக் கதைகளில் வரும் இந்து கடவுள்களின் உருவங்கள் மிகப் பிரபலம்.  இதன் வண்ண அச்சுப்பிரதிகள் இந்தியா முழுவதும் பலரது வீடுகளில் உள்ள பூஜை அறையில் இன்றளவும் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது.

          இவர் இன்றைய கேரள மாநிலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட கிளிமானூர் அரண்மனையில் அரச குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை எழுமாவில் நீலகந்தன் தாய் உமையாம்பா தம்புராட்டி ஆவார். இவரது தாய் ஒரு கவிஞராகவும், எழுத்தாளராகவும் இருந்தார், அவர்களுடைய “ பார்வதி சுயம்வரம்” என்ற நூல் இவரது  மரணத்திற்குப் பின்னால் ரவிவர்மாவால் வெளியிடப்பட்டது. இவரது தந்தை எர்ணாகுளத்தைச் சேர்ந்த சமஸ்கிருத அறிஞர் மற்றும் ஆயூர்வேதத்தில் நிபுணராக இருந்தார். இவருக்கு மங்கல பாயி என்ற சகோதரியும், கோதா வர்மா மற்றும் ராஜா வர்மா எனும் இரண்டு சகோதரர்கள் உண்டு. இந்திய அரசின் வைசிராய் மற்றும் கவர்னர்-ஜெனரல் ஆகியோரால் ராஜா  என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. இவருக்கு 18 வயதாகும் போது 12 வயதுடைய பாஹகீர்த்தி பாயி என்ற திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட மாவிலிக்கரை அரண்மனையின் இளவரசியை 1866 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். பின்னாளில் இரண்டு மகன்கள் மற்றும் மூன்று பெண் குழந்தைகள் என ஐந்து குழந்தைகள் பிறந்தன. இவர்களில் இவரது இரண்டாம் மகனான ராம வர்மா (1879 - ) தந்தையைப் போல ஓவியக்கலையில் ஆர்வமாக இருந்ததினால் பின்னர் மும்பையில் உள்ள ஜெ.ஜெ. நுண்கலைக் கல்லூரியில் பயின்றார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மகாராஜாவாகிய அயில்யம் திருநாள் என்பவர் இவருக்கு பேருதவி செய்துள்ளார்.  இவருடைய ஆரம்ப கால ஓவியப்பயிற்சியை மதுரையில் துவங்கினார். பின்னர் நீர் வண்ண ஓவியத்தை ராம சுவாமி நாயுடு என்பவரிடத்திலும்,  டச்சு உருவப்பட ஓவியர் தியோடர் ஜென்சன் என்பவரிடத்தில் எண்ணெய் வண்ண ஓவியங்கள் வரையும் பயிற்சியைப் பெற்றார். பெரும்பாலும் இவர் தனது லக்ஷிமி விலாஸ் அரண்மனையில் இருந்து கொண்டு ஓவியங்கள் தீட்டினார்.

          ரவிவர்மாவின் வளர்ச்சிக்கு பிரிட்டிஷ்  அரசின் நிர்வாகி எட்கார் தர்ஸ்டன்  ஒரு காரணம் ஆவார். இவரது ஓவியங்கள் 1873 ஆம் ஆண்டு வியன்னாவில் காட்சிப்படுத்தப் பட்டது. அங்கு அவருக்கு சிறந்த ஓவியருக்கான விருது வழங்கப்பட்டது.அது போல 1893 ஆம் ஆண்டு இவரது ஓவியங்கள் சிக்காக்கோவில் நடைபெற்ற உலக கொலம்பியன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. அங்கு அவருக்கு மூன்று தங்க மெடல்கள் பரிசளிக்கப் பட்டது. இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு ஓவியம் வரைவதற்கான கருப்பொருளைத் தேடி பயணித்தார். இவரது பெரும்பாலான இந்து பெண் தெய்வ ஓவியங்களில் உள்ள உருவங்களின் தோற்ற அமைப்பு தென்னிந்திய பெண்களை ஒத்த தன்மையிலேயே காட்டப்பட்டுள்ளது. இவர் வரைந்த துஷ்யந்தன், சாகுந்தலை, நளன், தமயந்தி போன்ற ஓவியங்கள் இவரது படைப்புக்களில் முதன்மையானதாக அறியப்படுகின்றது. இந்திய புராண இதிகாசங்களில் உள்ள கதாபாத்திரங்கங்களுக்கு இவர் கொடுத்த கற்பனை உருவங்களேயே பின்னர் பலரும் பயன் படுத்தி வந்தனர். வர்மாவின் கலைப் படைப்புக்கள் பெரும்பாலானவை வடோதாராவில் உள்ள லக்ஷிமி விலாசம் அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. ரவிவர்மாவும், மாதவ ராவ் இருவரும் இணைந்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முதன்மை மந்திரியான தேவனது அறிவுரையின் படி 1894 ஆம் ஆண்டு மும்பையில் காட்கோபர் (Ghatkopar) எனும் இடத்தில் அச்சுக்கூடம் ஒன்றை துவங்கினர். பின்னர் இக்கூடம் 1899 ல் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் லோனாவாலாவுக்கு (Lonavala) அருகில் உள்ள மாலவ்லி (Malavli) என்னும் இடத்திற்கு மாற்றப்பட்டது. இங்கு தான் இந்து கடவுள்களின் ஓவியங்கள் மற்றும் இராமாயண, மகாபாரத மற்றும் பிற புராணங்களில் உள்ள முக்கிய கதாபாத்திரங்கள் ஓலியோகிராப் (oleographs) எனும் முறையில் வண்ண அச்சில் உருவாக்கப்பட்டது. இவை ரவிவர்மா இறந்த பின் அதிக அளவில் அவரது ஓவியங்கள் பிரதிகளாக அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

          அந்த அச்சுக்கூடம் அக்கால கட்டங்களில் இந்திய அளவில் பெரியதாகவும், புதுமைகளை உருவாக்கும் இடமாகவும் இருந்தது. இவ்வச்சுக்கூடத்தை ரவி வர்மாவின் தம்பியான ராஜா வர்மா நிர்வாகித்து வந்தார். வணிக ரீதியில் இந்நிறுவனம் தோல்வியை அடைந்தது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அச்சுக்கலை நிபுணரான  ஃபிரிட்ஸ் ஸ்கிலீஷர் (Fritz Schleicher) என்பவர் 1901 ஆம் ஆண்டு இவ்வச்சுக்கூடத்தை விலைக்கு வாங்கி வணிக ரீதியாக வெற்றியடைந்தார். இந்நிறுவனம் ஸ்கிலீஷரை தொடர்ந்து அவரது வாரிசுகளால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. அந்நிறுவனம் 1972 ஆம் ஆண்டு எதிர்பாராத தீ விபத்துக்கு உள்ளாகி பெரும்பாலான ரவிவர்மாவின் லித்தோ அச்சுப் பிரதிகள் தீக்கிரையாயின. 1904 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ்  பேரரசரின் சார்பில் வைஸ்ராயர் லார்ட் கர்சன், ரவிவர்மாவுக்கு கெய்ஸர்-இ-ஹிந்த் எனும்  தங்க பதக்கம் வழங்கினார். அதுபோல இவரை கெளரவப் படுத்தும் விதத்தில் கேரளாவில் மாவிலிகரை என்னும் இடத்தில் நுண்கலைக்கான கல்லூரி நிறுவப்பட்டது. மேலும் கிளிமானூரில் இவர் படித்த உயர் நிலைப் பள்ளிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது

510 : _ _ |a
  1. ஐ. ஜோப் தாமஸ், ‘தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு’,(காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்(பி) லிட்.,2014, 2015. 
653 : _ _ |a இராஜா ரவி வர்மா, ஓவியம், தமயந்தி, அன்னம், நளன், சாகுந்தலை, இந்திய ஓவியம், இந்துக் கலை மரபு, ஓவிய மரபு
700 : _ _ |a தணிகை மணி
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம்
752 : _ _ |a அரசு மற்றும் தனியார் கலைக்கூடங்கள் - திருவனந்தபுரம், சென்னை, மைசூர், மும்பை மற்றும் பிற இடங்கள் |b # |c அரசு மற்றும் தனியார் கலைக்கூடங்கள் - திருவனந்தபுரம், சென்னை, மைசூர், மும்பை மற்றும் பிற இடங்கள் |d அரசு மற்றும் தனியார் கலைக்கூடங்கள் - திருவனந்தபுரம், சென்னை, மைசூர், மும்பை மற்றும் பிற இடங்கள் |f அரசு மற்றும் தனியார் கலைக்கூடங்கள் - திருவனந்தபுரம், சென்னை, மைசூர், மும்பை மற்றும் பிற இடங்கள்
850 : _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம்
995 : _ _ |a TVA_PNT_00039
barcode : TVA_PNT_00039
book category : நவீனக் கலைகள்
cover :
Primary File :

TVA_PNT_00039_ரவிவர்மா-ஓவியம்_அருச்சுனன்-0001.jpg

TVA_PNT_00039_ரவிவர்மா-ஓவியம்_அரம்பை(ரம்பா)-0002.jpg

TVA_PNT_00039_ரவிவர்மா-ஓவியம்_உள்நாட்டு-செல்வந்தர்-0003.jpg

TVA_PNT_00039_ரவிவர்மா-ஓவியம்_உறங்கும்-ஊழியர்-0004.jpg

TVA_PNT_00039_ரவிவர்மா-ஓவியம்_ஓய்வு-பெற்ற-வீரர்-0005.jpg

TVA_PNT_00039_ரவிவர்மா-ஓவியம்_கஞ்சன்-0006.jpg

TVA_PNT_00039_ரவிவர்மா-ஓவியம்_கண்ணாடியுடன்-பெண்-0007.jpg

TVA_PNT_00039_ரவிவர்மா-ஓவியம்_காய்கறிகள்-நறுக்கும்-காட்சி-0008.jpg

TVA_PNT_00039_ரவிவர்மா-ஓவியம்_கீசகன்-0009.jpg

TVA_PNT_00039_ரவிவர்மா-ஓவியம்_தண்ணீர்-பெண்-0010.jpg

TVA_PNT_00039_ரவிவர்மா-ஓவியம்_தமயந்தியும்-அன்னமும்-0011.jpg

TVA_PNT_00039_ரவிவர்மா-ஓவியம்_முத்துச்சாமி-ஐயர்-0012.jpg

TVA_PNT_00039_ரவிவர்மா-ஓவியம்_யமுனைக்-கரையில்-இராதா-0013.jpg

TVA_PNT_00039_ரவிவர்மா-ஓவியம்_கிருஷ்ணன்-0014.jpg

TVA_PNT_00039_ரவிவர்மா-ஓவியம்_அருச்சுனன்-0015.jpg