| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170526b ii d00 0 tam d |
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
| 245 | : | _ _ |a திருவிளையாடற் புராணம் |b1 : |b2 = |
| 300 | : | _ _ |a சுவரோவியம் |
| 500 | : | _ _ |a பொற்றாமரைக் குளத்தின் வடக்குப் பிரகாரத்திலும், கிழக்குப்பிரகாரத்திலும் திருவிளையாடற்புராணக் கதைகளை சித்தரிக்கும் ஒவியங்கள் நாயக்கர் காலப்பாணியில் தீட்டப்பட்டிருந்தன. இவற்றில் பெரும்பாலானவை அழிந்து விட்டன. ஓவிய எச்சங்களைக் கொண்டு புதிதாக திருவிளையாடற் புராணத்தின் காட்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டன. நாயக்கர் கால எஞ்சிய ஓவியச் சிதைவுகளில் சில காட்சிகள் பாதுகாக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. அவைகளில் மீனாட்சி அம்மன் செங்கோல் பெறும் காட்சி, தேவி திக்விஜயத்தின் போது இந்திரன் மற்றும் அக்கினி தேவனை எதிர்த்து போரிட்ட காட்சி, மீனாட்சி திருமணச் சடங்குகள், அழகர் சிவபெருமானுக்கு மீனாட்சியை தாரை வார்த்துக் கொடுக்கும் காட்சி, நான்முகன் உள்ளிட்ட மறையோர் திருமண வேள்வித் தீயின் முன் அமர்ந்திருக்கும் காட்சி, சிவபெருமானின் ஆடல், நந்தியின் மீது சொக்கநாதர், மீனாட்சி அமர்ந்திருக்கும் காட்சி, மீனாட்சி திருமணத்தை இராணி மங்கம்மாள் தனது பேரன் விஜயரங்க சொக்கநாத நாயக்கருடன் வணங்கி நின்று காணும் காட்சி, திருமலை நாயக்கரின் தளபதி இராமப்பய்யனின் உருவம் ஆகிய ஓவியங்கள் நாயக்கர் காலத்தின் ஓவியப் பாணியை வெளிப்படுத்தும் வரலாற்று ஆவணங்களாக உள்ளன. இவ்வோவியங்களின் மூலம் அக்கால மக்களின் உடைகள், அணிகலன்கள், பண்பாட்டு நிலை ஆகியனவற்றை அறிய முடிகிறது. இவ்வோவியங்களின் மேற்பகுதியில் தமிழிலும் தெலுங்கிலும் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. இவை அவ்வோவியக் காட்சியை விளக்கும் சிறுகுறிப்பாக விளங்குகின்றன. இவ்வாறாக எழுத்துக்களுடன் கூடிய ஓவியத் தொடர்க் காட்சிகளை வரைவது நாயக்கர் கால மரபாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஓவியத்துடன் குறிப்புகள், கதை விளக்கங்கள், பெயர்கள் எழுதப்படும் இம்முறை அவர்கள் காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஒவியங்கள் யாவும் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை. பொற்றாமரைக்குளத்துக்கு அருகிலே அமைந்துள்ள ஊஞ்சல் மண்டபத்தின் விதானத்தில் மீனாட்சியின் திக் விஜயத்தையும், மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தையும் ஓவியங்களாக தீட்டியிருக்கின்றனர். “எறிதரங்கம் உடுக்கும் புவனங் கடந்து நின்ற ஒருவன் திருவுள் ளத்திலழ கொழுக வெழுதிப் பார்த்திருக்கும் உயிரோவிய” மாகிய மீனாட்சியின் திருக்கல்யாணக் காட்சியை சிற்பி கல்லிலே கவினுற வடித்துவிட்டான். ஆனால் ஒவியனுக்கு அது தீட்டமுடியாத ஒரு ஓவியமாகவே அமைந்து விட்டது. இந்தக் காட்சியில்தான் ராணி மங்கம்மாள் (கி.பி. 1869-1706) தளவாய் இராமய்யப்பர் நரசப்பையர்) முதலியோர் திருக்கல்யாணத்தைக் கண்டு தரிசிப்பதாக ஊஞ்சல்மண்டப விதானத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது பொற்றாமரைக் குளத்தின் வடக்கு கிழக்கு சுவர்களிலும் நாயக்கர் கால ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. இவ்வோவியங்கள் மூலம் புராணக் கதைகளை அறிவதோடு அக்கால மக்களின் ஆடைவகைகள் அணிகலன்கள் போன்றவை பற்றியும் அறிய முடிகிறது. |
| 653 | : | _ _ |a மதுரை, மீனாட்சியம்மன் கோயில், சுவரோவியம், திருவிளையாடற்புராணம், நாயக்கர் காலம், தெப்பக்குளம், பொற்றாமரைக் குளம் |
| 700 | : | _ _ |a இந்து சமய அறநிலையத்துறை |
| 710 | : | _ _ |a இந்து சமய அறநிலையத்துறை |
| 752 | : | _ _ |a பொற்றாமரைக்குளம் திருச்சுற்று மாளிகை |b # |c மதுரை |d மதுரை |f மதுரை |
| 850 | : | _ _ |a இந்து சமய அறநிலையத்துறை |
| 914 | : | _ _ |a 9.9195 |
| 915 | : | _ _ |a 78.1193 |
| 995 | : | _ _ |a TVA_PNT_00020 |
| barcode | : | TVA_PNT_00020 |
| book category | : | சுவரோவியங்கள் |
| cover | : |
|
| Primary File | : |