Back
நாணயம்
சங்ககால மலையமான், கி.மு. 1-ஆம் நூற்றாண்டு
வடிவம் செவ்வகம்
உலோகம் செம்பு
அரசு / ஆட்சியாளர் சங்ககால மலையமான்
வரலாற்றுஆண்டு கி.மு. 1-ஆம் நூற்றாண்டு
கண்டெடுத்தஇடம் கரூர்
முன்பக்கம் செவ்வகம்
பின்பக்கம் செவ்வகம்
எடை 2.92 கிராம்
சுருக்கம்

         மூவேந்தர்களைத் தவிர 11 குறுநில மன்னர்களும் தமிழகத்தை ஆண்டுள்ளனர். அவர்கள் ‘பதினொரு வேளிர்’ என அழைக்கப்பட்டனர். மலையமான்கள் 11 வேளிர் அரச மரபினருள் ஒருவராவர். திருமுடிக்காரி, சோழிய வேனாதி திருக்கண்ணன் ஆகிய இரண்டு மலையமான் அரசர்களின் பெயர்கள் சங்க கால இலக்கியங்களிலே காணப்படுகின்றன.

          திருக்கோவிலூருக்கு மேற்கே உள்ள பெண்ணையாற்றின் தென் பகுதியும், தென்கரைப் பகுதியும் ‘மலாடு’ என்ற பெயரில் ஒரு நாடாக விளங்கியது. ‘மலையமான் நாடு’ என்பதன் சுருக்கமே மலாடு ஆகும். இதுவே மலையமான்களின் ஆட்சிப் பகுதியாகும். திருக்கோவிலூர் மலையமான்களின் தலைநகரமாக விளங்கியது.  ஆறும் மீனும் மலையமான்களின் பகுதியை வளமாக்கின. மலைப் பகுதி ஆதலால் குதிரைதான் போக்குவரத்திற்கு அதிகம் பயன்பட்டது. இக்காரணங்களால் இவர்களின் நாணயங்களில் குதிரையும், ஆறும், மீன்களும் அதிகம் காணப்படுகின்றன.

ஒளிப்படம்வழங்கியநிறுவனம்/நபர் மன்னர் மன்னன்
குறிச்சொல்
குறிப்புதவிகள்
ஒளிப்படம்எடுத்தவர் மன்னர் மன்னன்
சங்ககால மலையமான், கி.மு. 1-ஆம் நூற்றாண்டு
நாணயம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 21 May 2018
பார்வைகள் 185
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய நாணயம்