| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170526b ii d00 0 tam d |
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
| 245 | : | _ _ |a சமண ஓவியங்கள் |b1 : |b2 = |
| 300 | : | _ _ |a சுவரோவியம் |
| 500 | : | _ _ |a தமிழகத்தில் உள்ள தொன்மையான சமண மடங்களில் குறிப்பிடத்தக்கது திருமலையில் உள்ள மடமாகும். இவ்வூர் வேலூரிலிருந்து 25 கி.மீ. தெற்கே போளூர் தாலுகாவில் உள்ளது. இங்கு நேமிநாதர் கோயில், சிகாமணிநாதர் கோயில், மகாவீரர் கோயில் மற்றும் பார்சுவநாதர் கோயில் போன்ற சமண கோயில்கள் ஒரே இடத்தில் உள்ளன. இயற்கையாய் அமைந்துள்ள குகைக் கோயிலில் எழுப்பப்பட்ட செங்கல் சுவர்கள் மற்றும் விதானங்களில் விஜயநகர கால ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும் மலை அடிவாரத்தில் உள்ள மகாவீரர் கோயில் மகாமண்டபத்தில் வரையப்பட்ட ஓவியத்தின் எச்சங்கள் சில இடங்களில் காணப்படுகின்றன. இங்கு அலங்கார பூ வேலைப்பாடுகள் வெள்ளை வண்ண பின்புலத்தில் சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தில் வரையப்பட்டுள்ளது. குடைவரைக் கோயிலின் தென் மேற்கு மற்றும் வடக்கு சுவர்களில் “ சமவ சரண” காட்சிகள் வரையப்பட்டுள்ளன. இவ்வோவியங்கள் வண்ணம் மங்கி மிகவும் அழிவுற்ற நிலையில் உள்ளது. இருப்பினும், அங்குள்ள வட்டம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மேலும் சில உட் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சுவர் மற்றும் விதானங்களில் அலங்கார மற்றும் வடிவியல் வேலைப்பாடுகள் வரையப்பட்டுள்ளன. கிழக்குப் பக்கத்தில் உள்ள சுவரில் சுவாலமாலினியின் (இயக்கி) உருவம் வரையப்பட்டுள்ளது. உள் அறை மேற்கு மற்றும் தெற்கு சுவற்றில் அலங்கார ஓவியங்கள் காணப்படுகின்றன. இந்த சுவரை மூன்று கிடைமட்டமாக பிரித்து , அதில் இயக்கி அம்பிகாவின் ( நேமிநாதரின் இயக்கி) வாழ்க்கைச் சம்பவத்தை வரைந்துள்ளனர். இவ்வறையின் விதானம் முழுவதுமாக அலங்கார வேலைப்பாடுகளால் உள்ளது. ஒவ்வொரு காட்சி மற்றும் அலங்காரக் கூறுகளும் நான்கு புறமும் எல்லைக் கோடுகளால் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இக்குடைவரைக்கு செல்லும் நுழைவாயிலின் இருபுறமும் வாயில் காப்போர் (துவாரபாலகர்) உருவங்கள் வரையப்பட்டுள்ளன. இக்கோயிலின் வெளிப்புறச் சுவர்ப் பகுதிகள் மனித மற்றும் இறை உருவங்கள் காணப்படுகின்றன. |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a சோழர்கள் காலத்தில் உச்ச நிலையை அடைந்த ஓவியக்கலை அரசியல் மாற்றங்களால் சில நூறு ஆண்டுகள் கழித்து விஜயநகர கால ஓவியர்களால் இழந்த ஓவிய மரபை மீட்டெடுக்கும் வண்ணமாக ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அலங்கார ஓவியங்களைக் கொண்டு சுவர் மற்றும் விதானங்களை அழகு படுத்திய ஓவியன் சில பகுதிகளை கதை சொல்வதற்காக ஒதுக்கி அதில் சமணம் தொடர்பான கதை மற்றும் கடவுள்களை வரைந்துள்ளனர். |
| 653 | : | _ _ |a சமணம், திருமலை, திருவண்ணாமலை, அம்பிகா இயக்கி , நேமிநாதர், தீர்த்தங்காரர், ஜூவாலமாலினி, சமவசரணம், ஓவியங்கள், மடம், விஜயநகர அரசு |
| 700 | : | _ _ |a க.த.காந்திராஜன் |
| 752 | : | _ _ |a ஜைன குடைவரைக் கோயில் |b # |c திருமலை |d திருவண்ணாமலை |f போளூர் |
| 914 | : | _ _ |a 12.56213231 |
| 915 | : | _ _ |a 79.20149493 |
| 995 | : | _ _ |a TVA_PNT_00023 |
| barcode | : | TVA_PNT_00023 |
| book category | : | சுவரோவியங்கள் |
| cover | : |
|
| Primary File | : |