Back
நாணயம்
முதலாம் மகேந்திரவர்மன், கி.பி 590-630
மொழி வடமொழி
எழுத்து தமிழ்-பல்லவ கிரந்தம்
வடிவம் வட்டம்
உலோகம் கலப்பு உலோகம்
அரசு / ஆட்சியாளர் முதலாம் மகேந்திரவர்மன்
வரலாற்றுஆண்டு கி.பி 590-630
கண்டெடுத்தஇடம் கும்பகோணம்
முன்பக்கம் வட்டம்
பின்பக்கம் வட்டம்
எடை 1.8 கிராம்
சுருக்கம்

          கி.பி மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் பல பகுதிகளை ஆண்டவர்கள் பல்லவர்கள் ஆவர். இவர்களின் ஆட்சி வடக்கே கிருஷ்ணா நதியில் இருந்து, தெற்கே தென்பெண்ணை வரையில் பரவி இருந்தது. காஞ்சிபுரம் பல்லவர்களின் தலைநகரமாகும், அப்போது அது ‘கச்சி’ எனும் பெயரால் அறியப்பட்டிருந்தது. மாமல்லபுரம் இவர்களின் துறைமுகமாக விளங்கியது.

          பல்லவர்களின் சின்னம் காளையாகும். இவர்களின் பெரும்பாலான நாணயங்களில் இச்சின்னமே காணப்படுகின்றது. சங்ககால நாணயங்கள் பொதுவாக சதுர வடிவானவை, செம்பினால் செய்யப்பட்டவை. அவை போல அல்லாமல் பல்லவரின் நாணயங்கள் வட்ட வடிவமாக உள்ளன. பெரும்பாலும் போடின் என்ற ஈயம் கலந்த உலோகக் கலவையால் செய்யப்பட்டுள்ளன. பல்லவர் நாணயங்களில் பெரும்பாலானவை உருவங்கள் பொறிக்கப்பட்டவை, எழுத்துக்கள் பொறிக்கப்பட்டவைகளும் அரிதாக சில உள்ளன. அவற்றில் அரசரின் பட்டப் பெயர்கள் பல்லவ கிரந்தம் மற்றும் தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன.

ஒளிப்படம்வழங்கியநிறுவனம்/நபர் மன்னர் மன்னன்
குறிச்சொல்
குறிப்புதவிகள்
ஒளிப்படம்எடுத்தவர் மன்னர் மன்னன்
முதலாம் மகேந்திரவர்மன், கி.பி 590-630
நாணயம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 21 May 2018
பார்வைகள் 211
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய நாணயம்