MARC காட்சி

Back
சமணத் தீர்த்தங்கரர் வாழ்க்கை நிகழ்வுகள்
000 : nam a22 7a 4500
008 : 170517b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a சமணத் தீர்த்தங்கரர் வாழ்க்கை நிகழ்வுகள் |b1 : |b2 =
300 : _ _ |a சுவரோவியம்
500 : _ _ |a

          பல்லவர்கள் காஞ்சியை தலைநகரமாக கொண்டு ஆட்சி நடத்திய போது திருப்பருத்திக்குன்றம்,ஒரு முக்கியமான சமணத் தலமாக இருந்தது.  இங்கு திரிலோக்கியநாதார் மற்றும் சந்தரபிரபர் எனும் இரண்டு முக்கிய கோயில்கள் உள்ளன.  இவ்விரண்டு கோயில்களிலும், பல்லவர், சோழர் மற்றும் விஜயநகர மன்னர்கள் காலத்துக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. திரிலோக்கியநாதர் கோயில்  பல்லவர் காலத்தில் எழுப்பப்பட்டு பின்னர் சோழர் மற்றும் விஜயநகர மன்னர்கள் காலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

          இங்கு விஜயநகர காலத்தில் சங்கம  வம்சத்து மன்னர் புக்கராயரின் தலைமை அமைச்சர் இருகப்பா என்பவரால் கி.பி.14 ம் நூற்றாண்டு சங்கீத மண்டபம் எழுப்பப்பட்டு அதன் விதானங்களில் சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன.  ஆரம்ப கால ஓவியங்கள் :-  இக்காலக் கட்டத்தில் வரைந்த  பெரும்பாலன ஓவியங்கள் மறைந்து போயுள்ளன. இருப்பினும் சில இடங்களில் ஓவியங்கள் அடையாளம் காணும் அளவிற்கு எஞ்சியுள்ளன. இதில் வர்த்தமான மகாவீரரின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள், அவரது தாயார் பிரியகாமினி கர்ப்பமாக இருந்தது,  சதுர்மேந்திரர் தலைமையில் நடக்கும் தீர்த்தங்கரர்களின் பிறப்புச் சடங்குகள் போன்றவை குறிப்பிடத்தக்க ஓவியங்களாகும். இவ்விதானத்தின் பிற பகுதிகள் கதைகள் ஏதுமின்றி  சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ண அலங்கார வேலைப்பாடுகளால் நிரப்பப்பட்டுள்ளது.

பிற்கால ஓவியங்கள்

          இம் மண்டபத்தில் உள்ள பெருபாலன ஓவியங்கள் வரைவு யுத்திக் கொண்டு  17 ம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில்  வரைந்திருக்ககூடும் எனக் கருதப்படுகின்றது.  இங்குள்ள முதல் தளத்தில் வடக்குப் பக்கத்தில் ரிஷபநாதருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள்  வரையப்பட்டுள்ளன.  இக் கதையின் சில பகுதிகள் இரண்டாம் தளத்திலும் காணப்படுகின்றது. பெரும்பாலன காட்சிகள் வலது புறம் இருந்து இடது புறமாக செல்கிறது, சில இடங்களைத் தவிர. இங்கு ஏழு ஓவியத்தொகுதிகளில் ரிஷபதேவரின் முந்தைய பிறப்பில் நடந்த வெவ்வேறு சம்பவங்களும், மற்றவற்றில்  தீர்த்தங்கரராய் மாறிய பின் நிகழ்ந்த சம்பவங்களும்   வரையப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து 24 வது தீர்த்தங்கரரான மகாவீரரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் வரையப்பட்டுள்ளன. ரிஷபதேவர் மற்றும் மகாவீரரின் உருவங்கள் வேறுபாடின்றி ஒரே சாயலில் காணப்படுகின்றன.  தாழ்வாரப் பகுதியில் இருக்கும் பல ஓவியங்கள் அழிந்த நிலையில் உள்ளன. காட்சிகள் 14 ஓவியத் தொகுதிகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது.   இவை பெரும்பாலும், மனிதர்கள் மற்றும் வானுலக பெண்கள் குடை மற்றும் கொடிகளை ஏந்திச்செல்வதாக உள்ளது.   மேலும், இங்கு 22 வது தீர்த்தங்கராகிய நேமிந்நாதர் மற்றும் கிருஷ்ணர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அதிக அளவில் மண்டபத்தின் தெற்குப் பகுதியில் வரையப்பட்டுள்ளன. இம் மண்டபத்தில் பெரும்பாலான ஓவியங்கள் சிதிலமடைந்துள்ளது, இருப்பினும் அங்கு காணப்படும் தமிழ் விளக்க குறிப்புகளின் உதவியுடன் வரையப்பட்ட காட்சிகளில் சில அடையாளம் காணும்படி உள்ளது.

510 : _ _ |a
  1. ஐ. ஜோப் தாமஸ், ‘தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு’,(காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்(பி) லிட்.,2014, 2015. 
  2. முனைவர் இரா. நாகசாமி, ஓவியப் பாவை, (முதல் பதிப்பு 1979, இரண்டாம் பதிப்பு 2010 சென்னை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை. 
  3. Sathianatha Aiyar, History of the Nayaks of Madura , Madras, Oxford University Press, 1943. 
  4. Sewell, R.J.  A Forgotten empire, New Delhi, National Book Trust, 1961, 
  5. Sivaramamurti, C. South Indian Paintings  (New Delhi, National Museum, 1968),
  6. Srinivasachari, C.S. A History of Gingee and its Rulers, Annamalainagar, Annamalai University, 1943. 
  7. Krishnaswami, A.  The Tamil country under Vijayanagar ( Annamalainagar, Annamalai University, 1964).
  8. Natarajan B.   The City of Cosmic Dance (New Delhi, Orient Longman. 1974).
  9. Ramachandran. T.M.  Tiruparutikunram and its temples with appendices on Jaina units of measurement and time, cosmology and classification of souls, Bulletin of the Madras Government Museum, New Series-General section Vol 1, Pt. 3 (Madras, Government Press,1934).
  10. Sastri, K.A. Nilakanta,  A History of South India  (Madras, Oxford University Press, 1971).
  11. Vriddagrisan, V. The Nayaks of Tanjore (Annamalainagar, Annamalai University,1942).
520 : _ _ |a

          திருப்பருத்திக்குன்றத்தில் உள்ள ஓவியங்கள் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் வரையப்பட்டவையாகும். முதலாவது 14 ஆம் நூற்றாண்டையும், இரண்டாவது 17ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகின்றது. முதலாவது வகையில் ஓவியங்கள் தனித்தனிக் காட்சியாக உள்ளது இரண்டாவது வகையில் ஓவியங்கள் தொடர் காட்சியாக நீண்ட விளக்கமாக காட்டப்பட்டுள்ளது. 

653 : _ _ |a சமணம், வர்த்தமானர், தீர்த்தங்காரர், காஞ்சிபுரம், விஜயநகர, நாயக்கர், சுவரோவியம், தமிழ்நாடு, இருகப்பா, திருப்பருத்திக்குன்றம், நேமிநாதர், கிருஷ்ணர்
700 : _ _ |a க.த.காந்திராஜன்
752 : _ _ |a திருலோக்கியநாதர் கோயில் |b # |c திருப்பருத்திக்குன்றம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம்
914 : _ _ |a 12.8277962
915 : _ _ |a 79.6852904
995 : _ _ |a TVA_PNT_00016
barcode : TVA_PNT_00016
book category : சுவரோவியங்கள்
cover :
Primary File :

TVA_PNT_00016_ திருப்பருத்திக்குன்றம்_கோபுரம்-0001.JPG

TVA_PNT_00016_ திருப்பருத்திக்குன்றம்_மண்டபம்-0002.JPG

TVA_PNT_00016_ திருப்பருத்திக்குன்றம்_உத்தரம்-0003.jpg

TVA_PNT_00016_ திருப்பருத்திக்குன்றம்_மருததேவி-0004.JPG

TVA_PNT_00016_ திருப்பருத்திக்குன்றம்_ரிஷபநாதரின்-பிறப்பு-0005.JPG

TVA_PNT_00016_ திருப்பருத்திக்குன்றம்_ஜென்மாபிஷேக-சடங்கு-0006.JPG

TVA_PNT_00016_ திருப்பருத்திக்குன்றம்_ஜென்மாபிஷேக-சடங்கு-0007.jpg

TVA_PNT_00016_ திருப்பருத்திக்குன்றம்_திரும்புதல்-0008.jpg

TVA_PNT_00016_ திருப்பருத்திக்குன்றம்_அரியணை-0009.JPG

TVA_PNT_00016_ திருப்பருத்திக்குன்றம்_திருமணம்-0010.JPG

TVA_PNT_00016_ திருப்பருத்திக்குன்றம்_ஜென்மாபிஷேகம்-0011.JPG

TVA_PNT_00016_ திருப்பருத்திக்குன்றம்_நகர்-திரும்புதல்-0012.JPG

TVA_PNT_00016_ திருப்பருத்திக்குன்றம்_சுதர்மேந்த்ரா-நடனம்-0013.JPG

TVA_PNT_00016_ திருப்பருத்திக்குன்றம்_வர்த்தமானர்-தீட்சை-0014.JPG

TVA_PNT_00016_ திருப்பருத்திக்குன்றம்_வர்த்தமானர்-தீட்சை-செய்தல்-0015.JPG

TVA_PNT_00016_ திருப்பருத்திக்குன்றம்_உணவளிப்பு-0016.JPG

TVA_PNT_00016_ திருப்பருத்திக்குன்றம்_நடன-மங்கைகள்-0017.jpg

TVA_PNT_00016_ திருப்பருத்திக்குன்றம்_கிருஷ்ணர்-அவதாரம்-0018.jpg

TVA_PNT_00016_ திருப்பருத்திக்குன்றம்_வசுதேவர்-நந்தகோபர்-0019.jpg

TVA_PNT_00016_ திருப்பருத்திக்குன்றம்_கிருஷ்ணனின்-விளையாட்டு-0020.JPG

TVA_PNT_00016_ திருப்பருத்திக்குன்றம்_கோவர்த்தன-மலை-0021.JPG

TVA_PNT_00016_ திருப்பருத்திக்குன்றம்_கிருஷ்ணன்-வாழ்க்கை-நிகழ்வுகள்-0022.JPG

TVA_PNT_00016_ திருப்பருத்திக்குன்றம்_மகாபாலன்-தோல்வி-0023.JPG

TVA_PNT_00016_ திருப்பருத்திக்குன்றம்_ஜராசந்தரின்-மகன்கள்-0024.JPG

TVA_PNT_00016_ திருப்பருத்திக்குன்றம்_துவாரவதி-0025.JPG

TVA_PNT_00016_ திருப்பருத்திக்குன்றம்_ஜென்மாபிஷேக-சடங்கு-0026.JPG

TVA_PNT_00016_ திருப்பருத்திக்குன்றம்_அரியணை-0027.JPG

TVA_PNT_00016_ திருப்பருத்திக்குன்றம்_ஜராசந்தர்-0028.JPG