| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 220825b ii d00 0 tam d |
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
| 245 | : | _ _ |a கரிக்கையூர் |b1 : |b2 = |
| 300 | : | _ _ |a பாறை ஓவியங்கள் |b 1 அடி முதல் 20 அடி வரை |
| 500 | : | _ _ |a இங்கு விலங்குகள், மனிதர்கள், விலங்கு மற்றும் மனிதர்களுக்கிடையே நிகழ்ந்த சம்பவங்கள், மரம், பறவைகள் குறீயீடுகள் என பல்வேறு பார்வையில் இவ்வோவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதிகமாக மாடு மற்றும் மான்கள் காண்ப்படுகின்றது. அது போல யானை, குரங்குகள், நாய், நரி, பாம்பு, புலி மற்றும் அடையாளங்காண முடியாத விலங்குகள் காட்டப்பட்டுள்ளது. மேலும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே நடந்த வேட்டைக் காட்சி, விலங்குகளை பழக்கப்படுத்துதல், விலங்குகளோடு பயணித்தல் என காட்சிகள் விரிகின்றன. மாடுகள் கன்றுக்குட்டிகளோடு வரிசையாக செல்லும் ஓவியம் இங்குள்ள ஓவியங்களிலேயே சிறப்பானது. இங்கு காட்டப்பட்டுள்ள சில குறியீடுகள் சில முத்திரைக் காசுகளில் வரும் குறியீட்டை ஒத்த தன்மையில் உள்ளது என முனைவர். நம்பிராஜன் (தொல்லியலார்) கருதுகின்றார். மரங்கள் அதிக அளவில் பாறை ஓவியங்களில் காணப்படுவதில்லை, இங்கு இரண்டு இடங்களில் காட்டப்பட்டுள்ளது. இங்கு சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் அனைத்து ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன, இருப்பினும் சிவப்பு நிறம் வெவ்வேறு நிறத் தின்மையில் உள்ளது. இங்கு வரையப்பட்ட ஓவியங்கள், பாறையின் தன்மைக்கேற்ப வரியப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஓவியனும் தான் வரைய வேண்டிய ஓவியத்துக்கேற்றவாறு இடத்தைத் தேர்வு செய்து அதற்கேற்ற வண்ணங்களைப் பயன்படுத்தியுள்ளனர். சில இடங்களில் மிக உயரமான இடங்களில் ஓவியங்கள் காணப்படுகின்றது, அவை தேன் எடுக்க கட்டும் மரக்கொடியைக் கொண்டோ, மூங்கில் ஏணி கொண்டோ ஏறி வரைந்திருக்கக்கூடும். இங்கு அடையாளம் காணப்பட்ட ஓவியங்கள் யாவும் விலங்கு மற்றும் மனிதர்களின் வாழ்வியல் நிகழ்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவே உள்ளது. மனித உருவங்களை விட விலங்கு உருவங்கள் நேர்த்தியாக வரையப்பட்டுள்ளது. இங்குள்ள ஓவியங்கள் தனியாகவோ அல்லது தொகுதியாகவோ வரையப்பட்டுள்ளன. ஏற்கனவே வரையப்பட்ட ஓவியங்களுக்கு மேல் பிற்காலத்திய ஓவியங்கள் சில இடங்களில் காணப்படுகின்றது. விலங்குகள் பெரும்பாலும் பக்கவாட்டிலேயே காட்டப்பட்டுள்ளது அது போல் வெவ்வேறு நிலைப்பாடுகளில் காட்டப்பட்டுள்ளது. ஓவியங்கள் பெரும்பாலும் கோட்டோவியங்களாக உள்ளது அது போல வண்ணம் நிறப்பட்டோ உள்ளது. இங்கு காட்டப்படும் வீரர்கள் வாள் மற்றும் கேடயத்துடனும், குதிரைகள் அழகிய சேணம்,படுக்கை விரிப்பு, கடிவாளம், குஞ்சம் போன்ற அலங்கரங்களோடு காணப்படுகின்றனர். இப் போர்க்காட்சியை, புராண இதிகாசங்களோடு தொடர்பு படுத்தி பார்க்க இயலாது. இது அந்த ஓவியன் எங்கையோ பார்த்த காட்சியாக வரைந்திருக்கக்கூடும். இங்குள்ள ஓவியங்களில் விளக்கமாக காட்டப்பட்டிருக்கும் ஆயுதங்களை வைத்து அவர்களுக்கு அந்த ஆயுதங்களோட இருந்த நெருங்கிய தொடர்பு தெரிய வருகிறது. அது போல இங்குள்ள பழங்குடி வீரர்கள் அரசின் படையில் பணியாற்றியிருக்கலாம், ஆகையால் அவர்களுக்கு இவ்வுடை, ஆயுதங்கள் மற்றும் அணிகலன்கள் குறித்து பரிச்சயமாகியுருக்கலாம். போர் வீரர்களைக் காட்டும் காட்டும் சில ஓவியங்களில், வீரர்கள் யாவும் ஒரு நேர் கோட்டின் மேல் நிற்பது போல காட்டப்பட்டுள்ளது. அவை, சமவெளியில் நடந்த போரை குறிப்பதாக இருக்கலாம். அல்லது சமவெளியில் நடந்த போர்க்காட்சியனைக் கண்ட ஓவியன் இதைப் பதிவு பண்ணியிருக்கலாம். அது போல போர்க்காட்சிகளில் காட்டப்படும் வில் மற்றும் அம்பு,பிற ஆயுதங்கள் பலவித தன்மையில் உள்ளது. விலங்களை ஓவியங்களில் காட்டும் போது, சில சமயம் அவ்விலங்குகளின் உள்ளுருப்புக்களை வேட்டைச் சமூக ஓவியர்கள் உலகமெங்கும் தொல் பழங்காலம் தொட்டே அனைத்து பகுதிகளிலும் வரைந்துவந்துள்ளனர். இம் மாதிரி எக்ஸ்-ரே வகை ஓவியங்கள் யாவும் வரைவு முறைகளில் ஒத்த தன்மை இல்லை. அவை ஓவியனுக்குகேற்ப மாறியுள்ளது. சிலர், உள்ளதை உள்ளபடி காட்டும் விதத்தில் வரைந்துள்ளனர் சிலர் உறுப்புக்களை எளிமைப் படுத்தி அலங்கார கோடுகளால் நிறப்பியுள்ளனர். இங்குள்ள சில ஓவியங்களில் உள்ளருப்புக்கள் அலங்காரகளாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. பாறை ஓவியங்களில் உடும்பு / பல்லியின் உருவங்கள் தொன்மையான காலகட்டங்களில் இருந்து வரையப்பட்டுள்ளது. இங்கு சுமார் 2 அடி நீளத்திற்கு உடும்பு ஒன்று மிகவும் யதார்த்தமாக வரையப்பட்டுள்ளது. இவ்வாறு உடும்பு வரைவதற்கு ஏதும் சமய நம்பிக்கை / சடங்குத் தொடர்பாக இருக்கலாம் என சில அறிஞர்கள் கூறுகின்றனர். அதே சமயம் உணவுக்காக வேட்டையாடப்படும் விலங்குகளில் மான்களுக்கு அடுத்தபடியாக உடும்புகளை வேட்டையாடியுள்ளனர். |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a பொதுவாக பாறை ஓவியங்கள், குகை, பாறை ஒதுக்குகள், கற்திட்டைகள் போன்ற இடங்களிலேயே அதிகமாக வரையப்பட்டுள்ளன. இவ்விடங்கள் வாழ்விடங்களாகவோ அல்லது வனங்களுக்குள் வரும் போது தற்காலிக ஓய்வெடுக்கும் இடங்களாகவோ அல்லது தேன் கூடு பாறைகளாகவோ இருக்க்க்கூடும். அது போல இவ் விடங்கள் பிற மனிதர்கள் வந்து போகும் இடமாகவே இருக்கும். தான் வரையும் ஓவியத்தைப் பிறர் வந்து பார்க்கும் இடங்களிலே வரைந்துள்ளனர். இங்கு காணப்படும் ஓவியங்கள் தொல் பழங்கால வேட்டைச்சமூகத்தைச் சார்ந்த கலைஞர்களால் உருவாக்கப்பட்டது. இன்றைக்கும் இங்கு வாழும் மக்கள் உயரமான பாறைகளில் மரக்கொடியின் உதவியுடன் மேலேறி தேன் எடுத்து வருகின்றனர். இங்கு வரையப்பட்டுள்ள ஓவியங்கள் வெவ்வேறு ஓவியர்களால் பல் வேறு காலகட்டங்களில் வரையப்பட்டுள்ளது. இவற்றில் தொன்மையான ஓவியங்கள் புதிய கற்காலத்தில் வரையப்பட்டுருக்க கூடும். இவ்வோவியங்கள் பெரும்பாலும் அடர் சிவப்பு வண்ணத்தில் சிறிய அளவிலேயே காணப்படும், மேலும் அவற்றில் மான் மற்றும் மாடுகளே உள்ளது. அது போல இப் பாறை ஒதுக்கில் புதிய கற்கால கருவிகள் கிடைக்கப் பெற்றது. மேலும் இப் பாறையின் அடிவாரப் பகுதியில் பெருங்கற்கால கற்திட்டைகளும், நெடுங்கல்லும் காணப்படுகின்றது. ஆகையால் இங்கு பெருங்கற்கால மற்றும் வரலாற்று கால ஓவியங்களும் பரவலாக வரையப்பட்டுள்ளது. இங்கு புதிய கற்கால கற்கருவிகள் மற்றும் பெருங்கற்கால பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன என தொல்லியல் ஆய்வாளர் அறவாழி கூறுகின்றார். வரலாற்றுக்கு முந்தைய கால கட்டத்தைச் சேர்ந்த இக் கலை வடிவங்கள் அக்கால சமூக நிகழ்வுகள், பொருளாதாரம், கருத்தியல், அழகியல் மற்றும் சுற்றுச் சூழல் குறித்த தகவல்களை நமக்கு பரிமாறுகின்றன. கரிக்கையூர் நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி தாலுகாவில் உள்ள கிராமம். இங்கு இருளர் எனும் மலை வாழ் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இவ்வூரிலிருந்து இருந்து சுமார் 3.5 கி.மீ தொலைவில் “ பொறிவரை” எனும் பாறை ஒதுக்கு உள்ளது. இப் பாறை ஒதுக்கு சுமார் 500 அடி நீளமும் சுமார் 150 அடி உயரமும் கொண்டுள்ளது. இங்கு பருவ காலங்களில் மலைத்தேன்கள் அதிகளவில் கூடுகள் கட்டும். அச் சமயம் இப்பகுதி மக்கள் தேன் எடுக்க இப்பாறைக்கு வருவதுண்டு. அது போல, வேட்டையாடும் சமயம் மற்றும் பிற பணிகளுக்காக வருபவர்கள் இங்கு தங்கிச் செல்வதும் உண்டு. கிழக்கு – மேற்காக அமைந்துள்ள இப் பாறை ஒதுக்கு தெற்கு திசையை நோக்கியுள்ளது. இப் பாறைக்கு வருவதற்கு கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில் இரண்டு வழிகள் தான் உண்டு. மேலும் நூறு பேர் தங்குமளவுக்கு பெரிய பாறை. எதிர்புறத்தில் நீண்ட சரிவான பகுதி, மலை அடிவாரத்தில் பவானி ஆறும், மோயாறும் சங்கமிக்கும் பகுதியாகும். இப் பாறையில் சுமார் 1 அடி முதல் 20 அடி உயரம் வரை சுமார் 400 அடி நீளத்துக்கு ஓவியங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு ஓவியர்களால் சுமார் 300 ஓவியங்கள் தனியாகவோ அல்லது குழுமமாகவோ வரையப்பட்டுள்ளது. பெரும்பாலான ஓவியங்கள் மங்கிய நிலையிலும், மறைந்த நிலையிலும் உள்ளன அதே போல ஒன்றின் மேல் ஒன்றாக சில இடங்களில் வரையப்பட்டுள்ளது. இவ்விடமே தென்னிந்தியாவின் மிகப் பெரிய பாறை ஓவியம் உள்ள இடமாகும். இங்கு வரையப்பட்ட ஓவியங்கள் யாவும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலேயே வரையப்பட்டுள்ளது. உயரமான இடங்களிலுள்ள ஓவியங்களை வரைய செயற்கையான கட்டுமானங்களை பயன்படுத்தி வரைந்திருக்கலாம் என அறிய முடிகிறது. |
| 653 | : | _ _ |a கரிக்கையூர், பாறை ஓவியங்கள், நீலகிரி, பொறிவரை, தொல் பழங்கால ஓவியங்கள், தமிழகப் பாறை ஓவியங்கள், மான், மாடு, உடும்பு, எக்ஸ்ரே-ஓவியம் |
| 700 | : | _ _ |a க.த.காந்திராஜன் |
| 752 | : | _ _ |a பொறிவரை |b # |c கரிக்கையூர் |d நீலகிரி |f கோத்தகிரி |
| 914 | : | _ _ |a 11.41445051 |
| 915 | : | _ _ |a 76.86599493 |
| 995 | : | _ _ |a TVA_PNT_00001 |
| barcode | : | TVA_PNT_00001 |
| book category | : | பாறை ஓவியங்கள் |
| Primary File | : |