MARC காட்சி

Back
சொக்கீஸ்வரர் கோயில்
245 : _ _ |a சொக்கீஸ்வரர் கோயில் -
246 : _ _ |a ஸ்ரீகௌசிகேஸ்வரர் திருக்கோயில்
520 : _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எளிய அமைப்புடைய காஞ்சிபுரம் சொக்கீஸ்வரர் கோயில் முற்காலச் சோழர் கலைப்பாணியாகும். ஒரு தள விமானத்தைக் கொண்டுள்ளது. விமானம் வட்டவடிவமுள்ளது. விமானத்தின் தலைப்பகுதியில் நான்கு மூலைகளிலும் நந்தி சிலைகள் அமைந்துள்ளன. தாங்குதளத்தில் உபானம், ஜகதி, குமுதம், கம்பு, பட்டிகை போன்ற தாங்குதள உறுப்புகள் நன்கு அமைக்கப்பட்டுள்ளன. தெற்க்கிருந்த நக்கர் கோயில் என்று அழைக்கப்படும் இக்கோயிலில் சோழர்கால கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அரைத்தூண்கள் அமைந்துள்ள கருவறை விமானத்தின் சுவர்ப்பகுதியில் அமைந்துள்ள தேவகோட்டத்தில் சோழர்கால சிற்பங்கள் உள்ளன. தெற்க்கிருந்த நக்கர் கோயில் என்று இக்கோயில் கூறப்படுவதிலிருந்து இக்கோயிலின் தென்புறத்தில் பிச்சையேற்கும் பெருமானின் (பிட்சாடனர்) சிற்பம் அமைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. முற்காலச் சோழர் கோயில்களில் தென்புறத்தில் பிச்சையேற்கும் பெருமானை வைப்பது வழக்கமாகும். பல முற்காலச் சோழர் கற்றளிகளில் இச்சிற்பத்தைக் காணலாம்.
653 : _ _ |a சொக்கீஸ்வரர் கோயில், சொக்கீசர் கோயில், காஞ்சிபுரம் சொக்கீஸ்வரர் கோயில், கௌசிகம், ஸ்ரீகௌசிகேஸ்வரர் கோயில், உத்தமசோழன் கோயில், காஞ்சிபுரம் சிவன் கோயில்கள், முற்காலச் சோழர் கோயில்கள், முற்காலச் சோழர் கலைப்பாணி, தெற்கிருந்த நக்கர் கோயில்
710 : _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
905 : _ _ |a கி.பி.9-10ஆம் நூற்றாண்டு / உத்தம சோழன்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1100 ஆண்டுகள் பழமையானது. முற்காலச் சோழர் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது.
914 : _ _ |a 12.83900034
915 : _ _ |a 79.68976021
916 : _ _ |a சொக்கீஸ்வரர்
918 : _ _ |a ஸ்ரீகாமாட்சியம்மன்
927 : _ _ |a சொக்கீஸ்வரர் திருக்கோயில் சோழமன்னன் கண்டராதித்தன் மகனும் செம்பியன் மாதேவி திருவயிற்றில் உதித்தவனுமாகிய உத்தமசோழனால் கி.பி.985-இல் எடுப்பிக்கப்பட்டது என்று இங்குள்ள கல்வெட்டு கூறுகிறது. இக்கோயிலை “தெற்க்கிருந்த நக்கர் கோயில்“ என்று கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது. நக்கர் என்பது சிவபெருமானின் பிட்சாடனர் கோலத்தைக் குறிப்பதாகும்.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கருவறையில் இலிங்கம் காணப்படுகின்றது. சோழர்காலச் சிற்பங்களாக தென் அர்த்தமண்டபக் கோட்டத்தில் கணபதியும், தென் தேவகோட்டத்தில் ஆலமர்ச்செல்வனும் அமைந்துள்ளனர். இக்கோயில் கருவறை விமானத்தின் தலைப்பகுதியின் (சிகரம்) கீழே வேதிப்பட்டை என்னும் பூமிதேச உறுப்பில் உள்ள நந்தியின் கற்சிலைகள் மிகவும் எழில் வாய்ந்தவை.
930 : _ _ |a புராணக் காலத்தில் கௌசிகன் என்னும் முனிவன் வழிபட்டதால் இக்கோயில் “கௌசிகம்“ எனவும், இங்கு வீற்றிருக்கும் இறைவன் “கௌசிகேஸ்வரர்“ எனவும் அழைக்கப்படுவதாக தலபுராணம் கூறுகிறது.
932 : _ _ |a காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. இது சோழர் காலத்துக் கற்றளியாகும். இக்கோயில் தாங்குதளத்திலிருந்து உச்சிவரையில் கருங்கல்லால் கட்டப்பட்ட ஒற்றைத் தள கற்றளியாகும். விமானத்தின் உச்சி தலைப்பகுதி வட்டவடிவில் அமைந்துள்ளது. எனவே வேசரபாணியாகும். இக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டு எளிமையாக எடுக்கப்பட்டுள்ளது. உத்தமசோழன் காலத்துக் கலைப்பாணிக்கு இக்கோயில் சிறந்த சான்றாகத் திகழ்கிறது.
933 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a காமாட்சியம்மன் திருக்கோயில், ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், கைலாசநாதர் கோயில், ஜுரஹரேஸ்வரர் கோயில்
935 : _ _ |a சென்னையிலிருந் 75 கி.மீ. தொலைவில் உள்ள காஞ்சிபுரத்தில் சிவக்காஞ்சியில் காமாட்சி அம்மன் கோயிலுக்கு அருகே இக்கோயில் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
937 : _ _ |a காஞ்சிபுரம்
938 : _ _ |a செங்கல்பட்டு, திருமால்புரம்
939 : _ _ |a சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a காஞ்சிபுரம் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000043
barcode : TVA_TEM_000043
book category : சைவம்
cover images TVA_TEM_000043/TVA_TEM_000043_சொக்கீஸ்வரர்-கோயில்_தோற்றம்-0001.jpg :
Primary File :

TVA_TEM_000043/TVA_TEM_000043_சொக்கீஸ்வரர்-கோயில்_தோற்றம்-0001.jpg

TVA_TEM_000043/TVA_TEM_000043_சொக்கீஸ்வரர்-கோயில்_தாங்குதளம்-0002.jpg

TVA_TEM_000043/TVA_TEM_000043_சொக்கீஸ்வரர்-கோயில்_நுழைவாயில்-0003.jpg

TVA_TEM_000043/TVA_TEM_000043_சொக்கீஸ்வரர்-கோயில்_தேவகோட்டம்-0004.jpg

TVA_TEM_000043/TVA_TEM_000043_சொக்கீஸ்வரர்-கோயில்_சுவர்-0005.jpg

TVA_TEM_000043/TVA_TEM_000043_சொக்கீஸ்வரர்-கோயில்_கூரை-விமானம்-0006.jpg

TVA_TEM_000043/TVA_TEM_000043_சொக்கீஸ்வரர்-கோயில்_கோயில்-வளாகம்-0007.jpg

TVA_TEM_000043/TVA_TEM_000043_சொக்கீஸ்வரர்-கோயில்_தகவல்-பலகை-0008.jpg

TVA_TEM_000043/TVA_TEM_000043_சொக்கீஸ்வரர்-கோயில்_பலகை-0009.jpg