| 245 |
: |
_ _ |a தஞ்சை கொங்கணீஸ்வரர் கோயில் - |
| 246 |
: |
_ _ |a கொங்கணீஸ்வரர் |
| 520 |
: |
_ _ |a தஞ்சாவூர் மேலராஜவீதியில் இக்கோயில் அமைந்துள்ளது. தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் கீழ் வழிபாட்டில் உள்ளது. கொங்கணச் சித்தர் நிறுவிய கொங்கணேசுவரர் இங்கு அருள்பாலிக்கிறார். இங்கு சில கல்வெட்டுகளும், இரண்டாம் ஏகோஜி மன்னரின் இரண்டு செப்பேடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மகாத்மியம் என்னும் ஏட்டுப்பிரதிகளில் உள்ள பவிஷ்யோத்தர புராணத்தின் ஒரு பகுதியாக கொங்கண முனிவர் வழிபட்ட கொங்கணேசுவரர் பற்றிக் கூறப்பட்டுள்ளன. கொங்கணர் கடைக்காண்டம், திரிகாண்டம், ஞானகுளிகை ஆகிய வைத்திய நூல்களை இயற்றியவர். மராட்டிய மன்னர்கள் காலத்தில் (1832-1855) எழுதப்பட்ட தெலுங்கு மொழிக் காவியமான அன்னபூர்ணா பரிணயமு என்ற நூலில் தஞ்சை நகரச் செட்டியார் ஒருவரின் வளர்ப்பு மகளான அன்னபூரணா தேவி என்பவள் கொங்கணேசுவரரிடம் அளவற்ற பக்திகொண்டு அவரையே மணந்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது. |
| 653 |
: |
_ _ |a கொங்கணேசுவரர் கோயில், கொங்கணச் சித்தர், கொங்கணவர், தஞ்சை கொங்கணேசுவரர் கோயில், கொங்கணர், அன்னபூர்ணா பரிணயமு, அன்னபூர்ணா தேவி, அன்னபூரணி, ஞானாம்பிகை, பவிஷ்யோத்தர புராணம் |
| 710 |
: |
_ _ |a தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு / மராட்டிய மன்னர் ஏகோஜி |
| 909 |
: |
_ _ |a 1 |
| 910 |
: |
_ _ |a 300 ஆண்டுகள் பழமையானது. மராட்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டது. சோழமன்னர்களின் இரண்டு கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன. கொங்கணச்சித்தர் வழிபட்ட தலம் இது |
| 914 |
: |
_ _ |a 10.78668389 |
| 915 |
: |
_ _ |a 79.13521886 |
| 916 |
: |
_ _ |a கொங்கணேசுவரர் |
| 918 |
: |
_ _ |a ஞானாம்பிகை, அன்னபூரணி |
| 922 |
: |
_ _ |a வில்வம் |
| 923 |
: |
_ _ |a காவிரி |
| 924 |
: |
_ _ |a மகுடாகமம் |
| 925 |
: |
_ _ |a காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் |
| 926 |
: |
_ _ |a வைகாசி பெருவிழா, நவராத்திரி, கார்த்திகை சோமவாரம், மகாசிவராத்திரி |
| 927 |
: |
_ _ |a இரண்டாம் ஏகோஜி மன்னர் கால இரண்டு செப்பேடுகள் இங்கு கிடைத்துள்ளன. |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a கருவறையில் கொங்கணேசுவரர் இலிங்க வடிவில் உள்ளார். அர்த்தமண்டப தென்புறக் கோட்டத்தில் விநாயகர் சிற்பம் உள்ளது. சூரியன், பைரவர், சனைஸ்சரண் ஆகியோருடைய உருவங்கள் இங்கு அமைந்துள்ளன. அன்னபூரணி திருமுன்னும், ஞானாம்பிகை திருமுன்னும் தனித்தனியே இக்கோயிலில் அமைந்துள்ளன. இரண்டு திருமுன்களிலும் அம்மன் அருள்பாலிக்கிறார். நால்வர் சிற்பங்கள் இங்கு காணப்படுகின்றன. தேவக்கோட்டங்களில் வேறு இறையுருவங்கள் வைக்கப்படவில்லை. |
| 930 |
: |
_ _ |a கொங்கணச்சித்தர் அத்ரி மகரிஷியின் சீடரான தத்தாத்ரேயரிடமிருந்து மறைநூல் கற்றவர். வடபுலத்திலிருந்து தென்னகம் வந்தவர். இவர் சோழமண்டலத்திற்கு வந்து இங்குள்ள தலத்தில் அமர்ந்து தவம் செய்தார். அதனால் இறைவன் இவரது சடைமுடிக்குள் வந்து தங்கிக் கொண்டார். இதனால் பூலோக இயக்கம் பாதிப்படைந்தது கண்டு இந்திராதி தேவர்களும், சப்தரிஷிகளும் புலிகளாக உருமாறி அவருடைய தவத்தை கலைக்க முற்பட்டனர். ஆனால் புலியை வென்று, அதை தனது வாகனமாகக் கொண்டு தனது தவத்தைத் தொடர்ந்தார். இதனால் கலக்கமுற்ற இந்திராதி தேவர்கள் அவரை மனமுருக வேண்டினா். இதனால் மனமிரங்கிய கொங்கணர் ஒரு ஆண்டுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள் உங்கள் எண்ணம் ஈடேறும் என்று கூறினார். அதன்படி தேவர்களும் வழிபடவே, கொங்கணரின் சடைமுடிக்குள் இருந்து சிவபெருமான் தோன்றினார். கொங்கணர் சிவலிங்கத்தை இங்கே நிறுவி வழிபட்டார். கொங்கணர் நிறுவியதால் கொங்கணேசுவரர் என்று பெயர் பெற்றார் இறைவன். மேலும் கொங்கணர் இங்கு அம்மனையும் நிறுவினார். ஞானாம்பிகை என்ற பெயரில் அம்மன் இங்கு அருள்பாலிக்கிறார். இறைவனுடைய அதே சக்தியை அம்மனும் இத்தலத்தில் பெற்றிருக்கிறாள். கல்விக் கேள்விக்கு இத்தலம் உரியது. அன்னபூரணி என்னும் தஞ்சைச் செட்டியாரின் வளர்ப்புமகள் இறைவனையே மணந்து கொள்ள நினைத்து பக்தி செலுத்தியதால் இத்தலத்தில் அவருக்கு தனித் திருமுன் அமைந்துள்ளது. |
| 932 |
: |
_ _ |a இறைவன் கருவறை, ஞானாம்பிகை அம்மன் கருவறை, அன்னபூரணி கருவறை என்ற மூன்று கருவறைகள் தனித்தனியே இங்கு அமைந்துள்ளன. இறைவன் கருவறை விமானம் இரு தளங்களைக் கொண்டுள்ளது. முற்றிலும் புனரமைக்கப்பட்டுள்ளது. தாங்குதளம் முதல் கூரை வரை கற்றளியாகவும், அதன் மேற்பகுதி சுதையாலும் அமைக்கப்பட்டுள்ளது. விமானத்தின் தளங்களில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கோட்டங்களில் சுற்றுத் தெய்வங்கள் கணபதியைத் தவிர காணப்படவில்லை. சுவர்களில் அரைத்தூண்களும், கோட்டங்களும், இருகோட்டங்களுக்கிடையே கும்பப் பஞ்சரமும் அமைந்துள்ளன. பிற்காலப் பணியாக மகாமண்டபம் அமைந்துள்ளன. இதில் யாளித்தூண்கள் இடம் பெற்றுள்ளன. |
| 933 |
: |
_ _ |a தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| 934 |
: |
_ _ |a தஞ்சாவூர் பெரிய கோயில், வடபத்ரகாளியம்மன் கோயில், கோட்டை மேலவாசல் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோயில் |
| 935 |
: |
_ _ |a தஞ்சாவூர் மேலராஜவீதியில் இக்கோயில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் பேருந்து நிலையத்திலிருந்து மூன்று சக்கர வாடகை உந்தியில் செல்லலாம். |
| 936 |
: |
_ _ |a காலை 7.00-12.00 முதல் மாலை 4.00-8.00 வரை |
| 937 |
: |
_ _ |a தஞ்சாவூர் |
| 938 |
: |
_ _ |a தஞ்சாவூர் |
| 939 |
: |
_ _ |a திருச்சி, சென்னை - மீனம்பாக்கம் |
| 940 |
: |
_ _ |a தஞ்சாவூர் விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000079 |
| barcode |
: |
TVA_TEM_000079 |
| book category |
: |
சைவம் |
| cover images TVA_TEM_000079/TVA_TEM_000079_கொங்கணீஸ்வரர்-கோயில்_பைரவர்-0004.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000079/TVA_TEM_000079_கொங்கணீஸ்வரர்-கோயில்_விநாயகர்-0001.jpg
TVA_TEM_000079/TVA_TEM_000079_கொங்கணீஸ்வரர்-கோயில்_நால்வர்-0002.jpg
TVA_TEM_000079/TVA_TEM_000079_கொங்கணீஸ்வரர்-கோயில்_பெண்-வாயிற்காவலர்-0003.jpg
TVA_TEM_000079/TVA_TEM_000079_கொங்கணீஸ்வரர்-கோயில்_பைரவர்-0004.jpg
TVA_TEM_000079/TVA_TEM_000079_கொங்கணீஸ்வரர்-கோயில்_அம்மன்-திருமுன்-0005.jpg
TVA_TEM_000079/TVA_TEM_000079_கொங்கணீஸ்வரர்-கோயில்_முகப்பு-0006.jpg
TVA_TEM_000079/TVA_TEM_000079_கொங்கணீஸ்வரர்-கோயில்_அன்னபூர்ணா-கோயில்-0007.jpg
TVA_TEM_000079/TVA_TEM_000079_கொங்கணீஸ்வரர்-கோயில்_கருவறைமுகப்பு-0008.jpg
TVA_TEM_000079/TVA_TEM_000079_கொங்கணீஸ்வரர்-கோயில்_திருச்சுற்று-0009.jpg
TVA_TEM_000079/TVA_TEM_000079_கொங்கணீஸ்வரர்-கோயில்_மகாமண்டபம்-0010.jpg
TVA_TEM_000079/TVA_TEM_000079_கொங்கணீஸ்வரர்-கோயில்_திருச்சுற்று-0011.jpg
|