MARC காட்சி

Back
மடம் தடாகபுரீஸ்வரர் கோயில்
245 : _ _ |a மடம் தடாகபுரீஸ்வரர் கோயில் -
246 : _ _ |a தடாகபுரீஸ்வரர் கோயில்
520 : _ _ |a இக்கோயிலுக்கருகில் உள்ள சறுக்கும் பாறையில் உள்ள கம்பவர்மனுடைய கல்வெட்டு இவ்வூரை குளத்தூர் என்கிறது. குளத்தூர் என்பதே வடமொழியில் தடாகபுரி என்றாகி, இங்குள்ள இறைவன் தடாகபுரீஸ்வரர் என அழைக்கப்பட்டுள்ளார் எனக் கருத வாய்ப்புண்டு. இக்கோயிலில் பிற்காலச் சோழர்கள் கல்வெட்டு இடம்பெறுகிறது. இக்கோயிலைச் சார்ந்த கி.பி. 14-ஆம் நூற்றாண்டு கல்வெட்டொன்று “சம்பாபிக அமராபதி சாத்தார் மகன் காதலியார் மண்டபம் கட்டியுள்ளார்” என்பதைக் குறிப்பிடுகின்றது. இம்மண்டபம் நூற்றுக்கால் மண்டபம் அல்லது திருமண மண்டபமாயிருக்கலாம் எனத் தெரிகிறது. பிற்காலச் சோழர்கள் காலத்தில் அம்மனுக்கு தனி திருமுன் கட்டப்பட்டது. அவ்வாறே இக்கோயிலிலும் அம்மனுக்கு தெற்கு நோக்கிய திருமுன் (சந்நிதி) அமைந்துள்ளது. இக்கோயில் கோபுரத்தில் சுதைச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
653 : _ _ |a மடம் கோயில், மடம் தடாகபுரீஸ்வரர் கோயில், தடாகபுரீஸ்வரர் கோயில், திருவண்ணாமலை தடாகபுரீஸ்வரர் கோயில், முதலாம் குலோத்துங்கன் கோயில்கள், தடாகபுரீஸ்வரர், பிற்காலச் சோழர் கலைப்பாணி, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கோயில்கள், வந்தவாசி வட்டாரக் கோயில்கள், தெள்ளார் வட்டக் கோயில்கள்
710 : _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
905 : _ _ |a கி.பி.11-ஆம் நூற்றாண்டு / முதலாம் குலோத்துங்க சோழன்
909 : _ _ |a 1
910 : _ _ |a 900 ஆண்டுகள் பழமையானது. பிற்காலச் சோழர் கலை, கட்டடக்கலையைப் பிரதிபலிக்கின்றது.
914 : _ _ |a 12.3988882
915 : _ _ |a 79.54577932
916 : _ _ |a தடாகபுரீஸ்வரர்
927 : _ _ |a இக்கோயிலில் முதலாம் குலோத்துங்க சோழன் காலக் கல்வெட்டே மிகத் தொன்மையானது என்பதால் இவன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது எனலாம். எனினும் இக்கோயிலுக்கருகில் உள்ள சறுக்கும் பாறையில் உள்ள கம்பவர்மனுடைய கல்வெட்டு இவ்வூரை குளத்தூர் என்றும், இங்கிருந்து வாணியன் சயவல்லவன் என்பவன் ஊர்ச்சபையிடம் நிலம் விலைக்கு வாங்கி ஏரிப்பட்டியாக வழங்கியுள்ளதையும் கூறுகிறது. தடாகபுரீஸ்வரர் கோயில் கல்யாண மண்டபத்தில் உள்ள மூன்றாம் இராசநாராயணன் காலக் கல்வெட்டு கி.பி.1368-இல் வெட்டப்பட்ட இக்கல்வெட்டு, ”சம்பாபிக அமராபதி சாத்தார் மகன் காதலியார் மண்டபம் கட்டியுள்ளார்” என்பதைக் குறிக்கிறது.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a இக்கோயில் கருவறை விமானத்தின் தேவக்கோட்டங்களில் சிற்பங்கள் இடம் பெறவில்லை. கருவறையில் இறைவன் இலிங்க வடிவில் உள்ளார். கணபதி, முருகன், ஏழுகன்னியர், பைரவர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கான உபகோயில்கள் திருச்சுற்றில் அமைந்துள்ளன. அவ்வவற்றில் அவற்றிற்கான இறையுருவம் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் முதற்சுற்றில் அம்மன் தெற்கு நோக்கியவாறு அருள்பாலிக்கிறாள்.
930 : _ _ |a இப்பகுதியை ஆண்ட மன்னன் ஒருவன் தடாகம் வெட்டிய போது சிவலிங்கம் ஒன்று கிடைத்ததாகவும், அதனை இவ்விடத்தில் நிறுவி வழிபட்டதால் தடாகபுரீஸ்வரர் என வழங்கப்படுவதாகவும் தலவரலாறு கூறுகிறது.
932 : _ _ |a இக்கோயில் முதலாம் குலோத்துங்கன் காலக் கற்றளியாகும். பிற்காலச் சோழர் கலைப்பாணியை பின்பற்றி இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. தேவகோட்டங்கள் வெற்றிடமாக உள்ளன. இக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகமண்டபம், நூற்றுக்கால் மண்டபம், திருமண மண்டபம், உப தெய்வங்களின் திருமுன்கள் மற்றும் கோபுரம் ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. மிகப் பெரிய வளாகத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
933 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a திருவேதிபுரம், திருவண்ணாமலை கோயில், உத்திரமேரூர்
935 : _ _ |a சென்னையிலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள வந்தவாசியிலிருந்து சேத்துப்பட்டு செல்லும் வழியில் 20 கி.மீ. தொலைவில் உள்ள ஏந்தல் கூட்டு சாலையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் மடம் என்ற ஊர் உள்ளது. வந்தவாசியிலிருந்து மடம் செல்லலாம்.
936 : _ _ |a காலை 6.00 -12.30முதல் மாலை 4.30-8.30 வரை
937 : _ _ |a ஒலக்கூர், தெள்ளார், வந்தவாசி, உத்திரமேரூர்
938 : _ _ |a ஒலக்கூர், திண்டிவனம், தொழுப்பேடு
939 : _ _ |a சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a திருவண்ணாமலை, வந்தவாசி விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000050
barcode : TVA_TEM_000050
book category : சைவம்
cover images TVA_TEM_000050/TVA_TEM_000050_தடாகபுரீஸ்வரர்-கோயில்_கோயில்-வளாகம்-0007.jpg :
Primary File :

TVA_TEM_000050/TVA_TEM_000050_தடாகபுரீஸ்வரர்-கோயில்_நுழைவாயில்-0001.jpg

TVA_TEM_000050/TVA_TEM_000050_தடாகபுரீஸ்வரர்-கோயில்_கோபுரம்-0002.jpg

TVA_TEM_000050/TVA_TEM_000050_தடாகபுரீஸ்வரர்-கோயில்_திருமதில்-0003.jpg

TVA_TEM_000050/TVA_TEM_000050_தடாகபுரீஸ்வரர்-கோயில்_கருவறை-விமானம்-0004.jpg

TVA_TEM_000050/TVA_TEM_000050_தடாகபுரீஸ்வரர்-கோயில்_அம்மன்-திருமுன்-0005.jpg

TVA_TEM_000050/TVA_TEM_000050_தடாகபுரீஸ்வரர்-கோயில்_விமானம்-சுவர்-0006.jpg

TVA_TEM_000050/TVA_TEM_000050_தடாகபுரீஸ்வரர்-கோயில்_கோயில்-வளாகம்-0007.jpg