MARC காட்சி

Back
பெருங்கற்கால மனிதர் மற்றும் பிற உயிரினங்கள்
000 : nam a22 7a 4500
008 : 181113b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a பெருங்கற்கால மனிதர் மற்றும் பிற உயிரினங்கள் |b1 : |b2 =
300 : _ _ |a பாறை ஓவியங்கள்
500 : _ _ |a

          மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து நிலக்கோட்டை செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ. தொலைவில் கல்லூத்து மேட்டுப்பட்டி மற்றும் அணைப்பட்டிக்கும் இடையே அமைந்துள்ள மலைக் கணவாயில் குறுக்குப் பாறை எனும் குகைத்தளம் உள்ளது. இக்குகை கிழக்கு மேற்காக சுமார் 100 அடி நீளமும் 2 – 5 அடி உயரத்திலும் உள்ளது. மேலும் தரைப்பகுதியில் இருந்து 10 அடி உயரத்தில் உள்ளது. இக்குகை அருகே செல்லும் மலைப்பாதை தொன்மையானது. இப்பாதை திண்டுக்கல் பகுதியில் இருந்து இராசபாளையம் வழியாக குற்றாலம் செல்லக்கூடியது. ஆகையால் காலகாலமாய் மாட்டு வண்டிகளில் பொருட்களை ஏற்றி வணிகர்கள் இப்பாதையில் வருவதுண்டு. சமீப காலம் வரை இக்குகைக்கு அருகே வரும் வணிகர்களை மறித்து இங்குள்ள கொள்ளையர்கள் வழிப்பறி செய்வதாக கூறப்படுகின்றது.

          இந்தக் குகையில் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன. அவற்றில், மனித உருவங்கள் வெவ்வேறு நிலையிலும், கூட்டமாகவும், தனியாகவும், விலங்குகளுடனும் வரையப்பட்டுள்ளன. மனித உருவங்களில் சில பெண் உருவங்களாக காட்டப்பட்டுள்ளது. அது போல அடையாளம் காண இயலாத ஓவியங்களும், சில குறியீடுகளும் ஆங்காங்கே தென்படுகின்றன. இங்குள்ள ஓவியங்களில் ஒன்று திமில் உள்ள மாடு ஒன்றை மனிதன் ஒருவன் அடக்க முயலும் காட்சி போல உள்ளது. அது  இன்று நடைமுறையில் இருக்கும் ஏறு தழுவல், ஜல்லிக்கட்டு போன்ற வடிவத்தை ஒத்து காணப்படுகிறது. அதுபோல குதிரை மீது அமர்ந்திருக்கும் ஒருவனை தரையில் இருந்து நீண்ட வேல் கம்பு போன்ற ஆயுதத்தால் தாக்க முற்படுவது போல உள்ளது. அதனருகே மற்றொரு குதிரை வீரன் தாக்கப்பட்டு வீழ்ந்து கிடப்பது போல காட்டப்பட்டுள்ளது. இது வழிப்பறி போன்ற நிகழ்வினைக் காட்டுவதாக உள்ளது. மற்றொரு ஓவியத்தில் வீரன் ஒருவன் புலி போன்ற விலங்கின் மீது பயணிப்பது போல உள்ளது.

          இங்குள்ள ஓவியங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வெறு ஓவியர்களால் வரையப்பட்டுள்ளது. இங்குள்ள தொன்மையான ஓவியங்கள் இரும்பு காலத்தைச் சேர்ந்ததாக தெரிகிறது. அதுபோல பிற்காலங்களிலும் தொடர்ந்து வரையப்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இங்கு வரையப்பட்ட ஓவியங்கள் பெரும்பாலும் கோட்டோவியமாகவே உள்ளது. சில இடங்களில் உருவங்களுக்குள் வண்ணப்பூச்சு காணப்படுகிறது. இங்கு வரையப்பட்ட ஓவியங்களில் விலங்கு உருவங்கள் எளிமையாகவும் நேர்த்தியான வடிவங்களையும் கொண்டுள்ளது.

510 : _ _ |a
  1. ஐ. ஜோப் தாமஸ், ‘தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு’,(காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்(பி) லிட்.,2014, 2015. 
653 : _ _ |a பெருங்கற்காலம், அணைப்பட்டி, மேட்டுப்பட்டி, மதுரை, பாறை ஓவியங்கள், வேட்டைச் சமூகம், தமிழ்நாடு, ஓவியம், கல்படுக்கை, புதிய கற்காலம், திண்டுக்கல்
700 : _ _ |a க.த.காந்திராஜன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம்
752 : _ _ |a அணைப்பட்டி |b # |c க. மேட்டுப்பட்டி - அணைப்பட்டி |d திண்டுக்கல் |f நிலக்கோட்டை
850 : _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம்
914 : _ _ |a 10.0941513
915 : _ _ |a 77.8609409
995 : _ _ |a TVA_PNT_00035
barcode : TVA_PNT_00035
book category : பாறை ஓவியங்கள்
cover :
Primary File :

TVA_PNT_00035_அணைப்பட்டி_அலங்கார ஓவியம்-0001.jpg

TVA_PNT_00035_அணைப்பட்டி_இரண்டு-மனித-உருவங்கள்-0002.jpg

TVA_PNT_00035_அணைப்பட்டி_இரண்டு-மனித-உருவங்கள்-0003.jpg

TVA_PNT_00035_அணைப்பட்டி_குகைக்கு-வெளியே-உள்ள-தோற்றம்-0004.jpg

TVA_PNT_00035_அணைப்பட்டி_குகையின்-உட்புறத்-தோற்றம்-0005.jpg

TVA_PNT_00035_அணைப்பட்டி_குகையின்-தோற்றம்-0006.jpg

TVA_PNT_00035_அணைப்பட்டி_குகையின்-வெளித்தோற்றம்-0007.jpg

TVA_PNT_00035_அணைப்பட்டி_குதிரை-மீதேறி-வருபவன்-0008.jpg

TVA_PNT_00035_அணைப்பட்டி_குதிரைப்-பயணம்-0009.jpg

TVA_PNT_00035_அணைப்பட்டி_சண்டைக்காட்சி-0010.jpg

TVA_PNT_00035_அணைப்பட்டி_ஆயுதவீரன்-0011.jpg

TVA_PNT_00035_அணைப்பட்டி_ஆயுதத்துடன்-வீரன்-0012.jpg

TVA_PNT_00035_அணைப்பட்டி_மனிதஉருவம்-0013.jpg

TVA_PNT_00035_அணைப்பட்டி_ஏறுதழுவுதல்-0014.jpg

TVA_PNT_00035_அணைப்பட்டி_நடனக்காட்சி-0015.jpg

TVA_PNT_00035_அணைப்பட்டி_ஆடல்பெண்-0016.jpg

TVA_PNT_00035_அணைப்பட்டி_குகைத்தோற்றம்-0017.jpg

TVA_PNT_00035_அணைப்பட்டி_பூ-அலங்கார-ஓவியம்-0018.jpg

TVA_PNT_00035_அணைப்பட்டி_மனிதஉருவமும்-குறியீடும்-0019.jpg

TVA_PNT_00035_அணைப்பட்டி_விலங்கின்-மேல்-மனிதன்-0020.jpg

TVA_PNT_00035_அணைப்பட்டி_விலங்குகளும்-குறியீடுகளும்-0021.jpg

TVA_PNT_00035_அணைப்பட்டி_விலங்கின்-மீது-பயணம்-0022.jpg

TVA_PNT_00035_அணைப்பட்டி_மனிதன்-மற்றும்-விலங்கு-0023.jpg